வாய்வழியாக உண்ணக்கூடிய இவற்றை நாள் தோறும் சாப்பிட வேண்டும். ஒவ்வொரு 28 நாட்களுக்குரிய மாத்திரைப் பட்டையில் ஏழு மாத்திரைகள் இரும்புச் சத்துக்காகக் கொடுக்கப்படுபவை.
முதலில் மாத்திரை உட்கொள்வதை மாதவிலக்கான ஐந்தாவது நாளில் தொடங்க வேண்டும். தவறினால் கருத்தரிப்பதைத் தடுக்க முடியாமல் போகலாம்.
மாத்திரைகளை உட்கொள்ளும் பெண்கள் உடலுறவில் iதரியமாக ஈடு படலாம். கருத்தரிக்க விரும்பும் போது மாத்திரைகளை நிறுத்தி விடலாம். முதல் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போட விரும்பும் பெண்களுக்குப் பயன்படும். ஒரு சிலருக்கு குமட்டல், தலைவலி, அதிக இரத்தப் போக்கு, உடல் எடை கூடுதல் போன்ற பக்க விளைவுகளும் வருவதுண்டு.
கருத்தடை வளையம்:
காப்பர் டி எனப்படும் இது, கருப்பையின் வாயில் பொருத்தப்பட்டு, கருத்தரிக்காமல் தடுக்கப்படுகிறது. இதைப் பொருத்திக் கொள்ள மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை. குழந்தை பெற்ற பெண்களுக்கான பாதுகாப்பான முறை. இன்னொரு குழந்தை வேண்டும் போது அகற்றி விடலாம். நம்பகமானது. இதிலும் அதிக இரத்தப்போக்கு, வயிற்று வலி போன்ற சில விளைவுகள் வரக்கூடும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதை மாற்ற வேண்டும்.
பெண்ணுறை:
மென்மையான, இரப்பர் குழலாக அமைந்த சாதனம் இது. மிகவும் பாதுகாப்பானது. பயன்படுத்தும் முறையை ஒரு முறை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, பிறகு தாமாகவே பொருத்திக்கொள்ளலாம். உடலுறவுக் குப் பிறகு குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு அது அதனிடத்திலேயே இருக் குமாறு வைக்கப்பட வேண்டும்.
நுரை மாத்திரைகள்:
இவைப் பெண்ணுறுப்பினுள் வைக்கப்படும் மாத்திரைகள். இவை இரத்தத்தில் கலந்து, குழைந்து, நுரை போன்ற நிலையை உருவாக்குகின்றன. உறவின் போது கருவணுக்களைக் கொல்லும் சக்தி உடையவை. இதை உபயோகிப்பதும் எளிது. உறவுக்கும் இடையூறு இருக்காது.
ஆனாலும் இதை முழுமையாக நம்ப முடியாது. உறவுக்குக் குறிப்பிட்ட நிமி டங்கள் முன்னதாகப் பொருத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை உற வின் போதும் புதிய மாத்திரை தேவைப்படும். மாத்திரைகள் நுரைத் தன் மையை இழந்துவிட்டால் பலன் இருக்காது.
பாதுகாப்பு நாட்கள்:
மாதவிலக்கு ஏற்பட்ட நாளில் இருந்து முதல் எட்டு நாட்களும், பின் எட்டு நாட்களும் கர்ப்பம் ஏற்படாத நாட்களாகும். உதாரணத்திற்கு ஜூன் 1-ம் தேதி மாதவிலக்கு ஏற்பட்டால் 8-ம் தேதி வரையிலும், 21-ம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரையிலும் கர்ப்பம் ஏற்படாத காலமாகும். இடைப்பட்ட நாட்க ளிலேயே கருவுறுதல் நிகழும்.
இம் முறை மாதவிலக்கு சுழற்றி சரியாக, அதாவது 28 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் வரும் பெண்களுக்கு மட்டுமே பலனளிக்கும். முறையற்ற மாத விலக்கு இருக்கும் பெண்கள் இம்முறையை நம்ப வேண்டாம்.
டியூபக்டமி:
குழந்தை பிறந்த மூன்றாவது நாள் தொடங்கி, எந்தக் காலத்திலும் இதைச் செய்துகொள்ளலாம். நிரந்தர முறை. முற்றிலும் நம்பகமானது. இதயம், கல்லீ ரல் போன்றவற்றில் ஏதேனும் கோளாறுகள் இருக்கும் பெண்களுக்கு மற்ற கருத்தடை முறைகளை உபயோகிப்பது கடினமாக இருக்கலாம். அவர்களுக்கு இம்முறை உகந்தது.
லேப்ராஸ்கோப் முறையில் நவீன கருத்தடை:
இது ஒரே நாளில் செய்யப்படுகிற எளிய முறை. வயிற்றைக் கிழிக்காமல் தொப்புளுக்குக் கீழ் லேப்ராஸ்கோப் கருவியைச் செலுத்தி கருக்குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டு அடைக்கப்படுகின்றன. அதாவது குழாயை மேலே கருவி யின் மூலம் தூக்கி, இரப்பர் வளையத்தின் மூலம் குழாய் நெருக்கப்படும். இம்முறை எந்தவிதப் பக்கவிளைவும் இல்லாதது. எல்லா ஊர்களிலும், மகளிர் மருத்துவமனைகளிலும், குடும்பக் கட்டுப்பாட்டு நிலையங்களிலும் இலவசமாக செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக