ஆனால் சிசேரியன் பிரசவத்தை விட இயற்கைமுறைப் பிரசவமே சிறந்தது என்பது மருத்துவ அறிவியல் உலக ஆய்வுகளின் கருத்தாகும்.
இயற்கைப் பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் உடல்நிலை தானாகவே பழைய நிலைக்குத் திரும்புகிறது. தாயின் உடல் நிலை பெரும்பாலும் சீராகவே இருக்கும். சில பெண்கள் இயற்கைப் பிரசவம் முடிந்த மறுநாளே யாருடைய உதவியுமின்றி குழந்தையைத் தூக்கிப் பால் தருவார்கள்; குளிப்பார்கள்; ஆடை அணிந்து கொள்வார்கள்; அந்தளவிற்கு மிக விரைவில் அவர்களின் உடல்நலம் தேறிவரும்.
சிசேரியன் அறுவைச் சிகிச்சைப் பிரசவத்திற்குப் பின் தாயின் உடல்நிலை தேறவே பலநாட்கள் ஆகிறது. மருந்து மாத்திரைகள் அதிகளவு சாப்பிடவேண்டியுள்ளது. மேலும் பல கோளாறுகள், பின் விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு குழந்தைக்கு சிசேரியன் செய்தால்... அடுத்த குழந்தைக்கும் சிசேரியன் தான் என்று தள்ளப் படுகின்றனர்.
சிசேரியனுக்கு எதிரான விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறிப்பாக பெண்களிடம் ஏற்பட வேண்டும். பெருகிவரும் சிசேரியன் எண்ணிக்கை குறைய வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக