இப்பழக்கம் கிரேக்க நாட்டுப் பழக்கத்தில் இருந்ததற்கு இலக்கியச் சான்றுகள் பல உண்டு. நீரோ மன்னன் ஒரு ஆணையே மனைவியாக வைத்திருந்ததற்கு கதை உள்ளது. இதுபோன்று ரோம் நாட்டில் ஒரு வீரனுக்கு அழகாகவே ஒரினச் சேர்க்கை பழக்கம் கருதப்பட்டது. இதற்கான சான்றுகளும் இருக்கின்றன.
இப்பழக்கம் உலகம் முழுவதும் கிறிஸ்தவ சபை உருவானபின்னர் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அக்காலக்கட்டத்தில் செக்ஸின் முக்கியத்துவம் கருத்தரித்தல் மட்டுமே, எனவே ஆண் ஆண், பெண் பெண் உறவு தவறு என்று போதிக்கப்பட்டது. இந்நிலை இந்த நூற்றாண்டின் நடுப்பதிவரை நீடித்து வந்தது. ஆனால் இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பழக்கத்திற்கு அங்கீகாரம் வழங்கப் பட்டது.
1962-ல் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாகவே இப்பழக்கம் அங்கீகரிக்கப்பட்டது. இப்படியான உறவுகள் தப்பல்ல என்றார்கள். இங்கிலாந்தில் 1967-ல் இப்பழக்கம் சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, இப்பழக்கம் தவறானதல்ல என்று கருத்து தெரிவிக்கப்பட்டது..
லெஸ்பியன் உணர்வு எப்படி உண்டாகிறது?
ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் ஈர்ப்பு, காதல், காமம் உண்டாவது இயல்பு. அதுதான் இயற்கையும்கூட. ஆனால் ஒரு பெண்ணிற்கு இன்னொரு பெண்ணிடம் காமம் உண்டாக சில காரணம் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
1. தாய் மகள் உறவு காரணம். ஒரு தாய் தன் மகளை ஆண்கள் மேலேயே வெறுப்பு ஏற்படும்படி வளர்த்தல், அச்சூழல் காரணமாக அப்பெண்ணுக்கு ஆணின் மீது ஈர்ப்பு இல்லாமல் போகலாம்.
2. மோசமான தாய், தந்தை உறவு. ஒரு தந்தைதாயிடம் நடந்துகொள்ளும் அருவெறுப்பான செயல்கள், வெறுப்பூட்டும்படியான கொடுமைகள், சண்டைகள், சச்சரவுகள், குடும்ப அமைதியின்மையினாலும்கூட ஆணினத்தின் மீதே அப்பெண்ணிற்கு வெறுப்பு ஏற்படக்கூடும்.
3. அழகில்லாத பெண்கள் மனதில் இருக்கும் அச்சம் காரணமாக, நாம் ஆண்களால் ஒதுக்கப்பட்டு விடுவோம் என்று கருதி பெண்களிடம் மட்டும் பழகலாம். இதுதவிர ஹாஸ்டல் பெண்கள், ஒரே வயதில் இருப்பவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே அறையில் தங்கியிருக்க வேண்டியிருத்தல், தங்களுக்குள் உடை, உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுதல் போன்ற சூழ்நிலைகளும் இப்பழக்கத்திற்கு வாய்ப்பு உண்டாக்கலாம்.
எத்தனை சதவீதம் பெண்களிடம் இப்பழக்கம் உள்ளது?
ஆண்களின் எண்ணிக்கையில் 30% ஆண்களிடம் ஒரினச்சேர்க்கை பழக்கம் இருக்கிறது. இவர்கள் அதாவது ஒரு ஆண் இன்னொரு தன்னை ஒத்த ஆண் மூலமாக சுயஇன்பம் போலவோ, அல்லது உணர்ச்சி தூண்டலோ அடைந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பெண்களில் 10 லிருந்து 15% வரை வாழ்க்கையின் ஒரு முறையாவது உணர்ச்சி தூண்டுதலை பிற பெண்களிடமிருந்து பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.இதில் 3% சதவீதம் பேர் தொடர்ச்சியாக ஓரினச்சேர்க்கையில் மட்டும் ஈடுபட்டு வருபவர்கள்.
பெண்ணிடம் பெண் அனுபவிக்கும் இன்பம் எத்தகையது?
சரியாக சொல்லப்போனால் பெண்ணிடம் பெண் அனுபவிக்கும் இன்பம் மிக கூடுதலாக இருக்குமென ஆய்வுகள் மூலம் தெரிகிறது. ஆணும், பெண்ணும் சேர்ந்திருக்கும்போது ஆண், பெண்ணை உடல் உறவுக்கு போதுமான அளவு தயார் செய்வதில்லை. தன்னுடைய இன்பம் பெரிதென்று தன் மனைவியைகையாளுகிறார்கள்.
முக்கியமாக மனைவியின் மார்பக பகுதியை தொடுவதாக வைத்து கொள்வோம், அதுகூட அவருடைய திருப்தியையும், சுகத்தையும் கருதித்தான். மனைவிக்கு என்ன பிடிக்குமோ? எப்படி பிடிக்குமோ? அப்படி ஆண் மனைவியை தொடுவதில்லை. அதாவதுதான் இன்பம் அடைய மனைவியின் உடம்பை பயன்படுத்திக் கொள்கிறார். அதுவும்கூட பெண் பெண்ணிடம் சேர காரணமாகி விடுகிறது. தனக்கு விருப்பமானதை மட்டும் நிறைவேற்றிக்கொண்டு பெண்ணின் விருப்பு, வெறுப்பையும் அந்த ஆண் முழுமையாக அறிவதில்லை.
பெண், பெண்ணுடன் சேரும்போது அவர்கள் எடுத்தவுடன் உறவு கொள்வதில்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் பலகாலம் புரிந்துகொண்டு, பிறகுதான் ஈடுபடுகிறார்கள். ஒரு பெண் ஆனவள் இன்னொரு பெண்ணுக்கு எங்கு தொட்டால் எங்கு கைவைத்தால் இன்பம் கிடைக்கும் என்பதை அறிவாள். ஒரு பெண் இன்னொரு பெண்ணை தூண்டுவது அவள் இன்பம் அடைய அல்ல, அந்த தூண்டப்படும் பெண் இன்பம் அடையத்தான். ஆண் அப்படி அல்ல. எனவே பெண், பெண்ணிடமிருந்து பெறும் இன்பம் ஆண்களிடமிருந்து பெறுவதைவிட அதிகம்தான்.
பெண் இன்னொரு பெண்ணை கையாளுகிற விதம் மென்மையாக இருக்கும். பெரும்பான்மையான ஆண்கள் முரட்டுத்தனமாக மென்மையில்லாமல் பெண்ணை கையாளுவார்கள். ஆனால் பெண், பெண்ணை கையாளும் விதம் மென்மையாகவே இருக்கும்.
ஓரினச் சேர்க்கையாளர்களின் மனநிலை எப்படி இருக்கும்?
ஓரளவு குற்ற உணர்வுடன் இருந்தாலும்கூட பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள் அவ்வளவாக மனநிலையால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் மனநிலையால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் பதட்டம், தன்னம்பிக்கையின்மை போன்றவைக்கு ஆளாகிறார்கள்.
இது ஏனெனில் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களில் ஒருவர் ஆண், இன்னொருவர் பெண்மாதிரி நடந்து கொள்வார்கள். பெண் மாதிரி நடந்து கொள்ளும் ஆண் நிறைய மனபாதிப்புக்குள்ளாகிறார். ஏனெனில் ஆண் பெண்ணாக நடப்பதை சமுதாயம் மதிப்பதில்லை.
பெண் ஓரினச் சேர்க்கையில் ஒருவர் ஆண் போலவும், இன்னொருவர் பெண் மாதிரி நடந்து கொண்டாலும் மிகப்பெரிய அளவில் குற்ற உணர்வு உண்டாவதில்லை. உதாரணமாக ஒரு பெண் ஆண்மாதிரி உடை உடுத்துவதை, ஆண் மாதிரி நடப்பதை, ஆண் தொணியில் பேசுவதை சமுதாயம் குற்றமாக கருதுவதில்லை. எனவே பெண் ஓரினச்சேர்க்கையின்போது அதில் ஒரு பெண் ஆண் மாதிரி நடந்து கொள்ளும்போது குற்றவு உணர்வுக்கு ஆளாவதில்லை. இதனால் இவர்களின் மனநிலையிலும் எந்த பாதிப்பும் வருவது கிடையாது.
லெஸ்பியன்ஸ்கள் எப்போதும் இப்படித்தான் இருக்கிறார்களா?
இவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்த்தால்- இவர்கள் எப்போதும் அப்படியே இருப்பதில்லை. பாலியல் நடவடிக்கைகளை பல வகையாக பிரிக்கலாம்.
1. ஆண், பெண் சேர்க்கையில் மட்டும் ஈடுபடுபவர்கள்,
2. ஆண், பெண் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் எப்போதாவது ஓரினச்சேர்க்கையிலும் ஈடுபடுபவர்கள்,
3. முக்கியமாக ஆண், பெண் சேர்க்கை, அத்துடன் அவ்வப்போது ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள்.
4, ஓரினச்சேர்க்கையில் பாதி, ஆண், பெண் சேர்க்கையில் பாதி ஈடுபடுபவர்கள், 5. முக்கிய ஓரினச்சேர்க்கை அவ்வப்போது ஈரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள், 6. முக்கியமாக ஒரினச் சேர்க்கை எப்போதாவது ஓரினச் சேர்க்கைகளில் ஈடுபடுபவர்கள்,
7. எப்போதும் ஓரினச்சேர்க்கை கொள்பவர்கள். இவர்கள் உலகளவில் 3% பேர்களாவர்.
இது மனநோயா அல்லது மருத்துவரீதியான ஒரு பாலியல் தவறா?
1974-க்கு முன்புவரை இது மனநோயாகத்தான் மருத்துவ துறையினரால் கருதப்பட்டது. 1974-ம் ஆண்டு நடந்த அமெரிக்கா மனநோய் ஆய்வாளர்கள் கூட்டமைப்பில் இந்நோய் மனநோயல்ல என்று அறிவிக்கப்பட்டது. எனவே பெரும்பான்மையான மருத்துவர்களின் கருத்தும் இதுதான். இதுவொரு மனநோயல்ல. மருத்துவரீதியான பாலியல் தவறாகவும் கருத வாய்ப்பில்லை. 1962 முதல் சட்ட பூர்வமான விசயமாக பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. இப்பழக்கம் தனிப்பட்ட முறையில் நான் கருதுவது என்னவென்றால் உடல் உறவுக்கு ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் இயற்கையாவே படைக்கப் பட்டிருக்கிறது. ஆணும், பெண்ணும் கூடினால்தான் சந்ததியும் பெருகும், உலகமும் தழைக்கும். மாறாக இது போன்ற ஓரினச்சேர்க்கை பெருகுவது இயற்கைக்கு மாறாகத்தான் இருக்கும் என்பதைத்தான் குறிப்பிட வேண்டும்.
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றரியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள என்று வள்ளுவர் ஒரு ஆணின் ஐம்புலனுக்கும் இன்பம் தரக்கூடிய தன்மை ஒரு பெண்ணிடம் மட்டுமே உண்டென்றார். அதுபோலத்தான் ஒரு பெண்ணின் ஐம்புலனுக்கும் இன்பம் தரக்கூடிய தன்மையும் ஒரு ஆணிடம் மட்டுமே உண்டு என்பதையும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.
இவர்களுக்கு எய்ட்ஸ் வருமா?
ஆரம்பத்தில் எய்ட்ஸ் நோய் ஆண் ஓரினச் சேர்க்கையாளாpடமிருந்துதான் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களிடம் தான் அதிகமாகவும் இருந்தது. இந்நிலை இப்போதில்லை. இப்போது ஆண், பெண் உறவு நிலை மூலம்தான் வருகின்றது. ஆண்களிடம் உள்ள ஓரினச்சேர்க்கையில் எய்ட்ஸ் வர வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் விந்து திரவத்தை ஒருவர் மற்றொரு ஆணின் உடம்பில் செலுத்துகிறார், ஆனால் பெண் பெண் உறவில் இதுபோன்ற திரவ பரிமாற்றங்களுக்கு வாய்ப்பில்லையாதலால் பெண் பெண் உறவில் எய்ட்ஸ் வரவாய்ப்பு குறைவு. இந்நிலை மாற பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் தங்களது கவனத்தை செலுத்த வேண்டும்.
ஆண்களுக்கான ஓரினச் சேர்க்கையில் எய்ட்ஸ்வருவதற்கான வாய்ப்புகள்மிக அதிகம். ஆனால் பெண்களுக்கு இடையேயான ஓரினச்சேர்க்கையில் எய்ட்ஸ்நோய்க்கான வாய்ப்புகள் மிக குறைவு




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக