கடலைமாவு 1 கப்
அரிசிமாவு 1/2 கப்
வெங்காயம் 2
காரட் 1
பீன்ஸ் 10
குடைமிளகாய் 1
இஞ்சி சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லி தழை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம்,பீன்ஸ்,குடைமிளகாய்,இஞ்சி,பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.
கொத்தமல்லித்தழையை நன்றாக ஆய்ந்து பொடியாக நுறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலை மாவு,அரிசி மாவு உப்பு மூன்றையும் சிறிதளவு தண்ணீரில் கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
நறுக்கிய காய்கறிகள்,துருவிய காரட்,கொத்தமல்லித்தழை மூன்றையும் மாவில் கலக்கவும்.அடுப்பில் தோசைக்கல்லை போட்டு, கல் சூடானதும் நடுவில் மாவை ஆம்லெட் size க்கு ஊற்றவும். இருபக்கமும் திருப்பிப்போட்டு எடுக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக