ரஞ்சிதா ஆரம்பத்தில் நடிகை ராகசுதா மற்றும் ஒரு சினிமா தயாரிப்பாளர் மூலம்தான் சாமியாருக்கு அறிமுகமானாராம். அந்த சமயங்களில் எப்போதாவது ஒருமுறை பெங்களூர் போய் வருவாராம்.
ஆனால் நித்யானந்தாவுக்கு தன்மேல் ஒரு ஈர்ப்பு இருப்பது புரிந்ததும் அங்கே தங்க ஆரம்பித்தாராம். அவரது அந்தரங்க அறைக்குச் சென்று பணிவிடை செய்யும் அளவுக்கு இது வளர்ந்தது. பின்னர் சாமியாரின் பிரம்மச்சரியத்தை பனிக்கட்டியாய் உருக வைத்துவிட்டதாம் ரஞ்சிதாவின் கவர்ச்சி.
சாமியாரை விட ரஞ்சிதா மூன்று வயது மூத்தவராம். ரஞ்சிதாவின் அழகில் கட்டுண்ட சாமியார், அவர் சொன்னதையெல்லாம் கேட்க ஆரம்பித்தாராம். லெனின் கருப்பனுக்கு இந்த விவகாரம் முழுமையாகத் தெரியும் என்கிறார்கள் பெங்களூர் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள்.
இதனால் ஆரம்பத்திலிருந்தே ரஞ்சிதாவை 'அண்ணி' என்ற முறை சொல்லி அழைக்க ஆரம்பித்தாராம் லெனின். இதனை நித்யானந்தரின் செய்லாளர் உள்ளிட்ட ஆசிரம நிர்வாகிகள் வெளிப்படையாகவே இப்போது சொல்கின்றனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது, தனது சீடர்கள் மற்றும் மத அமைப்புகளை நினைத்து பயந்தாராம் நித்யானந்தம். அப்போதுதான், பிரம்மச்சர்யத்தைத் துறந்து இல்லற வாழ்க்கையை அனுபவிப்பதாக வெளிப்படையாக அறிவித்த குக்கே சுப்பிரமணிய மடத்தின் சாமியாரை உதாரணமாகச் சொல்லி நித்யானந்தா மனதை சமாதானப்படுத்தியுள்ளார் ரஞ்சிதா.
இருவரும் திருமணத்துக்கு தயாரான போது, அதற்கு மடத்தின் முக்கிய நிர்வாகிகள் எதிர்ப்பு தெர்வித்ததோடு, ஆசிரம சொத்துக்களை முடக்கிவிடுவோம் என்றும் எச்சரிக்க, மிரண்டு போன நித்யானந்தா, திருமணத்துக்கு முரண்டு பிடித்துள்ளார்.
அதே நேரம் வேறு சில பெண்களையும் ஆசிரமத்துக்கு வரவழைத்து உல்லாசம் அனுபிவித்துள்ளார். இதை ரஞ்சிதா பார்த்து அதிர்ச்சியடைந்து லெனின் கருப்பனிடம் கூறினாராம். அப்போது உருவானதுதான் இந்த வீடியோ திட்டம் என்கிறார்கள் ஆசிரமத்தைச் சேர்ந்த சிலர். இந்த செக்ஸ் வீடியோ எடுக்கப்பட்டதில் ரஞ்சிதாவின் பங்கை லெனினும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பெங்களூர் நித்யானந்தா மடத்தில் உள்ள நித்யானந்தாவின் அந்தரங்க செயலாளர் சேவானந்தா இப்படிக் கூறியுள்ளார்:
நாங்கள் ஆரம்பத்திலேயே ரஞ்சிதாவையும் லெனினையும் சந்தேகப்பட்டோம். இருவரும்தான் மிக நெருக்கமாக இருப்பார்கள். இருவரும் சேர்ந்து போட்ட சதித்திட்டம்தான் இது என்பது இப்போது தெரிகிறது. இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள்!" என்றார்.
ரஞ்சிதாவுடன் ஆபாச வீடியோ - முன்ஜாமீனுக்கு முனையும் நித்தியானந்தா
சென்னை: நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமாக இருந்த வீடியோ வெளியானதால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள சுவாமி நித்தியானந்தா, முன்ஜாமீன் கோர தீர்மானித்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
செக்ஸ் டேப் வெளியானதைத் தொடர்ந்து வந்த புகார் களின் அடிப்படையில் சென்னை போலீஸார் நித்தியானந்தா மீது 6 வழக்குகளைப் பதிவு செய்தனர். அவற்றில் ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா அந்தரங்கமாக இருந்த நேரத்தை வீடியோவில் பதிவு செய்வதரான அவரது சீடர் லெனின் கருப்பன் என்கிற நித்ய தர்மானந்தா தன்னை சாமியார் மிரட்டியதாக கொடுத்த புகாரை மட்டும் தம் வசம் வைத்துக் கொண்டு மற்ற ஐந்து புகார்களையும் கர்நாடக போலீஸாருக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது சென்னை காவல்துறை.
இந்த நிலையில்தான் நேற்று நித்தியானந்தாவின் விளக்க வீடியோ அறிக்கையை அவரது வக்கீல், ஸ்ரீதர் வெளியிட்டார். நித்தியானந்தா மடத்தின் இணையதளத்திலும் இது வெளியிடப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து ஸ்ரீதர் கூறுகையில், நித்யானந்தா மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரங்களை போலீசார் இன்னும் கோர்ட்டுக்கு தெரிவிக்கவில்லை. கோர்ட்டுக்கு தெரிவித்தவுடன் முன் ஜாமீன் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நித்யானந்தா எங்கிருந்து வீடியோ காட்சி கேசட்டை அனுப்பி வைத்தார் என்ற விவரங்களை தெரிவிக்க முடியாது. அதுபற்றி சொன்னால் போலீசார் அவரை கைது செய்து விடுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அவர் உரிய சட்ட பாதுகாப்புகளோடுதான் இனி வெளியே வருவார்.
அவர் கேரளாவில் இருக்கிறாரா? என்பது பற்றி சொல்ல முடியாது. அவர் கடைசியாக வாரனாசியில் கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டார். அவர் தன்னுடைய அதிகாரபூர்வ இமெயில் முகவரிக்கு தனது பேச்சு அடங்கிய வீடியோ காட்சியை அனுப்பி உள்ளார். அதைத்தான் நான் கொடுத்து உள்ளேன். அவர் பாபாஜி என்ற தன்னுடைய குருஜியுடன்தான் இருக்கிறார்.
தற்போது புகார் கொடுத்துள்ள லெனின் சேலம் ஆத்தூரிலிருந்து, சென்னைக்கு வந்து புகார் கொடுத்துள்ளார். ஆனால் அவர் புகார் கொடுக்க வேண்டிய இடம் கர்நாடக மாநில போலீசாகும்.
முதலில் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளதாக சென்னை போலீசார் கூறினார்கள். இப்போது பாதிக்கப்பட்ட பெண் யாரும் புகார் கொடுக்காமல் கற்பழிப்பு வழக்கு போட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
போலீசார் போட்ட வழக்கில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. நாங்கள் அதை சட்டரீதியாக சந்திப்போம். போலீசார் போட்ட வழக்கில் பல்வேறு பின்னணி உள்ளது என்பது மட்டும் இப்போது தெளிவாக தெரிகிறது. விரைவில் அவை வெளிச்சத்துக்கு வரும் என்றார் ஸ்ரீதர்.
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக