புதன், 3 மார்ச், 2010

வழிகாட்டத் தவறுகின்றவற்றை பஞ்சாங்கங்கள் என்பதா? பஞ்சதந்திரங்கள் என்பதா?

தமிழிலே இந்து மதம் சார்ந்த பல வகையான பஞ்சாங்கங்கள் வருடாந்தம் வெளியிடப்படுகின்றன. அவற்றை ஆழ்ந்து கவனித்தால் அவற்றுள் எவை இரண்டு பஞ்சாங்கமாவது ஒன்று போல மற்றொன்று அமைந்துள்ளதா என்றால் இல்லையென்று கூறுவதில் தவறில்லை. சிவாலயங்களில் நவக்கிரஹங்களைப் பிரதிஷ்டை பண்ணியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். நவக்கிரஹங்கள் ஒன்பதும் ஒன்றையொன்று பார்ப்பதில்லை. அது போலத்தான் பஞ்சாங்கங்களும். ஒன்றுபோல வேறொரு பஞ்சாங்கம் இருப்பதில்லை. அதனால் பஞ்சாங்கத்தை அனுசரிக்கின்ற இந்து மக்கள் பெரும் குழப்பங்களையும் சிரமங்களையும் வேற்று மதத்தவர்களின் ஏளனப்பார் வைகளையுங்கூட எதிர்நோக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இந்து மதப் பஞ்சாங்கங்கள் மக்களைப் பெரும் சங்கடங்களுள் ஆழ்த்துகின்றன என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை.

பஞ்சாங்கம் என்றால் என்ன?

பஞ்சாங்கம் என்ற பதம் சமஸ்கிருத மொழியில் இருந்து பிறந்த ஒரு சொல்லாகும். "பஞ்ச" என்றால் ஐந்து எனவும் "அங்கம்" என்றால் உறுப்புகள் எனவும் அர்த்தப்படும். அந்த ஐந்து அம்சங்களாவன வாரம், திதி, கரணம், யோகம், நட்ஷத்திரம் ஆகியவையே. இந்து மக்களுக்கு அவர்களின் நாளாந்த, வாராந்த, மாதாந்த, வருடாந்த மத அனுட்டானங்களைக் கைக்கொள்வதற்கு உரிய தினங்கள், காலநேரங்கள் முதலியவற்றைத் தெளிவுபடுத்தக்கூடிய அந்த ஐந்து அம்சங்களை உள்ளடக்கிய ஒரு புனிதமான நூலே பஞ்சாங்கம் எனப்படுவது. இவ்வைந்து அம்சங்களின் நிலைப் பாட்டை அவதானித்து தங்களுக்கு வேண்டிய சுப அசுப ஹோரைகளை அறிந்து தங்கள் நாளாந்த கருமங்களை மேற்கொள்வது இந்து மக்களிடையே காலாகாலமாக நிலவி வருகின்ற பழக்கம். ஆனால் இங்கே தற்காலத்துப் பஞ்சாங்கங்கள் மக்களுக்குக் காண்பிக்கின்ற வழியாது?

இங்கு வெளியிடப்படுகின்ற பஞ்சாங்கங்களில் காண்பிக்கப்படுகின்ற வாரம், திதி, கரணம், யோகம், நட்ஷத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருப்பதை அவதானித்தால் பல சந்தர்ப்பங்களில் ஒன்றுக்கொன்று முரண்பாடாக, கால அளவீட்டில் பாரிய இடைவெளிகளைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. அப்படியான முரண்பாடுகளைப் பார்க்கின்ற மக்கள் பலவிதமான சிரமங்களையும், தடுமாற்றங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது. எது சரி எது பிழை என்று கண்டறிய முடியாத இக்கட்டான நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.

பஞ்சாங்கம் என்பது வான சாஸ்திரம், ஜோதிடம், கணிதம் முதலிய அருங்கலைகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவதாகும். இவ்வருங் கலைகளின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்ததில் இந்து மதத்தில் தோன்றிய மாமேதைகளான மஹ ரிஷி வசிஷ்டர், வாராஹமிஹிரர், பாஸ்கராச்சாரியார் போன்ற தவ சிரேஷ்டர்களும் வேறும் பல வேதவிற் பன்னர்களும் குறிப்பிட்டுக் கூறத்தக்கவர்கள். வரலாற்றுக்கு முன்பிருந்தே இவற்றின் நுட்பங்கள் கண்டறியப்பட்டு இந்து மக்களால் அனுசரிக்கப்பட்டு வந்துள்ளன. காலா காலமாக இந்து மத மேதைகளால் கண்டுபிடிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட அரிய கலைகளான வான சாஸ்திரம், ஜோதிடம், கணிதம் முதலியவற்றையோ அல்லது அவற்றின் அடிப்படையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வகுக்கப்பட்ட பஞ்சாங்கத்தையோ தவறானவை என்றோ அவற்றை நம்புவது மூடத்தனமான கொள்கை என்றோ ஒதுக்கிவிட முடியாது. அவையாவும் சரியானவையும், உண் மையானவையுமெனத் தற்கால விஞ்ஞான தொழில் நுட்பங்கள் மூலம் கண்டறிந்து நிரூ பிக்கப்பட்டுள்ளது. வேதங்களில் தெரிவிக்கப் பட்டுள்ள ஒரு சில தீர்க்கமான கணிப்பீடு களைப் பற்றி அவதானித்தால் அவற்றின் உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்ளலாம்.

கணிதத்தில் பூஜ்ஜியம் (0) என்ற இலக்கத்தையும் அதன் பெறுமானத்தையும் முதன் முதலில் கண்டறிந்து வெளிப்படுத்தியது இந்து மத கணித மேதைகளே என்பது உலகறிந்த விட யம்.

கிரகங்கள், நட்ஷத்திரங்களின் துல்லியமான சஞ்சாரம் பற்றியும், அவற்றின் நிலைப்பாடுகள் பற்றியும், அவற்றின் ஆகர்ண சக்தியால் பூமியில் ஏற்படுகின்ற மாற்றங்கள், விளைவுகள் பற்றியும், அதனால் மனிதர்கள் அனுபவிக்கின்ற சுகதுக்கங்கள் பற்றியும் வேதங்களில் ஆதாரங்களுடன் நிரூபித்து வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

ஒரு வருடத்தின் அளவீட்டை 365.
2563627 நாட்களெனக் கண்டுபிடிக்கப்பட்டு வேத சாஸ்திரங்களில் தெவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத்தில் வளர்ச்சி கண்டுள்ள தற்காலத்தில் அதி உயர் திறன்கொண்ட தொலைநோக்கிள், கணினிகள் எலக்ரோனிக் உபகரணங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் பிரகாரம் கணிக்கப்பட்ட கணிப்பீட்டிலும் பார்க்க இந்தக் கூற்று 1. 4 விநாடிகளே அதிகமெனக் கண்டறியப்பட் டுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எதுவிதமான கருவிகளோ உபகரணங்களோ கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இவ்வளவு துல்லியமாக முனிவர்களாலும், யோகிகளாலும் கணிப்பீடு செய்யமுடிந்ததென்றால் அதைக் கண்டுபிடித்துக் கூறிய அதே மேதை களால் கணிக்கப்பட்ட ஜோதிடத்தையோ அல்லது அதிலிருந்து பிறந்த பஞ்சாங்கத்தையோ தவறானவை என்றோ மூடத்தனமானவை என்றோ கருதமுடியாது. அவற்றில் பல உண்மைகள் பொதிந்துள்ளன என்பது உறுதியாகத் தெரிய வருகின்றது.

பஞ்சாங்கத்தில் பிரதானமாக மூன்று வகைகள் உள்ளன. ஒன்று வாக்கியப் பஞ்சாங்கம் மற்றது கணித பஞ்சாங்கம், அடுத்தது சூரிய சித்தாந்த பஞ்சாங்கம் என்பவையாகும். இவற்றுள் சூரிய சித்தாந்த பஞ்சாங்கம் என்பது மிகத் தொன்மை வாய்ந்தது. கிறிஸ்து சகாப்தத்திற்கு முற்பட்ட காலத்தில் அது வகுக்கப்பட்டு நடை முறையில் இருந்து வந்துள்ளது. அதனை அடியொற்றி எழுந்ததே வாக்கியப் பஞ்சாங்கம் எனப்படுவது. சூரிய சித்தாந்த பஞ்சாங்கத்தில் காணப்பட்ட கணிப்புகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டே வாக்கியப் பஞ்சாங்கம் வகுக்கப்பட்டது. இவ்விரு பஞ்சாங்கங்களும் வகுக்கப்பட்டதும் பாவனையில் விளங்கியதும் வெவ்வேறு பிரதேசங்களில் எனப்படுகின்றது. இற்றைக்குச் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்புதான் திருக்கணித சித்தாந்த பஞ்சாங்கம் கணிப்பீடு செய்யப்பட்டுப் பாவனைக்கு வந்துள்ளது.

நட்ஷத்திரங்கள், கிரகங்கள், உபகிரகங்கள் போன்றவற்றின் சஞ்சாரத்தை முனிவர்கள், யோகிகள் போன்ற தவ சிரேஷ்டர்கள் தங்கள் கண்களால் உன்னிப்பாக அவதானித்தும், ஞானத்தால் கண்டறிந்தும் வெளிப்படுத்திய வாய்மொழி மூல வாக்கிலிருந்து பிறந்த வையே சூரிய சித்தாந்த பஞ்சாங்கம், வாக்கிய சித்தாந்த பஞ்சாங்கம் எனக் கூறப்படு கின்றது. அவற்றில் தெரிவிக்கப்பட்டிருந்த சூரிய சந்திர நட்சத்திரங்களின் சஞ்சார கணிப்பீட் டில் வழுவிருப்பதாகக் கூறிப் புதிதாகக் கணிப் பீடு செய்து வெளியிடப்பட்டதே திருக்கணித சித்தாந்த பஞ்சாங்கமாகும்.

ஆரம்பத்தில் இவற்றுக்கிடையே கால அள வீட்டில் மிகப் பெரிய வித்தியாசம் காணப்பட வில்லை. ஆயினும் காலப் போக்கில் (கணிப் பீடு செய்பவர்களின் தவறோ என்னவோ) அவற்றின் கணிப்பீடுகளுக்கு இடையே நாடி விநாடிக் கணக்கிலும் மணிக் கணக்கிலும் நாட் கணக்கிலும் வாரக் கணக்கிலும் சில சந்தர்ப்பங்களில் மாதக் கணக்கில்கூட வித்தியாசங்கள் காணப்படுகின்றன. கணிப்பீட்டில் எங்கோ தவறு நேர்ந்துள்ளமை இதனால் தெட்டத் தெளிவாகத் தெரிய வருகின்றது. அவற்றைப் பசீலனை செய்து நிவர்த்தி செய்யவோ அல்லது எது சரி எது பிழை என்று ஆதாரத்துடன் நிரூபிப்பதற்கோ யாரும் முன் வருவதாகவும் தெயவில்லை.

இவ்வாண்டுக்கான பஞ்சாங்கங்களில் காணப்படுகின்ற முரண்பாடுகளில் ஒரு சில உதாரணத்துக்காக: 1. விரோதி வருடப் பிறப்பு ஒரு பஞ்சாங்கத்தில் 13.04.2009 திங்கட்கிழமை இரவு 11.07 மணிக்கெனவும், மற்றைய பஞ்சாங்கத்தில் 14.04.2009 நள்ளிரவு 12.47 மணிக்கெனவும் கூறப்பட்டுள்ளது. இரு பஞ்சாங்கங்களின் கணிப்புகளுக்கும் இடையே 100 நிமிட இடை வெளி காணப்படுகின்றது. இவை இரண்டையுமே சரியெனக் கொள்ள முடியாது. இவற்றுள் ஏதோ ஒன்று சரியானதாகில் மற்றையது பிழையானது. எது சரி எது பிழை? அல்லது இரண்டுமே பிழையோ என்று கூட எண்ணத் தோன்று கின்றது. இவற்றுள் முதல் பஞ்சாங்கத்தை அனுசரிப்பவர்கள் புத்தாண்டை வரவேற்ற பின்னர் மற்றைய பஞ்சாங்கத்தை அனுசரிப்பவர்கள் 1 மணி 40 நிமிடங்கள் காத்திருந்து புத்தாண்டை வரவேற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையை பஞ்சாங்கங்கள் தோற்றுவித்துள்ளன.
எம்மைப் பார்த்துப் பிற மதத்தவர்கள் ஏளனம் செய்வதில் தவறில்லையே.

2. பஞ்சாங்கத்தில் முக்கிய அம்சமான திதி என்பது சந்திரனின் சுழற்சியை மையமாகக் கொண்டு கணித்து வெளியிடப்படுவது. அது சுக்கில பட்ஷத்தில் 15 நாட்களும் (அமா வாசை தொடக்கம் சதுர்த்தசி ஈறாக), கிருஷ்ண பட்ஷத்தில் 15 நாட்களும் (பூரணை தொடக்கம் சதுர்த்தசி ஈறாக) ஆக மொத்தம் 30 நாட்களுக்கு நீடிப்பதாகும். விழாக்கள், பண்டிகைகள், தேவாலய உற்சவங்கள், பிதிர்க் காரியங்கள் போன்ற பல இந்து மத வைபவங்கள் திதியை அவதானித்தே நிர்ணயிக்கப்படுவது வழக்கம். அதிலுமே பல குழப்பங்களைப் பஞ்சாங்கங்கள் தோற்றுவித்துள்ளன.

பஞ்சாங்கங்களில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த ஆண்டு கந்தஷஷ்டி விரதத்தை அனுஷ்டித்தவர்களில் ஒரு பகுதியினர் குறிப்பிட்ட ஒரு பஞ்சாங்கத்தின் பிரகாரம் 5 நாட்கள் விரதம் அனுஷ்டித்து 23.10.2009 வெள்ளிக் கிழமை சூரன்போர் தரிசித்து சனிக்கிழமை பாரணை பண்ண வேண்டியதாகவும் மற்றைய பஞ்சாங்கத்தை அனுசரிப்பவர்கள் 6 நாட்கள் விரதம் அனுஷ்டித்து 24.10.2009 சனிக்கிழமை சூரன்போர் தரிசித்து ஞாயிற்றுக்கிழமை பாரணை பண்ண வேண்டியதாகவும் ஏற்பட்டு விட்டது.

3. உத்தராயணத்தில் சஞ்சரித்த சூரிய பக வான் தட்சிணாயணத்தில் சஞ்சரிக்க ஆரம்பிக் கும் தினம் ஆடி மாதம் முதலாம் திகதி என்பது இந்து மதக் கோட்பாடு. இந்து மக்களின் முக்கிய விரத தினங்களில் ஒன்றான ஆடிப்பிறப்பு தினத்தை நிர்ணயிப்பதிலும் இவ்வாண்டு இரு பஞ்சாங்கங்களுக்கும் இடையே ரண்பாடு காணப்பட்டுள்ளது. ஒரு பஞ்சாங்கத்தில் ஆடிப் பிறப்பு 16.07.2009 வியாழக்கிழமை என்றும் மற்றையதில் 17.07.2009 வெள்ளிக்கிழமை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எப்படி இருக்கிறது?

4. இந்த வருஷத்திற்கான விநாயக விரதாரம்ப தினத்தை நிர்ணயிப்பதில் இரு பஞ்சாங்கங்களுக்கும் இடையே குழறுபடிகள் காணப்ப டுகின்றன. ஒன்றில் விநாயக விரத ஆரம்பம் 02.12.2009 புதன்கிழமை எனவும் மற்றையதில் 03.12.2009 செவ்வாய்க்கிழமை என்று உள்ளது. இதனால் ஒரு பஞ்சாங்கத்தை ஆதரிப்பவர்கள் 20 நாட்களும் மற்றைய பஞ்சாங்கத்தைக் கைக்கொள்பவர்கள் 21 நாட்களும் விரதம் அனுஷ்டிக்க வேண்டிய தலைவிதிக்கு ஆளாகின்றனர். என்னே பரிதாபம்!

5. இந்துக்களின் பிரதான விரதங்களுள் மஹா சிவராத்திரி விரதம் ஒன்று. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அந்த விரதத்தை மிக்க கரிசனையுடன் அனுஷ்டிப்பது வழக்கம். இவ்வாண்டுக்கான மஹா சிவராத்திரி தினத்தைத் தெளிவுபடுத்துவதில் இரண்டு பஞ்சாங்கங்களுக்கும் இடையே காத தூர இடைவெளி காணப்படுகின்றது. இந்தக் குழறுபடியைப் பார்த்து இந்துக்கள் மிக்க வேத னையையும் மன விரக்தியையும், வெட்கத்தையும் அடைகின்றனர்.

சாதாரணமாக சிவராத்திரி மாசி மாதத்தில் சம்பவிப்பதுண்டு. ஆனால் இவ்வாண்டுக்கான பஞ்சாங்கம் ஒன்றில் தை மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை (12.02. 2010) மஹா சிவ ராத்தி விரதம் ஏற்படவுள்ளதாகவும் மற்றைய பஞ்சாங்கத்தில் மாசி மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை (13. 03. 2010) ஏற்படவுள்ளதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விரத தினத்தை நிர்ணயிப்பதில் இரண்டு பஞ்சாங்கங்களுக்கும் இடையே ஒரு மாத இடைவெளி காணப்படுகின்றது. மஹா சிவராத்திரிதின விடுறையாக 13. 03. 2010 ஆந் திகதியை பிரகடனப்படுத்தி உள்ளனர்.
இப்படியான தப்பும் தவறுமான வெளிப்படுத்துகைகள் நிச்சயமாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. இருந்தும் அதைச் செய்வதற்கு எவரும் துணிச்சலுடன் களத்தில் இறங்கியதாகத் தெரியவில்லை. கற்ற கல்விமான்கள்கூட இவ்விடயத்தில் பெரிதும் அக்கறை காண்பிக்காது மௌனம் சாதிப்பது வேதனைக்குரிய விடயம்.
ஒரு சிலர் இவர் கூறுவது சயானது, அவர் கூறுவது தவறானது என்றோ அல்லது அவர் கூறுவது சயானது, இவர் கூறுவது தவறானது என்றோ சில ஆதாரங்களை மேற்கோள் காட்டிப் பத்திரிகைகளில் அறிக்கை விடுப்பதோடு அமைந்து விடுகின்றனர். தவறானவரைத் துணிந்து தட்டிக் கேட்கவோ, கண்டிக்கவோ, தண்டிக்கவோ முன்வருவதில்லை. இப்படியான அக்கறையற்ற அவல நிலைமை நமது மதத்திற்கு ஏன் ஏற்பட்டுள்ளதோ தெரியவில் லை.

6. முக்கியமான ஐந்து விடயங்களில் மாத்திர மன்றி வேறும் சில சாதாரண விடயங்களில் கூட இரு பஞ்சாங்கங்களாலும் ஒத்துப் போக டியவில்லை. உதாரணத்திற்கு இந்து மதத்தின் வளர்ச்சிக்கு அரும்பெருஞ் சேவையாற்றிய மத சிரேஷ்டர்களின் குரு பூஜை தினங்களை எடுத்துப் பார்க்கலாம். அத் தினங் களை நிர்ணயிப்பதிலும் இரு பஞ்சாங்கங்களுக்கும் இடையே தவறான வெளிப்பாடுகள் காணப்படுகின்றன. சைவ சமய குரவர்கள் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசு நாயனாரின் குருபூஜை தினம் சித்திரை மாதம் 7 ஆம் திகதி என ஒரு பஞ்சாங்கத்திலும் 8 ஆம் திகதி என மற்றையதிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் எவருடைய கூற்றை நாம் சரியானதென நம்புவது நம்பி அனுசரிப்பது?

வேற்று மதங்களில் இப்படியான விடயங் களைக் கையாள்வதில் கடைப்பிடிக்கப்படு கின்ற ஒழுங்கு றைகள், கட்டுப்பாடுகள் உள்ளன. அவர்களைப் பார்த்தாவது எமது மதத்தில் காணப்படுகின்ற வழுக்களை நாம் திருத்திக் கொள்ள வேண்டியது அவசியம் காலத்தின் தேவையுமாகும். தவறும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பும், இழப்பும் இந்து மதத்திற்கேயன்றி பஞ்சாங்க சோதிடர்களுக் கோ அல்லது வேறு எவருக்குமோ இருக்காது.
பஞ்சாங்கங்கள் ஏற்படுத்துகின்ற இப்படியான குழறுபடிகளைப் பார்த்து பிற மதத்தவர்கள் செய்கின்ற இகழ்ச்சிகள் பழிப்புகள் பரிகாசங் களைப் பொறுத்துக் கொள்ள முடியாத பட்சத்தில் இந்துக்கள் வேற்று மதங்களை நாடிச் செல்லவும் வாய்ப்புண்டு.

உலகெங்குள்ள கிறிஸ்தவ மக்கள் தாங்கள் வசிக்கின்ற நாட்டில் டிசம்பர் மாதம் 31 ஆம் நாள் முடிந்து நள்ளிரவு 12.00 மணியானதும் தங்கள் புத்தாண்டை வரவேற்கின்றனர். அது போலவே நத்தார், பெரியவெள்ளி, உயிர்த்தெழுந்த ஞாயிறு போன்ற பெருநாட்களையும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் குறிப் பிட்ட திகதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் கொண்டாடுவதைக் காணலாம்.

கிறிஸ்தவ தலைமைப் பீடங்கள் அவற்றை நிர்ணயிக்கின்றன. கண்காணிக்கின்றன. அப்படியான ஒரு கட்டுப்பாடு ஒழுங்கு முறை எமது மதத்திலும் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இல்லையா?

ஏனைய மதக் கட்டுப்பாடுகளையும் ஒழுக்க நெறிகளையும் பார்த்தாவது இந்து மத சிரேஷ்டர்கள் ஒன்று கூடி ஒரு சபையை அமைத்தோ அல்லது பஞ்சாயத்துக் கூடியோ அலசி ஆராய்ந்து இதற்கான தீர்க்கமான தீர்வொன்றைக் காண வேண்டும். சரியான பாதையில் இட்டுச் செல்லத் தவறி, மக்களை இருட்டிற்குள் தள்ளிக் குருடர்கள் ஆக்குகின்ற பஞ்சாங்கங்களிடம் இருந்து இந்து மதத்தையும், இந்து மக்களையும் காப்பதற்கு ஆவன செய்ய வேண்டியது அவர்களுடைய கடமையும் அவசியமாகும். தவறும் பட்சத்தில் பஞ்சாங்கங்களில் நம்பிக்கையை இழப்பவர்கள் அவற்றை ஒறுத்து ஒதுக்குகின்ற நிலைமை ஏற்படக்கூடும் என்பதில் ஐயமில்லை.

சரியான பாதையில் இந்து மக்களை வழி நடத்திச் செல்லத் தவறுகின்ற இவைகளை யெல்லாம் பஞ்சாங்கங்கள் என்பதா? அல்லது பஞ்சதந்தந்திரங்கள் என்பதா?


சி.வ. இரத்தினசிங்கம்

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல