ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

திருப்பதியில் பக்தர்களின் காணிக்கை மாயமா? திருட்டா?

இந்தியாவில் உள்ள கோயில்களிலேயே பணக்காரக் கோயில் எது?

திருப்பதி ஏழுமலையான் கோயில்தான் என்று யாரைக் கேட்டாலும் தயக்கமில்லாமல் பதில் சொல்லிவிடுவார்கள்!

ஏழை எளிய ஜனங்கள் மட்டுமல்ல; கோடீஸ்வரர்களும் லட்சாதிபதிகளும் கூட திருப்பதி கோயில் உண்டியலில் காணிக்கை என்ற பேரில் நகைகளையும் பணத்தையும் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறார்கள்!

சென்ற வருடம் கர்நாடகத்தைச் சேர்ந்த கோடீஸ்வர முதலாளி ஒருவர் திருப்பதி உண்டியலில் ஒண்ணரைக் கிலோ தங்கத்தைக் காணிக்கை யாக்கினார் என்ற செய்தி வந்தது.

இப்படி,எல்லோரும் கடவுள் நம்பிக்கையில் திருப்பதி உண்டியலில் நகைகளாகவும் தங்கமாகவும் ரூபாய் நோட்டுக் கட்டுகளாகவும் செலுத்தும் காணிக்கைகள் திருப்பதி கோயிலில் எப்படிப் பராமரிக்கப்படுகின்றன, யாருக்குப் பயன்படுகின்றன என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் அவ்வப்போது ஏடுகளில் வெளி வந்தபடியேதான் இருக்கின்றன! லட்டு தயாரிப்பு - லட்டு வியாபாரத்தில் கூட எத்தனை முறைகேடுகள், மோசடிகள் நடைபெறுகின்றன என்று முன்பு ஒரு முறை செய்தி வந்தது.

23.8.2009 வந்த செய்தியில் - ஏழுமலையானுக்கு காணிக்கை அளிக்கப்படும் தங்க நகைகள் - வைர மாலைகள் - தங்கக் கிரீடங்கள் - வைரக்கிரீடங்கள் எல்லாம் எப்படி சாமார்த்தியமாகக் களவாடப்படுகின்றன! கண்டுபிடிக்கப்பட்டால் - அது எப்படி சரி செய்யப்படுகிறது என்பது பற்றி ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது! அதிலே கூட திருப்பதி கோயில் நகைகள் திருட்டு என்று குறிப்பிடப்படவில்லை. பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயம் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது!

திருப்பதி கோயிலில் நகைகளைத் திருடுபவர்கள் அல்லது மாயம் செய்தவர்கள் பல லட்சக்கணக்கிலான மதிப்புள்ள நகைகளை மாயம் செய்து விட்டு எப்படி சில நூறு ரூபாய்களை இழப்பீடாக செலுத்திவிட்டு தப்பிவிடுகிறார்கள் என்பதை அந்தச் செய்தி விவரமாகத் தந்திருக்கிறது!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நகைகள் மாயமானதாகக் கூறி, அவற்றுக்கு குறைந்த அளவு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களுக்கு சில ஆயிரங்களே ஈடு கட்டியிருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானின் நகைகள் விவரம் குறித்து தகவல் தரவேண்டும் என்ற பொதுநல வழக்கின் அடிப்படையில் தேவஸ்தானத்துக்கு அய்தராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில், தேவஸ்தான அதிகாரிகள், திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட எல்லா கோயில்களில் உள்ள நகைகள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

சுவாமி நகைகள் பாதுகாப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்ப தாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு வரையில் ஏழுமலையான் நகைகள், அர்ச்சகர்களின் பாதுகாப்பில் இருந்தன. அதன்பிறகு விஜிலென்ஸ் அதிகாரிகள், தனி கமிட்டி பொறுப்பாளர்கள் கண்காணிப்பில் நகை விவரங்கள் ஆண்டுதோறும் பதிவு செய்து வந்தனர். விலை உயர்ந்த கோமேதகக் கற்கள் வைரக் கீரிடத்தில் இருந்து உதிர்ந்து காணாமல்போய் விட்டதாகக் கூறி அதற்கு தேவஸ்தான் சார்பில் 5 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி மேலும் ஒரு கோமேதக் கல் மாயமாகி விட்டதாகக் கூறி அதற்கு ரூ 200 மட்டுமே செலுத் தப்பட்டுள்ளது. ரத்தினம் பதித்த தங்கச் சங்கிலியில் பதித்திருந்த கோமேதகக் கற்கள் உதிர்ந்துவிட்டதாகக் கூறி, ஒவ்வொன்றுக்கும் ரூ.50 வீதம் செலுத்தியுள்ளனர். மற்றொரு கிரீடத்தில் இருந்த 5 வைரக் கற்கள் மாயமானதாக் கூறி 50 ரூபாய் மட்டுமே செலுத்தப்பட் டுள்ளது. மூலவருக்கு அணிவிக்கப்படும் வைரக் கிரீடத்தில் ஒரு வைரம் மாயமாகிவிட்டதாகக் கூறி, அதற்கு ரூ 10 மட்டுமே செலுத்தியுள்ளனர். மேலும் 13 தங்க நகைகள் தொலைந்து போனதாகக் கூறி 23,850 ரூபாய் மட்டுமே ஈடுகட்டப் பட்டதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. மாயமானதாகக் கூறப்படும் இந்த 13 நகைகள் மட்டும் பல லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது. இவை தவிர 29 கிலோ எடையுள்ள 15 வெள்ளிப் பொருள்கள் காணாமல் போய்விட்டன என கணக்கு காண்பித்துள்ளனர். மேலும் 36 வெள்ளிப் பொருள் கள் உபயோகப்படுத்தாமல் வைத் திருந்ததால் அதன் எடை 411 கிராம் குறைந்துள்ளது எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. மூலவரின் வைரைக் கிரீடத்தில் இருந்த 2 தங்க தாமரைகள் மாய மானதாக ரூ 8 ஆயிரம் ஈடு கட்டி உள்ளனர். கடந்த 2007 மார்ச் 16 ஆம் தேதி 16 பவளம் பொறித்த டாலர் வைத்த தங்க செயினில் டாலர் மட்டும் மாயம் எனக்கூறி ரூ 10 மட்டுமே செலுத்தி உள்ளனர். ரத்தினக் கற்கள் பதித்த சூரியன், சந்திரன் தங்க ஜடை பில்லைகள் மாயமானதாக ரூ 300 ஈடு கட்டி உள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளுக்கு சில ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளனர்.

என்கிறது அந்தச் செய்தி.

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மாயமாகிவிடுமாம் - 200 ரூபாய், 50 ரூபாய், 60 ரூபாய், 10 ரூபாய் என்று இழப்பீட்டுத் தொகை செலுத்துவார்களாம்!

புனிதமானது என்று கூறப்படும் கோயிலில் நகைத் திருட்டுகூட- நகை மாயம் என்ற பெயரில் புனிதம் அடைந்துவிடும் அதிசயம் அல்லது அருள்மிகு செய்தி இது!

திருப்பதி மகாத்மியம் இத்தோடு முடிந்துவிடவில்லை. இன்னொரு செய்தி - அதுவும் திருப்பதி செய்தி.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட திருப்பதியில் உள்ள கோதண்டராமசாமி கோயிலில் 16 கிலோ எடையுள்ள 2 தங்க மாலைகள் காணாமல் போயுள்ளது தெரியவந்தது. (காணாமல் போகும் - மாயமாகும் ஒருபோதும் அது திருட்டு என்று ஆகாது அதுதான் ஏழுமலையானின் சட்டச் சொற்கள்.)

கண்காணிப்பு அதிகாரிகள், கோயிலின் அர்ச்சகர் வெங்கட்ரமண தீட்சிதரிடம் விசாரிக்க முடிவு செய்தார்கள். இது தெரிந்ததும் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

மருத்துவமனையில் விஜிலென்ஸ் அதிகாரிகள் வெங்கட்ராம தீட்சிதரை விசாரித்தார்கள். வெங்கட்ரமண தீட்சிதர் மட்டும் திருடினேன் என்றா வாக்குமூலம் கொடுப்பார்?

திருப்பதி கோயிலின் அகராதியில் காணாமல் போகும், மாயமாகுமே தவிர திருட்டுப்போகுமா?

எனது மகள் திருமணச் செலவுகளுக்காக சுவாமியின் நகைகளை அடகு வைத்தேன் என்றார் அவர்!

காணாமல் போய்விட்டது, மாயமாகி விட்டது என்று சொல்லியிருந்தால் அவரிடம் 50 ரூபாயோ 100 ரூபாயோ இழப்பீட்டுத் தொகை வாங்கிக் கொண்டு கணக்கை நேர் செய்து விட்டிருப்பார்களோ?

அவர் அடகு வைத்தேன் - என்று சொன்னதாலோ என்னவோ அவரைக் கைது செய்துவிட்டார்கள். அவருக்கு உடந்தையாக இருந்ததாக இரு செக்யூரிட்டி ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து விட்டார்கள். திருப்பதி கடையில் அடகு வைக்கப்பட்ட அந்த நகைகளை சென்னையில் உள்ள ஓர் அடகுக் கடையில் இருந்து மீட்டுவிட்டார்கள்காணாமல் போகும், மாயமாகுமே - இப்படிப்பட்ட செய்திகளைப் படிக்கும் திருப்பதி ஏழுமலையானின் பக்தர்களுக்கு என்ன தோன்றும்?

திருப்பதி சென்று பக்த கோடிகள் நேர்த்திக் கடன் என்ற பேரால் மொட்டை அடித்துக் கொள்வதுண்டு பட்டை நாமமும் தரித்துக் கொள்வதுண்டு. ஆனால் பக்தர்கள் தந்த காணிக்கைப் பொருள்களை அபகரித்துக் கொண்டு பக்தர்களுக்கு இலவச மொட்டையும் இலவச நாமமும் போடும் காரியங்கள் அல்லவா திருப்பதியில் நடைபெறுகிறது! என்று நினைப்பார்கள் பக்தர்கள். ஆனால்,

இத்தனையையும் பார்த்துக் கொண்டு சகல சக்திகளும் படைத்த திருப்பதி ஏழுமலையான் சும்மாதானே இருக்கிறார். விஜிலென்ஸ் அதிகாரிகளும், போலீசாரும்தான் பிடிக்கிறார்களே தவிர திருப்பதி வெங்கடாசலபதி யாரையும் பிடித்ததாக தண்டித்ததாக செய்தி எதுவும் வருவதில்லையே; ஏன் என்று எந்த ஒரு பக்தராவது நினைப்பாரா?

"முரசொலி",
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல