பொதுவாக தாம்பத்ய உறவில் ஈடுபடு்வதற்கு முன்பு குறைந்தது அரை மணி நேரமாவது கணவன்-மனைவி முன் தூண்டல் நடைபெற வேண்டும். உச்சி முதல் பாதம் வரை மனைவியை வருடி உணர்வினைத் தூண்ட வேண்டும். இப்படிச் செய்வதனால் பெண் உறுப்பில் உலர்தல் பிரச்சனையிருக்காது.
சில சமயங்களில் ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் உலர்தல் பிரச்சனை இருக்கலாம். ஈஸ்ட்ரோஜன் குறைவாக இருந்தாலும் இந்தப் பிரச்சனை வரலாம். இப்படிப்பட்ட பெண்களுக்கு ஹார்மோன் ரிப்பிளேஸ்மென்ட் தெரபி சிகிச்சை அளிக்க வேண்டும்.
இது தவிர செக்ஸ் என்பது ஒரு தவறான காரியம் என்றோ அல்லது அது தெய்வத்துக்கு எதிரான செயல் என்ற எண்ணமோ கொண்டிருந்தால் அந்த மாதிரிப் பெண்களால் செக்சில் ஒரு மனதாக லயிக்க முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு முன்தூண்டல் கூட கிளர்ச்சியைத் தந்து தாம்பத்ய உறவில் நிறைவு அளிக்காது. அது மட்டுமின்றி இளம் வயதிலேயே பலவந்தமாக பாலுறவில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு, பாலுறவு என்றாலே வெறுப்புத் தான் வரும்.
இவை தவிர பெண் உறுப்பில் காளான், அல்லது கிருமித் தொற்று இருந்தால் கூட பாலுறவு எரிச்சலூட்டும். வலி தரும்.
திங்கள், 15 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக