நேபாளத்தைச் சேர்ந்த ககேந்திரா தபா மகார் (Khagendra Thapa Magar) 22 இன்ச் மட்டுமே உயரம் கொண்டவராக இருக்கிறார்.
தற்போதைய குள்ள மனிதர் He-pingping
தற்போது சீனாவைச் சேர்ந்த ஹி பிங்பிங் எனும் 29 இன்ச் உயரம் கொண்டவரே உலகின் குள்ளமான மனிதர் எனும் அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார். இதற்காக அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார். அவரைவிட உயரம் குறைந்தவரான மகார் உலகின் குள்ளமான மனிதர் எனும் அங்கீகாரத்தைபெறுவதற்காக கின்னஸ் நிறுவனத்திடம் விண்ணப்பித்தார்.
4 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் விண்ணப்பித்தபோது அவருக்கு 14 வயது ஆகியிருந்தது. ஆனால் அவர் மேலும் வளருவதற்கான வாய்ப்பு இருப்பதால் அவரை சாதனைக்காக பரிசீலிக்க முடியாது என கூறிய கின்னஸ் நிறுவனம் 18 வயது பூர்த்தியான பிறகே ஏற்றுக்கொள்வோம் என கூறியது.
இந்நிலையில் 18-வது பிறந்தநாளை கொண்டாடிய மகார் மீண்டும் கின்னஸ் நிறுவனத்திடம் விண்ணப்பித்தார். ஆனால் இதுவரை முறையான பதில் எதுவும் கிடைக்காததால் தனது சாதனையை வலியுறுத்துவதற்காக அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இத்தாலி நாட்டிற்குச் சென்று அங்குள்ள தொலைக்காட்சியில் தோன்றி கின்னஸ் சாதனை புத்தகத்தில் தான் இடம்பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்த இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இத்தாலிக்கு பிறகு மற்ற நாடுகளுக்கும் சென்று அவர் ஆதரவு திரட்ட உள்ளார்.







































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக