புதன், 27 ஜனவரி, 2010
உண்மை நிகழ்ச்சி!
ஒரு சமயம் எம்.ஜி.ஆர்., மதுரை காந்தி கலையரங்கத்தில் பேசினார். ஆண்களும் பெண்களும் ஏராளமாகத் திரண்டிருந்தனர். எம்.ஜி.ஆர்., பேசி முடித்ததும் ஆண்கள் பக்கம் திரும்பி, ""நீங்கள் எல்லாரும் அப்படியே இருங்கள். முதலில் தாய்மார்கள் வெளியே செல்லட்டும். அவர்கள் சென்ற பிறகு உங்களுடன் தனியாக சில விஷயங்களைப் பேசப் போகிறேன்,'' என்றார். பெண்கள் கூட்டம் அமைதியாகக் கலைந்து வெளியே சென்றுவிட்டது.
எம்.ஜி.ஆர்., தங்களிடம் என்ன பேசப் பேகிறாரோ என்று மிகவும் ஆவலுடன் ஆண்கள் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது எம்.ஜி.ஆர்., ஆண்கள் கூட்டத்தைப் பார்த்து, ""கூட்டம் முடிந்துவிட்டது. இப்போது நீங்களும் போகலாம்!'' என்றார்.
கூட்ட நெரிசலில் பெண்கள் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது என்பதற்காக எம்.ஜி.ஆர்., செய்த ட்ரிக் இது என்பதைப் புரிந்து கொண்ட ஆண்கள் மகிழ்வுடன் கலைந்து சென்றனர்.
Labels:
எம்.ஜி.ஆர் ஒரு பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)






































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக