மேலும் இது பற்றி பாலியல் நிபுணரின் கருத்து
உடலுறவில் ஈடுபடுவதால் நிச்சயமாகப் உடல் பலவீனம் அடைந்து விட மாட்டோம். நாம் வெளியேற்றும் விந்தில் 15 அல்லது 20 கலோரிகள் மட்டுமே ஆகும். இதில் கொஞ்சம் புரதம், கொஞ்சம் வைட்டமின், கொஞ்சம் தாது உப்புக்கள் கலந்துள்ளன நாம் சிறுநீர் கழிக்கும் போது வெளியேறும் புரதம், வைட்டமின் சமாச்சாரங்களை விட இது மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் 10 அடி தூரம் நடந்தால் எவ்வளவு சக்தி செலவாகுமோ அவ்வளவு சக்தி தான் நாம் ஒரு முறை வெளியேற்றும் விந்தில் உள்ள சக்தி.
ஒரு சொட்டு விந்து நூறு சொட்டு ரத்தத்திற்குச் சமம், விந்தை வெளியேற்றாமல் சேமித்து வைத்தால் தெய்வீகத் தன்மை அடைய முடியும் என்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் வெறும் கட்டுக்கதைகள். உடலுறவு ஒரு சந்தோஷமான அனுபவம். நிறைவு தரும் நிகழ்வு. இதில் பலவீனம் அடைந்து விடுவோமாம் என்ற பயம் வேண்டாம்.
இன்பமயமான வாழ்க்கைக்கு இடைவெளி எதற்கு?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக