சில முக்கிய விஷயங்களை, கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்காமல் போனால், அவள் வயிற்றில் வளரும் கரு அழிந்து போகும் வாய்ப்பு உண்டு என காமசூத்திரம் எச்சரிக்கிறது. அந்த விஷயங்கள் என்ன...?
கர்ப்பிணிப் பெண்கள், மேடு பள்ளமான இடங்களில் கண்டபடி உட்கார்ந்திருக்கக்கூடாது. காலையிலேயே மலம், சிறுநீர் சரியாகக் கழிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சில பெண்கள், கர்ப்ப காலத்தில் கடின வேலை செய்தால் தான் எந்தப் பிரச்சினையுமின்றி, சுகப்பிரசவம் ஆகும் என நினைத்து தங்களால் செய்ய முடியாத, இது வரை செய்து பழக்கம் இல்லாத வேலைகளை வலியச் செய்வார்கள். இது தவறு. இப்படிப்பட்டவற்றை தவிர்க்க வேண்டும்.
உணவு விஷயத்தைப் பொறுத்தவரையில் காரமான உணவை தவிர்க்க வேண்டும். அதே போல,. பெருந்தீனியும் ஆகாது. அது கருவை அழிக்க ஏதுவாகும். எனவே, அளவோடு தான் உண்ண வேண்டும். அப்போது தான் குழந்தையின் எடையும் சரியானதாக, இருக்கும், சுகப்பிரசவம் ஆகும். மாறாக, கர்ப்ப காலத்தில் கொழுப்பு பதார்த்தங்களை அதிகமாக உண்டால், குழந்தையின் எடை அதிகரித்து, பிரசவ காலத்தில், சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டியது வரும்.
தவிர, கர்ப்பிணிகள், ஆழமான கிணறு, பெரிய நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றைப் பார்த்தாலும், கருக் கலைந்து போகும் வாய்ப்பு உண்டு. அதே போல, அளவுக்கு அதிகமான சத்தத்தையும் கேட்கக்கூடாது. நெடுந்தூரம், குலுங்கி குலுங்கிச் செல்லும் வண்டியில் பயணம் செய்வதையும் தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண் படுத்திருக்கும் போது, தனது முகத்தை பக்கவாட்டில் தான் வைத்துப்படுக்க வேண்டும். மாறாக தலையை மேல் நோக்கி வைத்து மல்லாந்து படுத்தால், வயிற்றில் வளரும் கருவுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. தொப்புள்கொடியானது, கருவின் கழுத்தைச் சுற்றிக்கொள்ளும். எனவே இது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக