இந்தோனேசியத் தீவான ஜாவாவில் 1100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்கள் இரண்டு புதையுண்டிருப்பது அகழ்வாராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜாவாவில் யோக்யகார்த்தா நகரில் இந் தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மசூதியருகில் நூலக மொன்றை அமைப்பதற்கான நடவடிக்கை கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நூலக கட்டிடத்துக்கான அத்திவாரத்துக்காக நிலத்தை தோண்டியபோது கல்சுவர் ஒன்று வெளிப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரசாங்க தொல்பொருள் ஆய்வாளர்கள் மேற்படி பிரதேசத்திலான அகழ்வாராய்ச்சியை தொடர்ந்தனர்.
35 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ் வாராய்ச்சியில் 1,100 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரு கோவில்கள் வெளிப்பட்டன.
6 மீற்றர் நீளம் மற்றும் உயரத்தைக் கொண் டுள்ள முதல் கோவிலில் விநாயகர் சிலை, ஒரு லிங்கம், ஒரு சக்தி வழிபாட்டைக் குறிக்கும் யோனி பீடம் என்பன இருந்தன.
இந்தக் கோவிலுக்கு அண்மையில் 6 மீற்றர் நீளத்தையும் 4 மீற்றர் உயரத்தையும் கொண்ட பிறிதொரு கோவில் கண்டுபிடிக்கப்பட் டது.
அக்கோவிலில் ஒரு லிங்கம், யோனி பீடம், இரு பலி பீடங்கள், இரு நந்திகள் என்பன கண்டெடுக்கப்பட் டுள்ளன.
இந்நிலையில் மேற்படி கோவில்களிலிருந்து பெறப்பட்ட சிலைகள் அனைத்தும் தொல் பொருள் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
அதேசமயம் கண் டுபிடிக்கப்பட்ட கோவில்களைச் சுற்றி வேலி போட ப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கோவில்கள் விரைவில் பொது மக்களின் பார் வைக்கு விடப்படவுள்ளதாக மேற்படி பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த சுவர் சோனோ முஹம்மது தெரிவித்தார்.
முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்தோனேசியாவின் தீவுகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்து மதமும் பௌத்த மதமும் நிலைபெற்று விளங்கியதாக வரலாறு கூறுகிறது.
இந்திய இராஜராஜ சோழ மன்னரின் மகனான இராஜேந்திரன், மலேசியாவிலுள்ள கடாரத்தை வென்று "கடாரம் கொண்டான்' என்ற சிறப்புப் பட்டத்தை பெற்றார். இந்நிலையில் அவர் மலேசி யாவிலிருந்து மேலும் முன்னேறி இந்தோனேசியத் தீவுகளையும் வென்றதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
இந்தோனேசியாவில் புத்த மதம் பரவ ஆரம்பித்து 300 ஆண்டு களுக்குப் பின், கி.பி. 5 ஆம் நூற்றாண்டிலேயே அங்கு இந்து மதம் பரவியது. இந்நிலையில், அக்காலகட்டத்தில் ஆட்சி செய்த இந்தோனேசிய மன்னர்கள் இரு மதங்களையும் தழுவினர். தொடர்ந்து 15 ஆம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் இந்தோ னேசியாவில் பரவ ஆரம்பித்தது.
தற்போது இந்தோனேசியாவில் முஸ்லிம் கள் 90 சதவீத·ம், பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் 10 சதவீதமும் உள்ளனர்.
தற்போது ஜாவா தீவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள இந்துக் கோவிலுக்கு அருகில் நதி யொன்றும் வடக்கே 12 கிலோமீற்றர் தொலைவில் மெரபி என்ற எரிமலையும் உள்ளன. இந்நிலையில் கோவில் கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்குள் இந்த எரிமலையிலிருந்து வெளிப்பட்ட தீக்குழம்பு அருகிலுள்ள நதியின் வழியாக வந்து கோவிலை மூடியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது தொடர்பில் மேற்படி ஆய்வில் பங்கேற்ற தொல்பொருள் ஆய்வாளரான இன் டுங் பஞ்ச புத்ரா, இந்தக் கோவிலில் வேறெந்த அகழ்வாராய்ச்சியிலும் கிடைக்காத அளவு அதிக தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறினார்.
கதீஜா மாதா பல்கலைக்கழகத்தின் தொல் பொருளியியல் துறை பேராசிரியரும் தெற்காசிய இந்து மத ஆய்வு நிபுணர்களில் ஒருவருமான திம்புல் ஹார்யோனா விபரிக்கையில், ""இந்தோனேசியா 3 மதங்களும் கலந்த கலவையாக இதுவரை உள்ளது. அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட கோவில்கள் பாதி இந்துக் கோவில் அமைப்பிலும் பாதி பௌத்த கோவில் அமைப்பிலும் உள்ளன. சில நூற்றாண்டுகள் பழைமை யான மசூதிகளின் கலசங்கள் இந்துக் கோவில்களை பிரதிபலிப்பனவாக உள்ளன.
அவை மெக்காவை நோக்கி அமைக்கப்படாமல் இந்துக் கோவில்கள் போன்று கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்தோனேசியக் கலைகள், முஸ்லிம்களின் வாழ்க்கை முறை, உணவு, சடங்குகள் என்ப வற்றில் இந்து மற்றும் பௌத்த மத செல்வாக்கை அவதானிக்க முடியும்'' என்று கூறி னார்.
திங்கள், 1 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக