ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

வேடம்

தனக்குரிய பிரத்தியே வாகனத்தில் தனது அலுவகம் நோக்கிப்புறப்பட்டாள் அனுசியா. அத்துடன் தனது திருமண நிச்சய வேலைகளையும் அவளே செய்யவேண்டியிருந்தது.

ஒருவருக்கும் சொல்லாமல் இரகசியமாய் செய்ய நினைத்தாள். காரணம் அவளுக்கு மாத்திரமே தெரியும். தனது இடைக்கால நண்பன் மோகனிற்கு தெரியப்படுத்தினாள்.

அவனும் சில ஆலோசனைகளை கொடுத்திருந்தான். இடையில் வந்த நட்பாகவிருந்தாலும் அவளது உள்ளத்தில் அவனுக்கு முதலிடம். வாழ்க்கை தடம்மாநிப்போன காலத்தில் அவனின் வாழ்க்கையினை மீள்நிறுத்த அவன் எடுத்த முயற்சிகள் ஏராளம்.

அவன் ஆழம் தெரியாமல் காலைவிட்டு தனது கையினை அவன் காயப்படுத்தியது தான் மிச்சம். அவர்கள் இருவரது முயற்சிகளும் உண்மைக்கு முன் மண்டியிட வேண்டியதாயிற்று.

காரணமில்லாத அவர்களது செயற்பாடுகள் காலங்களையும் நேரங்களையும் அவர்களது வாழ்வில் வீணடித்தது.

அவள் தனிமையிலிருக்கும் போதெல்லாம் மோகன் தன்னுடன் அழைத்துச் செல்லுவான். காலம் உருண்டோடியது.

தனிமை அவளை வாட்டியெடுத்தது. தனது வறட்டு கெளரவங்களுக்குள் சிக்குண்டிருக்காமல் தனது பழைய பசுமையான நி¨வுகளுக்குள் நில்லாமல், தனது வாழ்க்கையினை மாற்நினாள்.

வாழ்வின் பரிணாமம் அவளுக்கு விளங்க ஆரம்பித்தது. வாழ்வில் தோற்றுப்போன பலர் மீண்டெழுந்த பீன்க்ஸ் போல் வாழ்வில் உயரவில்லையா? விவாகரத்து பெற்ற பலர் மறுமணம் செய்து குடும்ப வாழ்வில் சிறக்கவில்லையா! காதலுறவுகனில் பிரிந்த பலர் வாழ்வின் பாதை யில் வெற்நியடைந்தார்கள் என்றே சரித்திரம் சொல்கின்றது.

மோகன் பக்க பலமாக நின்றான். திருமணம் செய்ய முடிவெடுத்தாள். புதிய பக்கங்கள் அவள் வாழ்வில் வர, வளர ஆரம்பித்தது.

ஏனைய அவளது சகோதரங்கள் திருமண உறவில் ஏற்கனவே இணைந்துவிட தனது பிந்திய முதிர்கன்னி வயதில் தனது திருமணத்திற்கான தீர்மானத்தினை எடுத்திருந்தாள். கைவிட்டுப்போன கைநழுவிப்போன, ஏமாந்த, ஏமாற்நிய வரன்கள் என்று அடக்கிக் கொண்டே போகலாம்.

இயற்கையின் சீற்றத்தாலும், போராலும் ஆண்கள் எண்ணிக்கை உலகளாவிய மட்டத்தில் குறைந்து செல்கையில் அனுசி இதனிடையே தப்பிச் செல்வது இயலாத காரியம். பழையவற்றை நினைத்து நினைத்து மனது பேதலித்துவிட்டது.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும் தான புதிய வருடம்’ என்று, என்றோ ஓர் நாடகத்தில் அவள் முழங்கியது, இந்தப் புது வருடத்தில் அவளுக்கு புதிய பல விடயங்களை கற்றுத்தரபோகின்றது என்பதை அனுசி உணர்ந்து கொள்ள காலமாகலாம்.

இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் வாழ்ந்துவிடவே துடிக்கின்றனர். அதற்காக அவர்கள் எடுக்கும் உபாயங்கள் வேறுபடுகின்றது.

தத்தமது உபாயப் பொநிமுறைகனில் பல வேறுபாடுகளைக் கொண்டு வாழ்ந்துவிட துடிக்கும் ஆன்மாக்கள் அந்தப் பொநிமுறையில் சிக்கிவிடுவதும் உண்டு. அதனைப்போலவே தமது உபாயங்களை செயல்படுத்த பலரின் உதவினை நாடுவதும் பின்னர் அவர்களையே நாசப்படுத்துவதும் வழமையானவை.

தமது தப்பிதங்களுக்கு நியாயம் கற்பிக்கும் பலர் இன்னமும் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் வரலாறு அவர்களை மன்னிக்காது காலமும் நேரமும் வரும்பொழுது அவர்கள் தமது பிழைகளை உணர்ந்தே தீருவர். தண்டனை பெற்றே தீருவர்.

தனது வாழ்க்கைக்காக அனுசி போராடியதை யாரும் மறக்கமாட்டார்கள். அன்று வைத்தியத்துறையில் பட்டம் பெறவேண்டிய அவள், தனது உயர்தர ப[ட்சையை கூட சரிவர எழுத முடியாதபடி ‘காதல்’ அவளை படாய்படுத்திவிட்டது.

தனது வாழ்க்கையினை விட அவள் தனது காதலுக்காக போராடியதே அதிகம். காதல் நிலைக்கவில்லை. ‘கம்பஸ் காதலை நம்பக்கூடாது’ என்று அவளது நண்பி வேணி சொல்வது போலவே அவளது வாழ்விலும் நடந்து விட்டது. அவளது சந்தேகக்குணம் அவளது வாழ்வினை சின்னாபின்னப்படுத்திவிட்டது.

தனது சுயதேடலை முன்னிறுத்தி தனது காதலான்மாவான ஜெயந்தனை அவள் தூக்கியெநிந்தாள். விளைவு அவளது உள்ளத்தை ‘ஏர் போட்டு உழுததைப் போலாகிவிட்டது’ காலம் கற்றுத்தந்த பாடங்களுடன் தனது வாழ்க் கையில் புதிய உபாயங்களை தேடிஓட ஆரம் பித்தாள்.

உறவினர்கள் மகிழ்ச்சி ஆராவாரத்தில் மிதக்க ஆரம்பித்தனர். சூழ் தாங்கும் பெலனி ழந்ததைப் போல் காணப்பட்ட அவளது மனதை மெல்ல மெல்ல உயிர் பெறத் தொடங்கியது.

திருமணம் என்பது ஒரு சடங்கு, ஊருக்கு நாம் காட்டும் வித்தை, சமூக [தியான அங்Xகாரத்தை பெற்றுத்தரும் நிகழ்வு.

அது காதல் திருமணமாகவிருந்தாலென்ன பெற்றோரால் ஒழுங்குபடுத்தப்பட்ட திருமணமாகவிருந்தாலென்ன பதிவுத் திருமணமாகவிருந்தாலென்ன இருவருக்கு மிடையில் விட்டுக்கொடுப்பும், புரிந்து வாழ்தலும், கைகொடுத்தலும் இல்லையென்றால்யாவும் ‘விழலுக்கிறைத்த `ர்’. இது அடிக்கடி ஜெயந்தன் முணுமுணுக்கும் வார்த்தைகள்.

அனுசியுடனான உறவில் விரிசல் ஏற்பட்டபொழுது அவன் விலகி வாழ தீர்மானித்தான். அனுசி விடவில்லை. அவன் விலகிப் போனான் இயன்றவரை அவளுக்கு புரியும் படி சொல்லியும் பார்த்தான். முடியவில்லை. அநேக பெண்களும், ஏன் ஆண்களும் கூட சில சமயங்கனில் இவ்வாறான ஓர் முடிவினையெடுப்பர்.

அது பொதுவாக காதல் தோல்வி என்ற மயக்கவேளையில் ஏற்படும் ஓர்மாய வார்த்தைகனின் அணிவகுப்பு. அன்று அவள் முழங்கிய முழக்கம் ‘இனி நான் திருமணம் செய்யப்வோதில்லை’ இன்று அது இயல்பாகவே கரைந்து விட்டது. தனிமையென்ற என்ற மூன்றெழுத்து காதல் என்ற மூன்றெழுத்துக்கு முன்னால் மண்டியிட்டது.

அனுசி சில காலம் செல்ல அதிலிருந்து விடுபட ஆயத்தமானாள். தனிமை என்ற வாழ்க்கைப் பொநிமுறையிலிருந்து விடுபட்டு திருமணம் எனும் பொநிமுறைக்கு மாற்றலாக விரும்பினாள், அனுசி. பாஸ்கரனுடன் வாழ முடிவெடுத்தாள்.

சில வருடங்களுக்கு முன் தூரத்து உறவினான பாஸ்கரன் அவளை கரம் பிடிக்க பலமுறை முயன்றும் அவனால் முடியவில்லை. அவன் தொடர்ந்து முயன்று வந்தான். தனது தொழில் முயற்சிகளுக்காக அயல் நாட்டில் தங்கியிருந்தான்.

அவ்வேளையில் அனுசியின் மிகவும் நெருங்கிய நண்பிகளான அணியும், சறோவும் பலமுறை அவளை அணுகி பலமுறை முயன்று அவளை சம்மதிக்க வைத்தனர். அவளுடைய மனதில் இனம் தெரிய பயம் அவளை ஆட்கொண்டது.

நாம் தேடும் ஒவ்வொரு வேடமும் எமது வாழ்வில் முக்கியமானவை. குழந்தையாக, வளர்ந்தவராக, வயதுள்ளவர்களாக, இளைஞராக, முதியவராக என நாம் வாழ்வியலின் தேடல்கனில் ஒவ்வொரு வேடங்களுடன் வாழ்கின்றோம்.

சிலருக்கு சில வேடங்கள் பொருத்தமில்லாததைப் போல் அவர்களது வாழ்வில் விளையாடிவிடுகின்றது. வேறு பலர் அவற்றை பொறுப்பற்ற விதத்தில் பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் அதனை வாழ்க்கைக்கு உபயோகமற்ற விதத்தில் பயன்படுத்தி நாடகமாடுகின்றனர். தோல்வி அங்கே ஆரம்பிக்கின்றது.

ஜெயந்தனுடன் இருந்த ஆழமான உறவினை விடாதிருக்க அவள் புனைந்த Xழ்த்தரமான கட்டுக்கதைகள் ஏராளம். அதற்கு மோகனும் உடந்தை, இவை யாவும் நடந்து பல வருடங்களாகியும், இன்றும் அதனை மறைக்க முடியவில்லை.

காலங்கள் சில சமயங்கனில் எமக்கு சார்பாகவும் எதிராகவும் நிற்பது போல தோன்றும், ஆனால் வாழ்வியிலின் தேடல்கனில் தமக்கு சாதாகமான காலங்களை பயன்படுத்தாத பலர் முகவரியின்நியே அழிந்ததை மறுக்க இயலாது. நரம்பில்லாத நாக்கால் சுழட்டி சுழட்டி யாவையும் கதைக்கலாம்.

நிச்சயம் இவையாவும் அவளுக்கு சவாலாக இருக்கும். எனவே அவள் முடிவெடுத்தாள் அயல் நாட்டில் சில காலம் வாழ்வதற்கு. வேடிக்கை பார்க்கவிருக்கும் கூட்டம் தயாராகவிருந்தது.

அவளது வாழ்வினை விமர்சிக்க பலர் இருந்தும் தனது வாழ்வினை தியாகம் செய்ய பாஸ்கரனே முன்வந்தான். அவனது தியாக உள்ளத்திற்கு முன்னால் அனுசி எம்மாத்திரம்.

வெள்ளையுள்ளம் கொண்ட பாஸ்கரன் இவையாவற்றையும் மேலோட்டமாக அநிவான். பாஸ்கரன் உண்மையான இலக்கியவாதி. அது மட்டுமல்ல அவன் ஓர் இலட்சியவாதியும் கூட, அதனால் தான் இத்தனை காயச்சுவடுகளுக்கு மத்தியிலும் அனுசியை கரம்பிடிக்க நினைத்தான்.

அவன் அநிய வேண்டியது இன்னும் அநேகம், நிச்சயம் அநிந்து கொள்வான். அதற்கான வாய்ப்பு அவனுக்கு காலத்தால் வழங்கப்படும். அவன் அதற்காக அனுசியை உதநித்தள்ள போவது இல்லை. ஏனெனில் அவன் அனுசியை மட்டுமே நேசித்தான், அவளது கடந்த காலத்தையல்ல அது மட்டுமே உண்மை.

திருமணமென்பது அவனுக்கும் புனித்துப்போனதொன்று, இவ்வளவு காலமும் அவன் அவளுக்காக காத்திருந்தது வீண்போகவில்லை. அவள் வாழ்க்கைப் பந்தயத்தில் அனுபவப்பட்ட குதிரை. இவனோ வியாபார பந்தயத்தில் புலி. இருவருமே வாழ்க்கையில் போரடியவர்கள்.

இருவருமே வயதடிப்படையில் நாற்பதை நெருங்கிக் கொண்டிருந்தனர். நாற்பதை தாண்டினால் நாய்படாதபாடு. இருவருமே கலந்து பேசி எடுத்த முடி. தத்தம் முடிவில் இருவருமே உறுதியாயிருக்க திருமண நிச்சயமும், பதிவும் சமய சம்பிரதாயங்களை கடந்து நடைபெற்றது.

சில நாட்கனில் திருமணம், அனுசியின் உள்ளம் சிட்டாப் பறந்தது. அவள்பட்ட வேதனைகளுக்கும் துன்பங்களுக்கும் பாஸ்கரனின் முடிவு முற்றுப்புள்னி வைத்தது. கடந்த கால நினைவுகனிலிருந்து அவள் மீண்டெழுந்தாலும் கறைகள் அவள் வாழ்வினை மொய்க்கத் தொடங்கியது.

‘தன் வினை தன்னைத் சுடும்மென்பது போல’ அவள் செய்த ஒவ்வொன்றும் அவளை தொடர ஆரம்பித்தது. அப்படி நடக்காவிட்டால் மனம் போனபோக்கில் மனிதன் வாழ்ந்துவிடலாம் அல்லவா.

அவளது செயல்கள் தவறென்பதை அவள் உணர்ந்து கொண்டாலும் அவள்போட்ட சூழ்ச்சிகள் அவளை நிச்சயம் பதம் பார்க்கும். அதற்காக அநேகர் காத்திருந்தனர்.

ஜயந்தனை மறக்க பலமுறை முயன்றும் அனுசியால் முடியவில்லை. அவள் தான் அவனை காயப்படுத்தினாளே ஓழிய, அவன் அவளை என்றும் போலவே நேசித்தான்.

அக்காயங்களும் தற்காலிகமானவையே. பிரிவென்பது உலகில் வாழப்பிறந்த ஒருவருக்கும் நிலையானது அல்ல என்பது இவர்கள் இருவரது வாழ்விலும் புலனானது. பிறந்த நாட்கனில் வாழ்த்து மட்டையினை அனுப்புவான். அவளும் அவனுக்கு பதில் அனுப்புவாள்.

தொலைபேசியில் உரையாடுவதை தவிர்த்தான். அவளுக்குரித்தானதை அவனிடமிருந்து அவன் எப்போதும் பிரித்தேயில்லை. பிரிக்கப்போவதுமில்லை.

அனுசியின் திருமணவிடயம் ஜெயந்தனின் காதுகளுக்கு எட்டியது. பழைய நினைவுகளை மீட்டிப்பார்த்தான். அவள் திருமண செய்யவேண்டுமென்பதற்காக செய்கின்றாள்? அல்லது தனது பெற்றோரின் விருப்பத்திற்காகவா இல்லையேல் தங்கைகனின் வற்புறுத்லா, நண்பிகனின் வற்புறுத்தலா என்பது அவனுக்கு புரியாத புதிராகவிருந்தது.

அவள் அவனுக்கு கொடுத்த அன்பனிப்புகள், கடிதங்கள் பிரிந்துபோகும் சந்தர்ப்பத்தில் அவள் அவனை Xழ்தரமாக விமர்சித்து எழுதி கடிதங்கள் யாவற்றையும் மீண்டுமொருமுறை வாசித்து ஞாபகப்படுத்திக் கொண்டான்.

ஜெயந்தன் திருமணம் முடித்து ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வருகின்றான். அவனது மனைவி கமலினி அன்பாளவன். அனுசியின் விடயம் அவளுக்கும் தெரியும். பலமுறை அனுசி ஜெயந்தனின் முதுகில் குத்தினாள். ஆனால் மூண்டுமொருமுறை கமலினி அதற்கு இடம்கொடுக்கப்போவதில்லை.

பலமுறை அவள் கமலினியிடம் ஓர் மனநோயானியைப்போல் தனது ஆதங்கங்களை கொட்டிதீர்த்திருக்கின்றாள். கமலினியோ அதனை பொருட்டாக எண்ணவில்லை. பாஸ்கரன் எவ்வாறு அனுசியை நேசித்தானோ அவ்வாறே கமலினியும் ஜெயந்தனை நேசித்தாள்.

காலம் மாநிவிட்டது. கமலினியை விமர்சித்தவள் இன்று கமலினியின் தாய் நாட்டுக்கே தஞ்சமாய் போகவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இவையாவற்றையும் மனதில் அமைதியாய் நிலை நிறுத்தியவனாக தனது சமூகப்பணியில் ஈடுபட்டு வந்தான் ஜெயந்தன். அவனுக்கான காலம் வந்துவிட்டது அவன்செயற்பட ஆரம்பித்தான். மூளை பல கோணங்கனில் செயற்பட ஆரம்பித்தது. கமலினி அதற்கு இடம்கொடுக்கவில்லை.

எமக்கு தீங்கு செய்த அனுசியை நாமும் அவ்வாறு தண்டித்தால் நமக்கும் அவளுக்கும் இடையிலிருக்கும் வேறுபாடு என்ன? என்பது கமலினியின் வாதம். அதற்கு ஜெயந்தன் உடன்படுவதாக இல்லை. கமலினி தனது முடிவில் உறுதியாக நின்றாள்.

எந்த இரகசியமும் மறைக்கப்பட்டதாக சரித்திரமே இல்லை. என்றோ ஒருநாள் வெனிவரும் அப்போது பாஸ்கரன் அனுசியை அநிந்து கொள்வான். விட்டுவிடுங்கள் இதனை குநித்து இனி ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்க்கவேண்டாம். தனது அன்பு வாதத்தினை முன்வைத்தாள்.

கமலினி. நியதிகளை மாநி, மாற்நி அனுசி செய்தது அவளுக்கு சரியாக தோன்றலாம். காலமும் சூழ்நிலையும் அவளை அவ்வாறு மாற்நியிருக்கலாம்.

அன்று அவ்வாறான சூழ்நிலைக்குள் அவளை தள்னியவர்களே இன்று அவளுக்கான புதிய வாழ்க்கையினை மாற்நிக் கொடுத்துள்ளனர். அதனிடையே நாம் ஏன் செல்ல வேண்டும். கமலினி தீர்க்கமாக யாவையும் சொல்லி முடித்தாள்.

ஜெயந்தன் விக்கித்து நின்றான், தனது முடிவினை மாற்நினான். அவனது மனைவியின் நல் உள்ளத்துக்கு மன்னால் அனுசி ஓர் புழு என்பதை உணர்ந்தான்.

காலத்தை பார்த்தான் வியந்தான் தனக்குள். தனிமையெனும் வேடம் அனுசியின் வாழ்வில் களைய நாட்கள் அதிகமில்லை போலும், அனுசியை அவன் நன்கநிவான். அனுசியின் வாழ்வில் பாஸ்கரன் நிலைக்க கடவுளை வேண்டினான். அவன் பிரார்த்தனை வீண்போகாது. பாஸ்கரன் நிச்சயம் அவள் வாழ்வில் நிலைப்பான்.

லக்ஷேந்ரகுமார்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல