பெரும் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்டிக்கு சர்வதேச நாடுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டன் தனது அறக்கட்டளை சார்பில் ஹெய்டியில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷுடன், பில் கிளின்டன் சில தினங்களுக்கு முன்பு ஹெய்டியின் தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸ் நகருக்கு வந்திருந்தார். பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு சென்று ஆறுதல் கூறுவதற்காக இரண்டு மாஜி அதிபர்களும் சென்றனர்.
அப்போது அங்கு கூடிய மக்களிடம் இருவரும் கை குலுக்கி சமாதானமும், ஆறுதல் வார்த்தைகளும், உற்சாகமும் தெரிவித்துக் கொண்டிருந்தனர். பில் கிளின்டன் மிக உற்சாகமாகவும், புன் சிரிப்புடனும் மக்களிடம் தொட்டுப் பேசி, சகஜமாக உரையாடிக் கொண்டிருந்தார்.
அவருக்கு பின்னாலேயே வந்து கொண்டிருந்த ஜோர்ஜ் புஷ், பாதிக்கப்பட்ட நபர் ஒருவரின் வியர்வை படிந்த கைகளை குலுக்கி விட்டு, யாரும் கவனிக்காத வகையில் கிளின்டனின் தோள் பகுதி சட்டையில் கையை துடைத்துக் கொண்டார்.
பிபிசி செய்தி தொகுப்பு ஒன்றின் வீடியோவில் இந்த காட்சிகள் பதிவாகியிருந்தன. இதன் மூலம் ஜோர்ஜ் புஷ் ஹெய்டி மக்களுக்கு செயற்கையாக ஆறுதல் கூறி, பாமர மக்களை அவமானப் படுத்திவிட்டார் என்று ஒரு தரப்பினர் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், புஷ்ஷும் கிளிண்டனும் மிகவும் நெருங்கிப் பழகக்கூடியவர்கள். கிளிண்டனுக்கு அறக்கட்டளை பணி காரணமாக ஹெய்டியில் மிகுந்த நேரத்தை செலவிட முடியும். ஆனால் எப்போதும் பிஸியாகவே இருக்கும் புஷ்ஷுக்கு நேரமாகி விட்டதால் சீக்கரம் போகலாம் என கிளிண்டனை அவர் நெட்டித் தள்ளியது, கை துடைத்தது போல தோன்றுகிறது என்றும் சிலர் கூறுகின்றனர்.
ஆகவே கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சியை நீங்களே பார்த்து ஒரு முடிவிற்கு வாருங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக