ஆண்கள் அறிந்து கொள்ளவேண்டியது.
பாலினத்தின் முதன்மையான உறுப்புகள் ஆண் உறுப்பு, பிட்யூட்டரி சுரப்பி, மத்திய நரம்பு மண்டலம் ஆகும். இவைகள் நல்லமுறையில் இயங்க டெஸ்டோஸ்டீரான் என்ற ஹேhர்மோன் முதன்மை இடத்தை பெறுகிறது. பெண்ணின் உடலை தழுவும்போது உணர்ச்சியால் உந்தப்பட்டு ஹார்மோன் அதிக அளவில் இரத்த ஓட்டத்தில் கலப்பதால் ஆண் உறுப்பு விரைப்புத்தன்மை அடைகிறது. உடலில் உஷ்ணம் அதிகரிக்கிறது. சோர்ந்து கிடந்த மத்திய நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு செயல்பட ஆரம்பிக்கிறது. உடலில் இரத்த ஒட்டம் அதிகரிக்கிறது. இதய துடிப்பு அதிகமாகிறது. சாதாரணமாக இருக்கும்போது இதய துடிப்பு 72 ஆனால் பெண்ணை கட்டித் தழுவும்போது இதய துடிப்பின் வேகம் 145 ஆக உயருகிறது. கூடல் முடிந்தவுடன் உடல் பழைய நிலைக்கு வந்து விடுகிறது. அப்போது சிலருக்கு உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.
பெண்கள் அறிந்துகொள்ள வேண்டியது
பெண்களுக்குமிக முக்கியமான பாலின உறுப்புகளானது பெண் உறுப்பு, பெண் லிங்கம்,மார்பு, உதடுகள் ஆகும். ஆண்களுக்கு பாலின உணர்ச்சிகளை தூண்ட டெஸ்டோஸ் டீரான் என்ற ஹார்மோன் எப்படி துணை புரிகிறதோ அதேப்போல் பெண்களுக்கு ஈஸ்ட் ரோஜன் என்ற ஹார்மோன் துணைபுரிகிறது. ஆண் பெண்ணைத்தழுவும் போது பெண்ணின் உடலில் அதிக அளவில் ஈஸ்ட்ரோஜன் சுரந்து உடலின் எல்லா பாகங்களுக்கும் பரவுகிறது. இதனால் பெண் பரவசப்படுகிறாள். மார்பகம் மற்றும் பெண் உறுப்பு சற்று பருத்து காணப்படுகிறது. உடம்பில் ஒருவித சக்தி உருவாகிறது. அப்போது அந்தப்பெண் உச்சநிலை (ORGASAM) அடைகிறாள்.
பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் பாலின உணர்வுகள் அதிகம் இருக்கும். குறிப்பாக கருவகத்திலிருந்து (OVARY) கருமுட்டை வெளியேவரும் (OVULATION) சமயத்தில் பாலின உணர்வுகள் மிகவும் அதிகமாக இருக்கும். பின்னர் அடுத்த 15 நாளில் படிப்படியாக குறைந்துவிடும். ஆகவேதான் குழந்தை வேண்டும் என்று விரும்புகிறவர்கள் மாதவிடாய் தவிர்த்த மற்ற 7 நாட்களில் உடலுறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள்; கூறுகிறார்கள். பெண்களுக்கு 20 முதல் 40 வயதுவரை பாலின உணர்வுகள் (ORGASAMS) அடிக்கடி தோன்றி மறையும். ஆனால் சிலருக்கு வயதான காலத்தில்கூட அதிக உணர்வுகள் ஏற்படலாம்.
பாலின உணர்வுகளின் ஆரம்பம்
பாலின உணர்வுகள் 14 வயதிலேயே ஆரம்பம் ஆகிவிடுகிறது. இந்த உணர்வு முதன்முதலில் மூளையை சென்று அடைகிறது. பின்னர் அந்த உணர்வுகளின் நல்லது, கெட்டதுகளை ஆராய கண் களுக்கு மூளை உத்திரவிடுகிறது. அந்த கண்கள்தான் பாலின உணர்வுகளுக்கு நீதிபதி. ஆண்களுக்கு காம உணர்வு ஏற்பட்டவுடன் ஹார்மோனின் ஆதிக்கத்தால் ஆண் உறுப்பில் உள்ள சிறிய இரத்தக் குழாய்கள் மூலம் இரத்தம் சென்று ஸ்பாஞ்சு போன்ற பகுதிகளில் பாய்ந்து, இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ஆண் உறுப்பு விரைப்புத்தன்மை அடைகிறது.
அதே போல் பெண்களுக்கு காம உணர்வு ஏற்பட்ட உடன், ரத்தமானது பாலின உறுப்புகளுக்கு சென்று ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால், பெண் இன்பத்தின் உச்சக்கட்டத்திற்கு செல்கிறாள் இருவருக்குமே பாலின உணர்வுகளை தூண்டுவது மத்திய மண்டலம் ஆகும்.
ஆண்களை அவசரக்காரன் என்றும் பெண்களை பொறுமைசாலி என்றும் கூறுவது முற்றிலும் உண்மை. உடல் ரிதியாக பார்க்கும்போது ஆணுக்கு 5 பங்கு காமஉணர்வு, பெண்ணுக்கு 20 பங்கு காம உணர்வு என்று கூறப்படுகிறது. ஆண் பெண்ணைப் பார்த்த உடன் தன் இச்சையை தணித்துக் கொள்ள முயல்கிறான். ஆனால் பெண்ணோ தட்டுங்கள் திறக்கப்படும் என்ற பழமொழியை ஒத்து இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணும் கணவன் தன்னிடம் கட்டித்தழுவுதல், முத்தமிடுதல் போன்ற புறவிளையாட்டுகளில் ஈடுபட்டு தன் உணர்வுகளைத் தூண்டிவிட வேண்டும் என்று நினைக்கிறாள். அவ்வாறு செய்து பெண்ணை சந்தோசப்படுத்துவது தான் இயற்கை, அவ்வாறு செய்யும்போது கணவன், மனைவி இருவரின் உள்ளங்களும் பூரிப்படைகிறது.
மகிழ்ச்சியான தாம்பத்திய உறவானது மனிதர்களுக்கு ஏற்படும் இருதய வியாதி, அதிக இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற திடீரென கொல்லும் வியாதிகளை தகர்த்து எறிந்துவிடுகிறது. உறவினால் இரத்தமானது தோல்,மற்றும் முகத்திற்கு அடியில் உள்ள இரத்த நாளங்கள் விரிவடையச் செய்வதால் அதிக அளவு பிராணவாயுவும், சத்துப் பொருட்களும் சென்று முகத்தை அழகாக மாற்றுகிறது. முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து இளமை தோற்றம் தருகிறது. காதல் புறவிளையாட்டுகளில் ஈடுபடும்போது ஆண்களுக்கு விந்தணுக்களை பாதிக்கச் செய்யும் VERICOSE VEIN ஏற்படாது. பெண்களுக்கு மெனோபாஸ் சமயத்தில் OSTEOPOROSIS எனப்படும் எலும்பு தேய்மானம் நீங்குகிறது. தாம்பத்திய உறவின்போது நிணநீர் (LYMPH) அதிக அளவில் சுரந்து உடல் முழுவதும் பரவுவதால் திசுக்களில் தங்கியுள்ள பாக்டீரியா விஷச்சத்துக்கள் மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றுகிறது.
திருப்தியடையாத தாம்பத்திய உறவு
குடும்பத்தில் சூறாவளிக்காற்று இங்குதான் வீச ஆரம்பிக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. சந்தோசம் இல்லாத இயந்திர வாழ்க்கை வாழ்வது. கணவன் அல்லது மனைவி பிரிந்து வாழ்வது. விவாகரத்து போன்ற பல குடும்ப பிரிவினைகள் உருவாகிறது. முழுமையான தாம்பத்திய சுகம் கிடைக்காத பெண்களுக்கு தொடர்ந்து ஒற்றைத்தலைவலி, முதுகுவலி, இடுப்புவலி இருக்கும்.
பாலின உணர்வுகளை தடுப்பவை
மதுவகைகளை அதிகமாக உபயோகிக்கும்போது டெஸ் டோஸ் டீரான் என்ற ஹார் மோனின் சுரப்பு பாதிக்கப் படுவதால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது. மேலும் ரத்த அழுத்த மாத்திரைகள், வலி நீக்கி மாத்திரைகள் முதலியவையும், போதை பொருள்களான கஞ்சா, பான்பராக்,மானிக்சந்த், புகையிலை சாப்பிடும்போது மூளையில் உற்பத்தி ஆகக்கூடிய SEROTONIN மற்றும் DUPAMINE என்ற சுரப்புகள் குறைவதால் பாலின உணர்வுகள் மிக குறைவாகவும், ஆண்மை குறைவும் ஏற்படுகிறது.
பால், நெய்,பேரீச்சம்பழம்,பாதாம் பருப்பு, முந்திரிபருப்பு,உளுந்து, கடலை உணவுகள்,முளை கட்டிய தானியங்கள், எள், தேங்காய், அவல், வாழைப்பழம், சிலவகை லேகியம் மற்றும் பஷ்பங்கள் பாலின உணர்வை தூண்டுகிற பொருட்கள்..




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக