ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

உங்கள் கணனி நத்தை வேகத்தில் இயங்குகிறதா?

உங்களுக்குப் பிடித்த ஒரு கணனி விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென நீலத் திரை (Blue Screen) தோன்றி கணனியின் இயக்கத்தை நிறுத்திவிடுகிறது.

இணைய தளங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது (Browser) ப்ரவுஸர் வழமையை விட மெதுவாக இயங்குகிறது அல்லது எந்த இயக்கமும் அற்றுப்போகிறது.

முக்கிய ஆவணமொன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கும் போது அதனை சேமிக்கும் முன்னரே கணனி க்ரேஷ் (crash)ஆகி செயலற்றுப்போகிறது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் கணனியைத் தரையில் போட்டு பந்தாடலாம் போல் பலருக்கும் தோன்றலாம்.

கணனி மெதுவாக இயங்குவதற்குப் பல காரணங்களைக் கூறலாம். இவற்றுள் ஏதோ ஒரு காரணத்தினாலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களினாலோ கணினி மெதுவாக இயங்க வாய்ப்புள்ளது.

இவற்றிற்கு அடிப்படைக் காரணங்களாக வன்பொருள் சிக்கல், மென்பொருள் சிக்கல் மற்றும் வைரஸ் பாதிப்பு என்பவற்றைக் குறிப்பிடலாம்.

இந்தப் பிரச்சினைக்கு, அனேகமான கணனிப் பயனர்கள் முகம் கொடுக்க வேண்டி ஏற்படுவதால் சில பொதுவான காரணங்களை இங்கு பட்டியலிட நினைக்கிறேன்.

கணனியில் எப்லிகேசன் மென்பொருள்களை அவ்வப்போது நிறுவும் போது அவற்றுள் சில எப்லிகேசன்கள் விண்டோஸ் ஸ்டாட் அப் (Startup) போல்டருக்குள் எங்கள் அனுமதி இல்லாமலேயே நுளைந்து கொள்ளும். ஸ்டாட் அப்பில் அதிக எண்ணிக்கையிலான எப்லிகேசன்கள் இருக்குமானால் அனைத்தையும் விண்டோஸ் ஆரம்பிக்கும் போதே நினைவகத்தில் ஏற்ற வேண்டியிருக்கும்.

அதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதன் காரணமாக விண்டோஸ் ஆரம்பிக்கவும் அதிக நேரம் பிடிக்கும். எனவே ஸ்டாட் அப்பில் இயங்கும் பரோகிரம்களின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள் அதற்கு நீங்கள் Start மெனுவில் Run தெரிவு செய்து msconfig என டைப் செய்ய வரும் System Configuration Utility விண்டோவில் Startup தெரிவு செய்து தேவையற்ற எப்லிகேசன்களை ஸ்டாட் அப்பிலிருந்து நீக்கிக் கொள்ளலாம்.

பொருத்த மாற்ற BIOS (Basic Input Outout System)செட்டிங்கும் கணனியின் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கலாம். எனவே BIOS செட்டிங் உரிய முறையில் உள்ளதா என்பதை மதர் போர்டுடன் வழங்கப்படும் கை நூலுதவியுடன் சரி பார்த்துக்கொள்ளுங்கள். விண்டோஸ் இயங்கு தளத்தின் மிக முக்கிய பகுதியாக ரெஜிஸ்டரி (Registry)கருதப்படுகிறது. கணனியிலுள்ள அனைத்து வன்பொருள் மற்றும் மென்பொருள் களின் விவரங்களைக் கொண்ட ஒரு தரவுத் தளமாக ரெஜிஸ்டரி தொழில் படுகிறது. ரெஜிஸ்ட்ரியில் குளறபடி நிகழும் போது இயங்கு தளம் அந்த விவரங்கள் அனைத்தையும் தேடிப் பெற அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது.

* வழி காட்டி இல்லாமல் ஒரு ஊருக்குப்போக முற்பட்டு பல இடங்களிலும் சுற்றி அலைந்துவிட்டு இறுதியாகப் போக வேண்டிய இலக்கை பல மணி நேரம் கழித்து சென்றடைவதைப் போன்றே கணனியும் இந்த விவரங்களைத் தேடி இறுதியில் தனது இலக்கை அடைகிறது. சில வேளை இவ்வாறு தேடி கிடைக்காத போது கணனி க்ரேஸ் ஆகி விடுவதுமுண்டு. எனவே Registry optimizer மற்றும் Cleaners யூட்டிலிட்டி கொண்டு அவ்வப்போது கணனியை ஸ்கேன் செய்து ரெஜிஸ்ட்ரியை சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

* வைரஸ் மற்றும் ஸ்பைவேர் போன்றனவும் கணனி மெதுவாக செயற்படக் காரணமாய் அமைகிறது. கணனி வைரஸ் பாதிப்புக்குள்ளாகும்போது கணனியின் முக்கிய வளங்களைப் வைரஸ் பயன்படுத்த ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக கணனி மெதுவாக இயங்க ஆரம்பிக்கிறது.

கணனியில் போதிய பாதுகாப்பு இல்லாது இணையத்தில் இணையும் போது வைரஸ் மற்றும் கணனியில் எமது நடவடிக்கைகளை வேவு பார்க்கும் ஸ்பைவேர் (spyware)என்பன நமது கணனிக்குள் ஊடுருவுகின்றன. எனவே ஒரு சிறந்த வைரஸ் எதிர் மென்பொருளுடன் (Anti Virus Program) ஸ்பைவேர் கண்டறியும் மென்பொருளையும் நிறுவிக் கொள்வதன் மூலம் வைரஸ் மற்றும் ஸ்பைவேரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடிவதோடு கணனியின் இயங்கு திறனையும் அதிகரிக்கலாம்.

குறைந்தளவு மின் சக்தியில் சீபீயூ (CPU) இயங்குமாறு செட்டிங் மாற்றப்பட்டிருக்கலாம். இதன் காரணமாகவும் சிபியூவின் வேகம் மந்த நிலையடையும். அதனால் பயோஸ் செட்டிங் மற்றும் விண்டோஸ் கண்ட்ரோல் பேனலில் Power Options திறந்து அதனை உறுதி செய்துகொள்ளுங்கள்.

சீபீயூ அதிக அளவு வெப்பமடைவதாலும் கணனி மெதுவாக இயங்க ஆரம்பிக்கிறது. அதனால் சீபீயுவின் வெப்பத்தைத் தணிக்கும் ஹீட் சிங்க் (Heat Sink) மற்றும் விசிறி (Cooling Fan) என்பவற்றைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். சீபீயூ வெப்ப நிலையையும் பரிசோதித்துக்கொள்ளுங்கள்.

கணனியின் வேகத்தில் நினைவகமும் முக்கிய பங்களிப்பைச் செலுத்துகிறது. தற்போது பயன்பாட்டிலுள்ள இயங்கு தளம் மற்றும் எப்லிகேசன் மென்பொருள்கள் இயங்குவதற்கு அதிக அளவு நினைவகமும் அவசியம். அதனால் நினைவகத்தின் அளவை அதிகரித்துக் கொள்வதன் மூலமும் கணனியின் வேகத்தை அதிகரிக்கலாம். எனினும் மதர்போட் ஆதரிக்கும் உச்ச அளவு நினைவகத்தை கணனி ஏற்கனவே கொண்டிரு ந்தும் கணனி மெதுவாக இயங்கினால் மேலும் அதிக அளவு நினைவக த்தை ஆதரிக்கக் கூடிய மதர்போர்டை வாங்கிப் பொருத்திக் கொள்ளுங் கள்.

* ஹாட் டிஸ்கில் பைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அல்லாமல் சிறு சிறு பகுதிகளாக சிதறலாகவே சேமிக்கப்படும். கணனியின் தொடர்ச்சியான பாவனையின் போது இந்த சிதறல்களின் எண்ணிக்கை அதிகரித்து அதன் காரணமாக உரிய பைலைத் தேடிப் பெற அதிக நேரம் எடுக்கும். எனவே ஹாட் டிஸ்கை குறிப்பிட்ட சில கால இடை வெளிகளில் அதனை டிப்ரேகமண்ட் (Defragment) செய்துகொள்ள வேண்டும் டிப்ரேக்மண்ட் செயற்பாட்டில் பைல்கள் மீள ஒழுங்கு படுத்தப்படுகின்றன. அதன் மூலமும் கணனியின் வேகத்தை அதிகரிக்கலாம் ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் செய்து கொள்ளும் வசதியை விண்டோஸ் இயங்கு தளம் தன்னகத்தே கொண்டுள்ளது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல