தூய்மையான சந்தனம், கடுக்காய் 4, கசகசா 2 டேபிள்ஸ்பூன், பாதாம் பருப்பு இலைகளால் தயாரித்த கலவையினை ஃபேஸ் பேக் ஆக பயன்படுத்தலாம்.
கடைகளில் ஃபேஸ் மாஸ்க் பொடி விற்கும். அதை வாங்கி ஒரு ஸ்பூன் மாஸ்க் பொடியில் சிறிது வெள்ள, கரட்சாறுடன் , தயிர் சேர்த்துக் குழைத்து பூசி 20 நிமிடம் ஊறினதும் கழுவிவந்தால் முகம் பளிச்சென்று இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும்.
வெள்ளச்சாறும் புதினாச்சாறும் கலந்து முகம், கைகளில் தேய்த்து வரலாம்.
குளிர்காலத்தில் படுக்கும் முன், முகத்தில் மொயிஸ்ச் ரைஸர் பூசுவது நல்லது.
கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணெய் தேய்த்து வருவதால் முடிகள் பளிச்சென்று கருமையாக வளரும்.
முட்டைக்கோஸ், முள்ளங்கிச்சாறுகளும் முகத்தை பளிச்சென்றாக்க உதவும்.
தலைக்கு முட்டை தேய்த்து குளிப்பது நல்லது.
கை கால் நகங்களைச் சுத்தமாக வெட்டி, வெது வெதுப்பான நீல் சோப் துண்டுகளை போட்டு, கொஞ்ச நேரம் அமிழ்த்தி வைத்து பழைய டவலைக் கொண்டு சுத்தம் செய்து, நெயில்பாலிஷ் போட்டு வந்தால் பார்க்க அழகாக இருக்கும்.பார்லி பவுடரையும் மஞ்சள் தூளையும் 4:1 என்ற விகிதத்தில் நல்லெண் ணெயுடன் கலந்து உடல் முழுவதும் பூசி பின் குளித்து வந்தால் தோல் மென்மை பளபளப்பு கூடும்.
சோறு வடித்த கஞ்சியும், வெந்தயம் கூந்தலுக்கு நல்ல கண்டிஷனர் தரும்.கழுத்தில் ஏற்படும் சுருக்கங் களை நீக்க முட்டையின் வெள்ளைக் கரு, கிளிசன், ரோஸ்வாட்டர் கலந்து பேஸ்ட்டாக்கி கழுத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவுங்கள்.வெது வெதுப் பான பாலில் நனைத்த கொர்ட்டன் துணியை கண்களில் 10 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கருவளையம் போகும். பருக்கள் மறைவதற்கு ஓரஞ்சுச்சாறுடன் கொத்தமல்லி இலைச்சாறும் முல்தானிமட்டியும் கலந்து தடவலாம்.
நம் முகத்தைப் பிரகாசமாகக் காட்டுவது நமது கண்களே. அக்கண்கள், பளிச்செனவிருக்க தினம் இரவில் விளக்கெண்ணெயை கண்ணிமையின் மேலேயும், கண்ணின் கீழ்ப்பகுதிகளில் உருளைக்கிழங்குச் சாரையும் தடவவேண்டும். அப்படித் தடவிவந்தால் காலையில் கண்கள் பளிச்சென இருக்கும். கருவளையங்கள் போக, துளசியும் புதினாவும் அரைத்து பன்னீர்சேர்த்துத் தடவவேண்டும்.
உதடு
உதட்டில் வெண்ணெயுடன், தேங்காய் எண்ணையைத் தடவி வந்தால் உதடு காய்ந்து போகாமல் இருக்கும்.
முகம்
வெய்யில் காலங்களில் எண்ணெய்ப் பசை இல்லாமல் சருமம் பளிச்சென இருக்க இதோ சில டிப்ஸ்:
முதலில் பால் ஏட்டை கத்தில் தடவி, பஞ்சு மூலம் கத்தில் உள்ள அழுக்கை எடுக்க வேண்டும்.
பப்பாளி, ஆப்பிள்பேஸ்டை கலந்து கத்துக்கு 10 நிமிடங்கள் மசாஜ் கொடுக்கவும்.
பிறகு துளசி, புதினா இலைகளுடன் தண்ணீரைக் கொதிக்கவைத்து முகத்துக்கு ஆவி பிடிக்கவும்.
(ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும்.) ஒரு முட்டைக் கரு, எலுமிச்சம்பழச் சாறு, தயிர், கடலை மாவு, எல்லாவற்றையும் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். கடைசியாக குளிர்ந்த நீரால் முகத்தைச் சுத்தப்படுத்தவும் இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகம் பொலிவுடன் காணப்படும்.
தலைமுடி
பேபி ஒயில் அல்லது தேங்காய் எண்ணெயைப் பஞ்சில் எடுத்துத் தலையில் தேய்க்கவும்.
(பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து பிறகு காலையில் தேங்காய் எண்ணெயில் கலந்து உச்சந்தலையில் தேய்க்கவும்.) . பின் தலையை மசாஜ் செய்யவும். நிமிடங்கள் ஊறிய பிறகு, மருதாணி, தேயிலைச் சாயம் இரண்டையும் தயிரில் கலந்து தலை முடிக்கு பெக் ஆகப் போடவும். (மருதாணி போடுவதால் முடியின் கலர் மாறாது. மருதாணி, தேயிலைச்சாயம், தயிர் சேர்ந்த கலவையை இரவே ஊற வைத்துப் போட்டால்தான் முடியின் கலர் மாறும்.) மருதாணி ஒத்துக் கொள்ளாதவர்கள் செம் பருத்தி இலையை உபயோகப் படுத்தலாம்.
இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், தலை முடி ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும் இருக்கும்.




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக