மல்லிகைப்பூ விற்கவும், கருவாடு விற்கவும் தான் விளம்பரம் தேவையில்லை; ஆனால் கடவுள் வியாபாரம் செய்யக் கண்டிப்பாய் விளம்பரம் வேண்டும்.விளம்பரமில்லாமல் எந்தக் கடவுளாலும் வாழ முடியாது. இது ஆண்டாண்டு கால உண்மை. தேர், திருவிழா, பூஜை, புன°காரம், விரதம், நேர்த்திக் கடன், வேண்டுதல், படையல் இவையெல்லாம் இல்லாமல் எந்தக் கடவுளாவது உண்டா? இதையெல்லாம் விட கூட்டம் சேர்க்க கூடுதலாக அற்புதம் புரிந்ததாகக் கதைகள் பரப்பப் படும். அப்படி அய்யப்பனுக்காகப் பரப்பப்பட்ட புளுகுதான் மகரஜோதி.
பழனி மலையாண்டிக்கு தைப்பூசம் மட்டும் தான் வசூல். ஆனால் அய்யப்பன் வணிகர்களான, கேரளக்காரர்கள் ஆண்டுதோறும் மூன்று முறை பக்த சிகாமணிகளை வரவழைத்து கறந்து விட ஒரு ‘டெக்னிக்’ வைத்திருக்கிறார்கள். கார்த்திகை தொடக்கத்தில் நடைதிறப்பின் போது ஒரு முறை; மகர ஜோதி தரிசனம் என்று ஒரு முறை; ‘விஷீ’ என்று கூறி ஒருமுறை; இப்படி 3 தடவை வசூல் நடக்கிறது.
சபரிமலையில் பொன்னம்பலமேடு என்னும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் தானாகத் தோன்றும் ஜோதிதான், மகர ஜோதி என்னும் மகா அற்புதம் என ஒவ்வொரு ஆண்டும் ஒரு பித்தலாட் டம் நிகழ்த்தப்படுகிறது.முதலில் ஓர் இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் ஒன்று தானாகத் தோன்ற முடியாது; அதற்கு வாய்ப்பே இல்லை. அப்படித் தோன்றுகிறதென்றால் அது நிச்சயம் மனித வேலையாகத் தான் இருக்கமுடியும். இதைக் கண்டுபிடிக்க கேரளப் பகுத்தறிவாளர் கள் முயன்று. அம்பலப்படுத்தினார்கள்.
“1925-க்கு முன்பாக பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு எனும் தெய்வீக ஒளி காட்சியளிப்பதாக வயதான பெரியவர்கள் யாரும் சொன்னதில்லை. 1940க்குப் பிறகே இந்தக் கதை பரவியது” என்கிறார் ஜோசப் எடமருகு. இவர் கேரளாவைச் சேர்ந்த இந்தியப் பகுத்தறி வாளர் சங்கத் தலைவர். பொன்னம்பல மேடு யாரும் ஏற முடியாத மலை என்று கூறுவது தொலைவிலிருந்து பார்ப்பவர்களால் நம்பக் கூடியது. ஆனால் பனி படர்ந்த அண்டார்ட்டிகாவிலும், இமயத்திலுமே மனிதன் சென்று விட்ட பிறகு இந்த மலையெல்லாம் மிகச் சாதாரணம் என்கிறார்கள் மலையேறும் மனிதர்கள். துளியும் பகுத்தறியாது எதையும் பக்திக் கண் கொண்டு மட்டுமே பார்க்கும் சபரிமலை சா°தாவின் ரசிகர்களால் இந்த மலையேற்றப் பயணத்தை உணர முடியாது. அதனால்தான் பொன்னம்பல மேடு கதையும் அவர்களால் நம்பப்படுகிறது.
பொன்னம்பல மேட்டின் மகரஜோதி எப்போது முதன்முதலில் அம்பலப்படுத்தப்பட்டது என்பதை சபரிமலை அய்யப்பன் - உண்மையும் கதைப்பும் என்னும் நூல் எடுத்துக் காட்டுகிறது.“1940-களுக்குப் பிறகு பரப்பப்பட்ட மகர விளக்கின் தெய்வீகக் கதையை முதன்முதலாக உடைத்துக் காட்டியவர் பகுத்தறிவாளர் சங்கத்தின் தீவிர பணியாளரான எம்.ஆர்.எ°. நாதன்தான். அவர் எழுதிய ‘சபரி மலையும் மகர விளக்கும் சூஷணோபாதிகள்’ என்ற நூலை 1974இல் நாங்கள் கோட்டயத்திலிருந்து வெளியிட்டோம். மேட்டில் மலைப்பண்டாரங்கள் வாழ்ந்திருந்தார்கள் என்றும் அவர்கள் தம்முடைய தேவைக்காக மாலை வேளைக்குப் பிறகு ஏற்றுகின்ற நெருப்பே சபரிமலையிலிருந்து பார்க்கும்போது காணப்படுகின்றது என்றும் அக்காலத்தில் எல்லோருக் கும் நன்கு தெரிந்திருந்தது. காடுகளில் அலைந்து திரிந்து காட்டிலுள்ள பொருள்களைச் சேகரித்து வாழ்க்கை நடத்திய இக்கூட்டத்தினர் சபரி மலைக் கோயிலின் சுற்றுப்புறங்களிலும் பற்பல காலங்களில் வாழ்ந்து வந்தனர். பொன்னம்பல மேட்டைத் தவிர மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர்ந்த சமதளப் பகுதியான வரயாட்டுமேடு, அருணமுடி, குருநாதன் மண்ணு முதலிய இடங்களிலும் மேற்கூறிய மலைவாசிகள் கூட்டமாக வாழ்ந்தனர். ஆடை அணிதலிலும் பேச்சிலும் தமிழ் முறைகளுடனேயே இவர்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்.
அன்றெல்லாம் சபரிமலைக் கோயிலில் விழா நடை பெறும்போது மட்டும் பொன்னம்பல மேட்டில் ஒளி காணப்படவில்லை. சிறிதும் பெரியதுமான ஒன்றுக்கும் மேற்பட்ட தீப்பிழம்புகள் இரவின் பெரும்பாலான யாமங்களிலும் தெளிவாகவும் மங்கலாகவும் மேட்டில் காணப்பட்டது. பொன்னம்பல மேட்டில் மண்ணோடு மண்ணாகி விட்ட பண்டைக்கால கோயிலைப் பற்றிய விவரங்கள் மலைவாசிகளிடமிருந்து கிடைத்ததும் சா°தா வுக்கு மேட்டுடன் தொடர்பு உண்டென்று கதை புனையப்பட்டது. இந்தப் பொய்ப் பிரசாரத்துக்கு விளம்பரம் கிடைக்கத் தொடங்கியதும் கோயிலுக்காக சிலர் மேட்டிலுள்ள தீபத்தை உருவாக்கினர். மலைவாசிகளை மனமறிய நீக்கி நிறுத்திக் கொண்டு ஒரு பிரச்சார தந்திரம் என்ற முறையில் சில செல்வாக்குப் படைத்தவர்கள் தீபக் காட்சியினை ஏற்பாடு செய்தனர். மகர விளக்கு நாளில் மாலை நேரத் தில் (தீபாராதனை சமயம்) மட்டும் ஒரு தீப்பிழம்பினை ஏற்றுவது என்ற திட்டம் உருவானது. அதன் ‘தெய்வீக’மான அங்கீகாரத்திற்கு சபரிமலையில் பிரச்சார வேலையும் நடத்தினர். எனினும் மகர விளக்கு தவிர்த்த நாட்களிலும் மேட்டில் இரவு நேரங்களில் தீப் பிழம்புகள் காணப்பட்டன. சபரிமலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்கள் தங்கியுள்ள வயதான பக்தர்கள் இந்த உண்மையை ஒப்புக் கொள்கின்றனர்.
பொன்னம்பல மேட்டைச் சுற்றியுள்ள வனப்பிர தேசங்களையும் நிலைக்கல், ஆங்கு மூழி, சீதத்தோடு முதலிய கிழக்குப் பகுதியிலுள்ள காடுகளை அழித்தாலும் பொன்னம்பல மேட்டில் அடிக்கடி அன்னியர்கள் வருவதாலும் காலப்போக்கில் மலைப் பண்டாரங்கள் மேட்டிலிருந்து வெளியேறி விட்டனர். இதைப் பற்றிய கூடுதல் விவரங்கள் சந்தர்ப்பத்துக்கேற்றபடி திரித்து எழுதப் பட்டன. சுருக்கமாகச் சொன்னால் பழைய ‘மகர விளக்கு’, ‘மகர ஜோதி’ என்ற புதிய சிறப்புக்குக் காரணமானது. ‘பொன்னம்பல மேடு ஒருபோதும் செல்லமுடியாத இடமாக இருந்ததில்லை என்பது கவனிக்க வேண்டிய உண்மை. சபரிமலைக் கோயிலுக்கு வடகிழக்கேயுள்ள உப்புப்பாறை, படிஞ்ஞாறு பாறை (மேற்கு பாறை) ஆகிய மலைகளைக் கடந்து பச்சைக் கானத்தின் உள்ளேயுள்ள பாதையில் சிறிது தூரம் சென்ற பிறகு மேற்கு நோக்கி திரும்பினால் மேட்டை அடையலாம். இந்த ரகசிய பாதை வழியாக மேட்டுக்குச் சென்றுதான் தீபத்தை ஏற்றுவோர் முற்காலங்களில் தீப காட்சியைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தனர். சபரி மலையிலிருந்து மேட்டுக்கு நேராக பயணம் செய்து மேட்டை அடைவது பெரும் சிரமம். சபரிமலைக்கு நேராகவுள்ள மேட்டின் பகுதி அவ்வளவுக்குச் செங்குத்தாக உள்ளது. அடர்ந்து வளர்ந்த காட்டு மரங்களுக்கிடையே பயணம் செய்ய இயலுமென்றாலும், மேற்கூறிய காரணத்தால் இந்த வழியாக மேட்டை அடைவது சிரமம்தான். படிஞ்ஞாறு பாறை வழி யாகச் செல்லும் பயண தூரம் அதிக மென்றாலும் சிரமமின்றி மேட்டை அடைய முடியும்.“பதினெட்டாம்படி ஏறிச் செல்கின்ற திருவாபரணப் பெட்டியை மேல் சாந்தி (தலைமை பூசாரி) வாங்கி கோயிலிலுள்ள சிலைக்கு நகைகளை அணிந்த பிறகு தீபாராதனைக்காக நடை திறக்கும் பொழுது 21 சர வெடி முழங்கும். இந்தச் சரவெடியின் ஓசை மேட்டில் கேட்டவுடன் அங்கே இருப்பவர்கள் ஜோதியை ஏற்றுவார் கள். இதுதான் நடைமுறை வழக்கம். ஆனால், தொடர்ந்து செய்யும் வெடி வழிபாடுகளின் ஓசை காரணமாக பல ஆண்டுகளிலும் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியாமலும் போனதுண்டு. திருவாபரணப் பெட்டி பதினெட்டாம்படியில் ஏறுவதற்கு முன்பாக மேட்டில் தீபம் உயர்ந்தது சில ஆண்டுகளில் விவாதப் பொரு ளாகவும் ஆனது.”-இப்படித்தான் மகரஜோதியைப் பரப்பியிருக்கிறார்கள்.கேரளப் பகுத்தறிவாளர்கள் மகர ஜோதி தீபக் காட்சியை அரங்கேற்று வதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என தொடர்ந்து முயன்று வந்துள்ளனர்.
எம்.ஆர்.எ°. நாதன் சொல்கிறார்: 1973 ஜனவரி 13ஆம் தேதி பத்தனம்திட்டையிலிருந்து வாங் கிய சில வெடிப் பொருள்களுடன் கொல்லம் - கக்கீ (பம்பை) ஃபா°ட் பாசஞ்சரில் பம்பை அணைக்குப் பயணமானேன். அன்று என் துறை யைச் (Kerala State Electricity Board) சேர்ந்த நண்பர்களுடன் பம்பையில் தங்கினேன். மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு சில நண்பர்களுடன் பொன் னம்பல மேட்டுக்குப் பயணமானேன். பம்பை - வண்டிப் பெரியார் பாதை யில் 2 கி.மீ. சென்று கொச்சு பம்பையை அடைந்தோம்; கொச்சு பம்பையிலி ருந்து கிழக்கு நோக்கி மின்வாரியம் அமைத்த ஜீப் பாதை வழியாக 4 கி.மீ. பயணம் செய்து மேட்டுக்கு அருகில் சென்றடைந்தோம். ஜீப் பாதை முடிவடைகின்ற பகுதி ஏ-பாய்ண்ட் (A Apoint) என்றழைக்கப்படுகின்றது. ஜீப் பாதையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மலைமீது ஏறி மேட்டின்மீது மாலை 4.40 மணிக்கு சென்று சேர்ந்தோம். மின் வாரிய ஊழியர் களையும் வனக் காவலரையும் தவிர, திரு. கடக்கல் ராகவன் பிள்ளையின் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட ‘பரம பக்தர்களும்’ மேட்டில் இருந்தனர். வெடிப் பொருள்களையும் எண்ணெய் பந்தங்களையும் அவர்களும் தேவையான அளவுக்குக் கொண்டு வந்தனர். “பொன்னம்பல மேட்டை சுற்றிப் பார்த்த பிறகு நாங்கள் அனைவரும் பாறைக்கு அருகே குழுமினோம். எங்களுக்கு அறிமுகமில்லாத பலரும் அங்கே இருந்தனர். சபரிமலையிலுள்ள பக்தர்களுடைய சரண கோஷம் இரைச்சல் போல காதில் வந்து மோதியது. நாங்கள் தொலை நோக்கியைப் பயன்படுத்தி சபரி மலைக்கோயில் வளாகத்தைக் கவனித்தோம். கோயில் வளாகம் படிப்படியாக புகை வளையங்களால் மூடப்பட்டது. சபரிமலையிலுள்ள வெடிகளின் ஓசை எப்பொழுதும் கேட்டுக் கொண்டேயிருந்தது. கடைக்கல் குழுவினர் ஒலி பெருக்கியின் வழியாக பக்திப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். பாறைகளுக்கிடையே வேலிபோல நிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் பந்தங்களுக்கு தீ கொளுத்தப்பட்டது.
கம்பக் கட்டு வெடிக்கான பொருள்களனைத்தும் தயாராக்கப்பட்டன. அ°தமன சூரியனின் செங்கதிர் களால் சூழப்பட்டிருந்த பொன்னம்பல மேடு படிப் படியாக இருளில் ஆழ்ந்தது. எண்ணெய் பந்தங்கள் தெளிவாக ஒளிர்ந்தன. பெரிய பந்தங்கள் சுடர்விட்டு எரிந்தன. அகில இந்திய வானொலி நிலையத் தோழர் நேர்முக வருணனையில் கூறியது ஏறத்தாழ பின்வருமாறு அமைந்திருந்தது: ‘பொன்னம்பல மேட்டில் இதோ மகர ஜோதி தோன்றியிருக்கின்றது. எவ்வளவு அற்புதகரமான காட்சி. பக்தர்கள் எல்லாவற்றையும் மறந்து அய்யப்பனின் புகழைப் பாடுகின்றனர்; சரண கோஷமிடுகின் றனர். பொன்னம்பல மேட்டில் ஒரு தீபம் அல்ல, ஒன்றுக்கும் அதிகமான தீபங்கள் இப்பொழுது காட்சி யளிக்கின்றன. தீபங்களுடைய ஒரு வரிசையே இப் பொழுது காணப்படுகின்றது. அது ஓர் ஒளிவட்டம் தான்; வருணனைக்கு அப்பாற்பட்ட ஒளிவட்டம்; பல ஆண்டுகளாக பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கின்ற தெய்வீக ஒளி!’
“அய்யப்ப பக்தர்களுடைய சரண ஒலியின் ஆரவாரம் ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்தச் சமயத்தில் எங்களுக்கு அறிமுகமில்லாத ஒருவர் ஒரு எவர்சில்வர் தட்டு நிறைய கற்பூரத்துடன் முன்னோக்கி வந்து கற்பூரத் துக்கு தீ கொளுத்தினார். அவருடைய வசதிக்காக நாங்கள் விலகி நிற்க வேண்டும் என்ற உத்தரவும் வந்தது. ஒளியினால் பந்தத்தை மங்கச் செய்த இந்த தீபம், சபரிமலையில் மிகவும் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். அதற்கேற்ற வருணனையும் கூச்சலும் வானொலியில் கேட்டன. ஜோதி ஓர் ஏமாற்று வேலையே என்பதை பக்தர்களுக்கு அறிவிக்க தகுந்த தருணம் அதுதான் என்று நாங் கள் முடிவெடுத்தோம். கம்பக் கட்டுகளை அகற்றுவதற்காக வந்தவர்களைத் தந்திரமாக தடுத்தபடி கம்பக் கட்டுக்கு தீ கொளுத்த உத்தரவிட்டோம். வாணங்கள் வானில் சீறிப் பாய்ந் தன. ஜோதி வானில் உயர்வதாக வும் அது வானில் பல நிறங்களை அடைவதாகவும் வானொலியில் கேட்டது. பிறகு அறிவிப்பாளர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. நாங்கள் குலுங்கி குலுங்கி சிரித்தோம். அதைத் தொடர்ந்து மேட்டையே நடுங்க வைத்த ஒரு பெரிய கம்பக் கட்டி வெடி வெடித்தது. தீ விபத்து உண்டா காமல் இருப்பதற்காக வனக் காவலர்கள் அங்கெல்லாம் ஓடி நடந்து தீயை அணைத்தனர். மகர ஜோதியை முறியடிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்மையில் கடைக்கல் குழுவினரிடம் இல்லை. ஒரு சாகசப் பயணம் என்ற முறையில் மேட்டை அடைந்த அவர்கள் விரத நியதிகளோடு வந்த அய்யப்ப பக்தர்கள்தான். அவர்கள் தங்களுடைய பயணத்தின் குறிக்கோளை முதலிலேயே வெளிப் படுத்தவும் செய்தனர். எங்களுடைய ஆர்வத்துக்கு அனுமதியளித்து தீப காட்சியை அலங்கோலப்படுத்துவதில் அவர்களும் பங்கேற்க நேர்ந்துவிட்டது. மகர ஜோதி இவ்வளவு காலமும் ஒரு மோசடி வேலை தான் என்று தோன்றியதால் தான் அகில இந்திய வானொலி நிலைய வருணனயாளர் ஒலிபெருக்கிக் கருவியை நண்பரிடம் கொடுத்துவிட்டு விலகியிருக்க வேண்டும். புதிய வருண னையாளர் ஒரு சாட்சியைப் போல் நின்று ஏதேதோ வார்த்தைகளை உதிர்த்தாரே தவிர ஜோதியைப் பற்றியோ மேட்டைப் பற்றியோ ஒரு வார்த்தை பேச வில்லை.
மூடநம்பிக்கையாளர்களுடைய சரண கோஷம் நின்றுவிட்டதால் அவர்கள் ‘மனக் குழப்ப’மடைந் திருப்பதாக நாங்கள் புரிந்து கொண்டோம். இதை எழுதுபவரின் லட்சியமும் அதுவாகத்தான் இருந் தது. வனக் காவலர்கள் பரி மாறிய சர்க்கரைப் பொங்கலை உண்டபிறகு நாங்கள் மேட்டிலிருந்து இறங்கி பம்பைக்குச் சென்றோம்.”(எம்.ஆர்.எ°. நாதன்,‘சபரிமலையும் மகரவிளக்கும் சூஷணோபாதிகள்’ பக். 8-20)கேரள பகுத்தறிவாளர்கள் மகரஜோதி மடமையைத் தோலுரித்த போதும் அய்யப்ப சேவா சங்கமும் தேவ°வம் போர்டும் பொய்ப் பிரச்சாரங்களைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
1983-ல் ஒரு முறை 150-க்கும் அதிகமான பகுத்தறிவாளர்கள் பொன்னம்பல மேட்டிற்குச் சென்றனர். அப்போது அவர்களை காவல் துறையின் கடுமை யாகத் தாக்கினார்கள். பின்னர் காவல் துறையினர் உதவியுடன் மகர ஜோதி ஏற்றப்பட்டது என்கிறார் ‘ரணரேகை’ பகுத்தறிவு மாத இதழ் ஆசிரியர். கல்லி யூர் பிரசன்னராஜ். இவர் தனது இதழில் மகர ஜோதியை அம்பலப்படுத்துவதற்காக பொன்னம்பல மேடு சென்று வந்த விவரங்களை விரிவாக எழுதியிருக்கிறார்.
சிறு சிறு குழுக்களாகச் சென்ற பகுத்தறிவாளர்கள் காவல் துறையினரின் கட்டுப்பாடுகளை மீறி பொன் னம்பல மேட்டை நோக்கி நடந்தனர்.“சபரிமலைக்கு நேராக பொன்னம்பல மேட்டில் சற்று விலகி நிற்கின்ற ஒரு பாறையின் மீதுதான் எல்லா ஆண்டும் மகர ஜோதியை ஏற்றிக் காட்டுவார்கள் என்பதை அறிந்திருப்பீர்களல்லவா? கடந்த சில ஆண்டுகளாக மின்வாரியத்தில் ஓட்டுநராகப் பணி யாற்றும் கோபி என்பவர்தான் ஜோதியை ஏற்றினார். ஆனால், கடந்த ஆண்டு கோபி வரவில்லை; இன்னொருவர் தான் ஏற்றினார். இந்த ஆண்டு கோபி தான் ஏற்றினார். மகரஜோதியை ஏற்ற வேண்டிய நேரமானதும் எங்கள் பக்கத்தில் சில காவலர்கள் மட்டுமே நின்றனர்; மற்றவர்கள் ஜோதியை ஏற்ற வேண்டிய பகுதிக்குச் சென்றனர். 150-க்கும் மேற்பட்ட பகுத்தறி வாளர்களைத் தவிர பம்பை - கொச்சு பம்பை வாசி களும் காவல் துறையினரும் உள்பட 250 பேர் அங்கே இருந்தனர். வழக்கத்துக்கு மாறாக இந்த முறை பெண்களாக அங்கேயிருந்தவர்கள் வண்டிப் பெரியாரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் மனைவியும் மகளும்தான்.
“ஜோதியை ஏற்ற வேண்டிய நேரமானதும் சபரிமலையிலிருந்து சிக்னல் விளக்கு மேட்டினை நோக்கி மின்னியது. அப்பொழுது முதலிலேயே தயா ராக வைக்கப்பட்டிருந்த கற்பூரத்தைக் கொளுத்தி உயர்த் திக் காட்டி விட்டு தாழ்த்தினர். உடனே வானொலியிலி ருந்து பின்வருமாறு வருணனை கேட்டது: ‘இதோ மகரஜோதி காணப்படுகின்றது; அந்த மகரஜோதி மத்தாப்புப் போல உயர்ந்தபின் தாழ்ந்துவிட்டது’.
“இரண்டாவதாகவும் கற்பூரத்தைக் கொளுத்தி உயர்த்தியபோதிலும் அது உடனே அணைந்து விட்டதால் வருணனையில் எதுவும் சொல்லாமல் இருந்திருக்க வேண்டும். மூன்றாவது முறையாக கற் பூரத்தை உயர்த்திய பொழுதுதான் மீண்டும் வருண னையில் ‘அதோ ஜோதி மீண்டும் உயருகின்றது; மக்க ளனைவரும் கைகூப்பி வணங்குகின்றனர்’ என்று கேட்டது.‘அவ்வாறு மூன்று முறை மகர ஜோதியைக் கொளுத் திக் காட்டிய பின்பு இந்த ஆண்டிலுள்ள மகர ஜோதி மோசடி முடிவுற்றது. அவர்கள் பொன்னம் பலமேட்டிலிருந்து கீழே இறங்கினர். அவர்கள் அனைவருக்கும் பின்னால் வரிசையாகச் செல்லும் படி எங்களிடம் காவல்துறையினர் சொன்னார்கள். எங்களுக்குப் பின்னால்தான் காவல் துறையினர் வந்தார்கள்’ (மகரஜோதி° தட்டிப்பும் பொன்னம் பல மெட்டிலே போலீ° மர்த்தனமும், பக். 10-20)இவ்வாறு காவல்துறையினரின் உதவியுடன் தான் இப் பொழுது பொன்னம்பல மேட்டில் மகர விளக்கை ஏற்றுகின்றனர். ‘மனித’ பாதச்சுவடு படாத இடத்தில் அற்புதமாக காட்சியளிக்கின்ற மகர விளக்கு’ என்ற கதை முழுமையாக முறியடிக்கப்பட்டுவிட்டது.
1990ஆம் ஆண்டு பகுத்தறிவாளர்களின் உண்மை விளக்கப் பேரணி தொடர்பான பிரச்சினையின் போது, அன்றைய கேரள முதலமைச்சர் ஈ.கே. நாயனார், “தேவ°வம் போர்டுதான் மகரஜோதியை ஏற்றுகின்றது என்பது தெளிவாகத் தெரிந்த விஷயம்தான், பகுத்தறிவாளர்கள் பொன்னம்பல மேட்டிற்குச் செல்லும் பேரணியை ரத்து செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
கடவுளின் பெயரால், ஒரு புரட்டு காலம் காலமாக நடந்து வருகிறது. அதை ஆதாரபூர்வமாக பகுத்தறிவாளர்கள் நிரூபிக்கிறார்கள். இதற்குப் பின்னும் சபரிமலை சா°தாவை நோக் கிச் சென்று தம் பொருளையும், அறிவையும் இழக்கும் பக்தர்களை என்னவென்பது?
Unmaionline
திங்கள், 8 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மக்களை எப்படியெல்லாம் ஏமத்ரன்கப்பா. திருப்பதிலகுட கூட்டமே இல்லனகுட குண்டுக்குள்ள அடச்சி ரொம்ப நேரம் காத்திருக்கவெச்சி குட்டம் இருக்கறமாதிரி எமதிறாங்க
பதிலளிநீக்கு