பெண்ணின் இதயத்தின் எடை 224 கிராம், ஆணின் இதயத்தின் எடை 280 கிராம் ஆகும். மேலும் இதயத் துடிப்புத் திறன் பெண்களுக்கு 10 சதவீதம் அதிகமாகவும், உடற்பயிற்சியின்போது ஆக்ஸிஜன் பயன்படுத்தும் திறன் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு 15 முதல் 20 சதவீதம் குறைவாகவும் உள்ளது.
உலகம் முழுவதும் மாபெரும் நோயாக இதயநோய் முதலிடத்தை வகிக்கிறது.
வரும் 2016 ஆம் ஆண்டில் ஆறு கோடியே 80 லட்சம் பேர் இதய் நோயகளால் பாதிக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
நீரிழிவு நோய்,உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், புகைப் பழக்கம் ஆகியவற்றாலும் இதய நோய்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். இதய நோய் இன்றி சுகமாக வாழ்ந்திட நம் அன்றாட வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களை உதாசீனப்படுத்தாமல் பின்பற்றினாலே போதும்.
உடற்பயிற்சி செய்யாததால் இதயம் முதுமையடைகிறது. எடை அதிகரிக்கிறது. ஒவ்வொரு முறை இதயம் துடிக்கிற போதும், ரத்தம் சரியாக பம்ப் செய்யப்பட, இதயத்துக்கு உடற்பயிற்சி அவசியம். முறையான உடற்பயிற்சி, ரத்தத்திலுள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. தவிர, ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை சரியாக வைத்து, நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. உயர் ரத்த அழுத்த அபாயங்கள் தவிர்க்கப்படுகின்றன. உடம்பு மட்டுமில்லை, இதயம் ஆரோகியமாக இருக்கவும் உடற்பயிற்சி அவசியம்.
சிகரெட், புகையிலைப் பழக்கங்களுக்கு தடா போடுங்கள். இதனால் ரத்தக் கொழுப்பின் அளவு குறையும். ரத்தம் உறைவது தடுக்கப்படும். ரத்தக் குழாயில் திடீர் அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். முறையாக உடற்பயிற்சி செய்கிறவர்கள், சிகரெட் பழக்கத்தை நிறுத்தும் முயற்சியில் மற்றவர்களைவிட சீக்கிரம் வெற்றி பெறுகிறார்கள்.
முழு தானிய உணவு, பழங்கள், காய்கறிகள், பருப்பு வகை, மீன், சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கார்ன் எண்ணெய் போன்றவை இதயத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவுபவை.
ஆண்களை விட பெண்களுக்கே அதிக பாதிப்பு ஏற்ப்படுகிறதாம்.
பெண்களுக்கு இதயப் பிரச்னை எப்போது?
மாதவிடாய் நின்றவுடன்...: பொதுவாக பெண்களைவிட ஆண்கள் 10 ஆண்டு முன்னதாகவே இதய நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் நிலை வரும்போது இதயநோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.
மாதவிடாய் நிற்கும்போது பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மேன் சுரப்பது குறைந்து விடுவதால் இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.
கருத்தடை மாத்திரை: 1960-ல் தரப்பட்ட கருத்தடை மாத்திரைகளில் புரொஜஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு அதிகமாக இருந்தால், அந்தக் காலத்தில் வயது முதிர்ந்த புகை பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருந்தது.
ஆனால் இப்போது மருத்துவ முன்னேற்றத்தின் காரணாக கருத்தடை மாத்திரைகளில் ஹார்மோன்களின் அளவுகள் மிகவும் குறைவாக உள்ளதால் இதய நோய் வரும் வயாப்பு குறைந்து காணப்படுகிறது.
உயர் ரத்த அழுத்தம், புகை பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள டிரைகிளிசரைடு எனும் ஒரு வகை கொழுப்புச் சத்தின் அளவு அதிகமானாலும் இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.
ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போது "எச்டிஎல்' என்ற நல்ல கொழுப்புச் சத்தின் அளவு குறையும். "எல்டிஎல்' என்ற கெட்ட கொழுப்புச் சத்தின் அளவு அதிகமாகும். இந்த நிலையில் இதயநோய் வரும் வாய்ப்பு பெண்களுக்கு அதிகமாகிறது.
மருத்துவரை ஆலோசிக்காமல் மருந்துகளை நிறுத்தி விடுவதும் தொடர்வதும் சில பிரச்னைகளை உருவாக்கும். தலைவலி, மயக்கம், மூட்டுவலி அல்லது வீக்கம், மூக்கில் ரத்தம் வடிதல், இருமும்போது ரத்தம் வருதல், மாதவிடாய் சமயத்தில் அதிக ரத்தப்போக்கு, வயிற்றுக் கோளாறு, அஜீரணம், வயிறு எரிச்சல், குறைவான ரத்த அழுத்தம், தூக்கம் அதிகரித்தல் அல்லது குறைதல், வறண்ட இருமல் போன்ற பிரச்னைகள் இருந்தால் மருத்துவரிடம் செல்லுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக