செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

என்ன இந்த BIOS?

கணினியை இயங்க ஆரம்பித்ததும் ப்ரோசெஸ்ஸரினால் முதன் முதலில் அணுகப்படும் ஒரு ப்ரோக்ரமே (BIOS) பயோஸ் எனப்படுகிறது. BIOS என்பதன் சுருக்கம் Basic Input / Output System எனபதாகும்.

அதன் மூலம். நினைவகம், ஹாட் டிஸ்க், மற்றும் துணைச் சாதனங்கள் அனைத்தும் முறையாக இயங்குகிறதா என்பதைச் சரி பார்த்து உறுதி செய்து கொள்ளும். பயோஸ் ஆனது கணினியிலுள்ள இயங்கு தளத்திலிருந்து வேறுபட்டது. ஹாட் டிஸ்கில், சேமிக்கப்பட்டிருக்கும். இயங்குதளம் கணினிக்கும் அதனைப் பயன் படுத்துபவர்களுக்குமான ஒரு இடை முகப்பை வழங்கிறது. எனினும் பயோஸ் ப்ரோக்ரமானது கணினி மதர்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் ரொம் (Read Only Memory) எனும் நினைவக (Chip) சிப்பில் சேமிக்கப்பட்டிருக்கும். கணினியை ஓன் செய்ததும் கணினியைக் கட்டுப்படுத்தி பின்னர் ஹாட் டிஸ்கிலுள்ள இயங்கு தளத்தை நினைவகத்தில் ஏற்றி கணினியை ஆரம்பித்து வைக்கிறது பயோஸ். இதனை Firmware எனவும் அழைப்பதுண்டு. ஏனெனில் இதில் நாம் மாற்றங்கள் செய்ய முடியாது. கணினியில் பயோஸிற்கு பல பணிகள் வழங்கப் பட்டிருந்தாலும் இயங்கு தளத்தை ஆரம்பித்து வைபபதே அதன் முக்கிய பணியாகும். கணினியை இயக்கியதும் பயோஸ் மைக்ரோ ப்ரொசஸருக்கு அதன் முதல் அறிவுறுத்தலை வழங்குகிறது. அனைத்து வன்பொருள்களும் முறையாகக இயங்குகிறதா என்பதை சுய பரிசோதானை செய்து கொள்ளும். இதனை Power On Self Test (POST) எனப்படுகிறது ஹாட் டிஸ்க், சீடி ரொம் போன்றவற்றை இனம் காணுதல், நினைவகத்தின் அளவை சோதித்தல், ப்ரோசெஸ்ஸரின் வேகத்தை அளவிடல் கடிகாரம் மற்றும் முக்கிய செட்டிங்க்ஸ் என்பவற்றை நிர்வகித்தல். கிரபிக்ஸ் காட் (Graphics Card) , சவுண்ட் காட் (Sound Card) போன்ற எனைய சாதனங்களில் பொருத்தப் பட்டிருக்கும் இது போனற வேறு பயோஸ் சிப்புகளை ஆரம்பித்து வைத்தல் அவற்றின் ஏனைய பணிகளில் அடங்குகின்றன..

கணினியை இயக்கியதும் ஆரம்பிகும் பயோஸ் ப்ரோக்ரமுடைய வழமையான பணி ஒழுங்கில் CMOS ஐ பரிசோத்திப்பதன் மூலம் பயனர் தெரிவுகளில் ஏதாவது மாற்றங்கள் உள்ளதா என்பதைப் பரிசோதித்தல் மின் வழங்கியை நிவகித்தல் (Power Management), மற்றும் எந்த ட்ரைவிலிரிருந்து இயங்கு தளத்தை ஆரம்பிப்பது (Boot Sequence) என்பதைத் தீர்மானித்தல் போன்ற பல பணிகள் அடங்குகின்றன. தேதி, நேரம் மற்றும் ஏனைய கணினியின் செட்டிங்ஸ் விவரங்களை பேட்டரி மின்சக்கதியில் இயங்கும் ஒரு நினைவக சிப்பில் சேமிக்கிறது. இதனை (CMOS) சிமோஸ் எனப்படுகிறது. BIOS (Basic Input/Output System) என்பதும் CMOS (Complementary Metal Oxide Semiconductor) என்பதும் ஒன்றையே குறிப்பதாகப் பலரும் தவறாகக் எண்ணுகின்றன்ர். இவற்றிற்கிடையே தொடர்புகளிருந்தாலும் இரண்டும் வேறு பட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. . பயோஸ் என்பது கணினியை இயக்கும் அதேவேளை தேதி, நேரம் மற்றும் செட்டிங்ஸ் விவரங்களை பயோஸ் சேமித்து வைக்குமிடமே சிமோஸ் எனும் சிப்பாகும். சீமோஸ் என்பது ஒரு வகை நினைவகம்,.

சீமோஸில் மாற்றங்கள் செய்ய கணினியை ஓன் (On) செய்தவுடனேயே கீபோர்ர்டில் குறித்தத ஒரு விசையை அழுத்த வேண்டும். இதற்கான அறிவுறுத்தல் கணினியை ஆரம்பித்த்துமே திரையின் கீழ் எந்த விசையை அழுத்த வேண்டும் என்பதைக் காண்பிக்கும். சீமோஸ் செட்டபில் நுளைந்த்துமே CMOS கணினிப் பயனருக்குப் பல தெரிவுகளைச் செய்ய அனுமதிக்கிறது. தேதி மற்றும் நேரத்தை மாற்றியமைப்பது, கணினியை எந்த ட்ரைவிலிருந்து இயக்கி இயங்கு தளத்தை ஆரம்பிப்பது பூட் செய்யப்படும் ஒழுங்கு (Boot Sequence) , பாஸ்வர்ட் செட்டிங், நினைவக செட்டிங். மின் வழங்கியை நிர்வகித்தல் போன்ற பல செட்டிங்ஸை மாற்ற்ரியமைக்கக் கூடிய வசதியைத் தருகிறது.பயோஸ் ப்ரோக்ரமை காலத்துக்குக் காலம் புதுப்பிக்கவும் (update) முடியும். புதிதாகத் தர்யாரிக்கப்பட்ட ஏதாவது வன்பொருள் சாதனங்களைக் கணினி இனம் காண வேண்டுமானால் அந்த பயோஸை வடிவமைத்த நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து அதன புதிய பதிப்பை டவுன் லோட் செய்து கொள்ள வேண்டும். பயோஸை அப்டேட் செய்வதற்குரிய யூட்டிலிட்டியும் அதனுடன் இணைந்து வரும். யூட்டிலிட்டி ப்ரோக்ரமையும் அப்டேட் பைல்களையும் ஒரு ப்லொப்பி டிஸ்கில் பிரதி செய்து ப்லொப்பியை கணினியில் நுளைத்து இயக்க பழைய பயோஸ் பைல்களை அழித்து புதிதாக நிறுவிக் கொள்ளலாம். . எனினும் பயோஸ் அப்டேட் செய்வதில் கூடிய கவனம் தேவை. தற்போது கணினிகளில் பயோஸை அப்டேட் செய்ய வேண்டிய தேவை அரிதாகவே ஏற்படுகிறது. எனினும் பழைய கணினிகளிலுள்ள பயோஸ் சிப் தற்போது பாவனையிளுள்ள வன்பொருள் சாதனங்களை ஆதரிக்காது. 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் வந்த கணினிகளில் பயோஸ் ஆனது அதன் ரொம் சிப்பை மாற்றுவதன் முலமே அப்டேட் செய்யப்பட்டது. எனினும் தற்போது EEPROM (Electrically Erasable Programmable Read-Only Memory எனும் நினைவக சிப்பிலேயே சேமிக்க்கப்படுவதால ரொம் சிபை மாற்றாமலேயே தேவையேற்படின் பயோசை அப்டேட் செய்து கொள்ள லாம்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல