செவ்வாய், 9 மார்ச், 2010

முகமூடி மனிதர்கள்

சாலையின் இரு மருங்கிலும் ஓங்கி உயர்ந்து வளர்ந்த மரங்கள் மிக வேகமாகத் தாண்டிச் செல்வதை ஒரு ரசனையுடன் பார்த்த படி கால் பயணிக்கிறாள் நித்யா. மனதில் ஏதோ ஒரு இதமான உணர்வு பரவிக் கொண்டி ருப்பது அவளுக்குப் புரிகிறது. இந்த சந்தோஷத்திற்காக இத்தனை காலம் காத்திருக்க வேண்டியிருந்ததே.

தான் இன்று இருக்கும் அந்தஸ்தை நினைத் துப் பார்க்கிறாள். கார், பங்களா, இதர வசதிகள் என இன்றைய ஆடம்பரமான வாழ்க்கைக்குக் காரணமான தனது கடின முயற்சியைப் பெருமையோடு நினைத்துப் பார்க்கிறாள்.

அவளுக்கு விடுக்கப்பட்ட சவால்கள்தானே அவளது வெற்றிகளுக்கெல்லாம் காரணமாக அமைந்தன. ""ஒவ்வொரு சவாலும் வெற்றிக் கான ஒவ்வொரு படிகள்'' என்பதை முழுமையாக அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டிருப்பவள் அவள். தனது முன்னேற்றத்துக்குக் காரணமான அந்த மனிதரைப் பார்க்கத்தானே அவள் வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறாள்.

இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் காரின் பின் சீட்டில் சாய்ந்து கொண்டு கண்களை மூடியவளுக்கு சிந்தனை இறக்கை கட்டிப் பறக்கிறது. இந்த ஆண்கள் சமுகத்தைப் பற்றி நினைக்கும் போது அவளையறியாமலேயே முகம் இறுகுகிறது. முகமூடி அணிந்த மனிதர்கள். வேஷம் போடும் மனிதர்கள். சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி வாழும் மனிதர்கள்.

அம்மாவை நினைத்துப் பார்க்கிறாள். அமைதியே இல்லாத, அகந்தை கொண்ட தந்தையை எப்படித்தான் தன் தாய் திருமணம் செய்தாளோ என்று அடிக்கடி யோசிப்பாள்.
தன்னை விட சம்பாதிக்கிறாள் என்ற தாழ்வுச் சிக்கலோ அல்லது தான் ஆண் என்ற அகந்தையோ அடிக்கடி வார்த்தைகளாலேயே அவளைச் சாகடிப்பார். சிறு வயதில் அம்மாவும் பொறுமையிழந்து அப்பாவுடன் சண்டை பிடிப்பதைப் பார்த்திருக்கிறாள். ஆனால் காலப் போக்கில் அவள் மௌனமே வாழ்க்கையாகிப் போனது.. தங்களுடைய சண்டை சச்சரவுகள் தன்னுடைய பிள்ளையைப் பாதிக்கக் கூடாது என்பதில் அம்மா மிகமிகக் கவனமாக இருந்தாள்.

ஒரு தடவை பல்கலைக்கழக விடுறையின் போது நித்யா வீட்டிற்கு வந்த சந்தர்ப்பத்தில் அப்பா ஒரு கீழ்த்தரமான மனிதனாக அம்மாவைக் கை நீட்டி அடித்து தூஷண வார்த்தைகளால் திட்டி, வீட்டிலுள்ள பொருட்களை உடைத்து அட்டகாசம் செய்த போது அம்மா பொறுமையிழக்கவில்லை. ஆனால் நித்யா தான் பொறுமை இழந்து போனாள்.

""அம்மா நீங்க என்னத்துக்கு அடிவேண்டி சாகிறீங்கள். நீங்கள் உழைக்கிறீங்கள் தானே அப்பாவை விட்டுட்டு வாங்கோ. அப்பா தனியாச் சீவிக்கட்டும்'' அம்மாவின் முகத்தில் ஆற்றாமையா சோகமா, எதுவென்று விளங்கிக் கொள்ள முடியாத உணர்வு. நான் அப்பாவோட வாழவில்லையென்றால் உன்னுடைய கலியாணத்துக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையினைத் தேட முடியுமா? ஒழுங்காக கலியாணத்தைச் செய்து வைக்க முடியுமா? நான் உன்னைப் பற்றித்தான் யோசிக்கிறன்'' என்றாள் அம்மா அப்பாவியாக..

இந்த ஒரு காரணத்துக்காகவே எந்த மிருகத் தையாவது திருமணம் செய்து கொண்டு அம்மாவை இந்த பந்தத்திலிருந்து விடுவிக்கலாம் என்று சிந்தித்த வேளைதான் அம்மாவின் சிறை வாழ்க்கை அப்பாவின் மரணத்துடன் முடிவடைந்ததை எண்ணிப் பார்க்கிறாள்.

அதற்குப் பிறகு அவள் தனது திருமணத்தைப் பற்றி ஒருபோதும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அப்பா மாதி ஒரு மனிதன் தனக்குக் கணவராக வந்து சித்திரவதை செய்தால் தன்னால் அம்மா மாதிப் பொறுமையாக இருக்க டியாது என்று நினைத்தாள்.

தான் தேடிப் போய்க் கொண்டிருக்கும் மனிதனும் அப்பாவைப் போலவேதான் என்ற எண் ணம் வருகிறது. பட்டதாரியாகி அரச திணைக் களமொன்றில் சேவையாளராகச் சேர்ந்த போது தாயின் பென்சன் பணத்துடன் தனது சம்பளம் சேர்ந்து ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனாலும் அந்த வேலைத்தலத்தில் அவளுக்கு ஏற்பட்ட சவால்கள், போட்டி பொறாமைக்கிடையில் தான் வாழ வேண்டி ஏற்பட்டது என்பதை ஒரு சோர்வுடன் நினைத்துப் பார்க்கிறாள்.

அவளது ஆரம்ப சேவைக்காலத்தின் போது இரண்டு வருடங்களுக்கொருவராக இருவர் திணைக்களத் தலைவர்களாக இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றார்கள். அவர்கள் தமக்குக் கீழ் வேலை செய்யும் பெண்களை இழிவாகக் கருதவில்லை என்றாலும் ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை என்பதை வேதனையுடன் எண்ணிப் பார்க்கிறாள். மூன்றாவதாக வந்த அந்தப் பெரிய மனிதனை நினைக்கும் போது நெஞ்சில் ஏற்பட்ட காயம் ஆறா ரணமாக இருப்பது புரிகிறது.

அலுவலகத்தில் முக்கியமான வேலைகளை ஆண்களுக்குக் கொடுக்கும் போது அவளது மனதில் கேள்வி எழும். கணனி அறிவு இருந்ததால் விஜயன் திறம்பட இயங்குவதைக் கண்டு கணினி அறிவை விருத்தி செய்து கொண்டாள். ஓய்வு ஒழிச்சலில்லாமல் அவள் இரவில் கூடக் கண் விழித்துக் கம்பியூட்டருக்கு முன் னால் இருக்கும் போது அம்மாவுக்கு அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும்.
தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எவ்வளவு பாடுபடுகிறாள். ஆணாதிக்கம் மிக்க இந்த சமூகத்தில் தனது இருப்பை நிலைநாட்ட பெண்கள் எவ்வளவு போராட வேண்டியிருக்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவள் அவள்.

அடிபட்ட கோழிக் குஞ்சாக அம்மாவின் அரவ ணைப்பில் ஒடுங்கும் போது அவள் இதமாக அதனை மகளுக்கு உணர்த்துவாள்.

அலுவலகத்தில் ஒரு செயற்றிட்டத்தை வெற்றிகரமாகத் திட்டமிட்டு அதனை ஆவணமாக்கி தனது திறமையை நிரூபிக்க மேகநாதனிடம் கொண்டு போய் நீட்டிய போது அதை அவர் திறந்து பாராமலே ""இதிலை நீர் ஏன் மினக்கடுறீர். உமக்குத் தந்த வேலையை நீர் பாருமன்'' கோபமாகக் கத்தியவர் தன்னுடன் உடனிருந்த சக ஊழியர்களிடம் ""இதுகளெல்லாம் ஏன் வேலைக்கு வருகுதுகள். பேசாம வீட்டில இருந்து சமைக்கலாம். பிள்ளையிளைப் பார்க்கலாம். அதை விட்டுட்டு தாங்களும் ஒரு ஆக் கள் எண்டு வந்திட்டினம்'' ஏளனமாகக் கத்தும் அவரிடம் எதையும் விளக்க முடியாமலே தனது கதிரையில் வந்தமர்ந்து மேசையில் தலைசாய்த்துக் கண்ணீர் விட்டு அழுத அந்த சந்தர்ப்பத்தில் தான் உதயா நட்பானாள்.

உதயா அவளுக்குப் பிறகு வேலையில் சேர்ந்தவள். அவளுக்கு நித்யா மாதிரி எல்லாம் போராடும் மனநிலை கிடையாது.
தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பாள். அவள் மாதிரி மனநிலை தனக்கும் இருந் திருக்கலாமோ என்று நித்யா அடிக்கடி நினைப்பாள். உதயாவின் அமைதியான சுபாவம்தான் அத்தனை பெண் ஊழியர்களுக்கிடையில் நித்யாவுக்கு நட்பைத் தேடிக் கொடுத்தது. அலுவ லகத்துக்கு வந்த பிறகுதான் உதயாவுக்குத் திருமணம் நடந்தது. இணை பியாமல் வாழும் அவர்களைப் பார்த்துத் திருப்திபட்டுக் கொள்ளுவாள்.
தனது திறமையை வேண்டு மென்றே தனது உயரதிகாரி மட்டம் தட்டிப் பேசுவதை அவள் புரிந்து கொண்ட பிற்பாடு தனது திறமையை அவரிடம் காட்ட வேண்டும் என்ற எண்ணமே அவளில் இல்லாமல் போய் விட்டது. ஆனால் அவருக்கு முன்னால் தனது திறமையால் முன்னேறி பதவி உயர்வு பெறவேண்டும் என்ற வேகத்தில் இருந்தாள். அவ்வாறான ஒரு வேளையில்தான் அந்த அலுவலகத்தில் பதவி உயர்வுக்கான சந்தர்ப்ப மொன்று ஏற்பட்டது. கல்வித் தகைமை, திறமை, சேவை, அனுபவம் என்ற அடிப்படையில் நித்யா தான் அதற்குத் தகுதியானவள் என்பதை எல்லோருமே ஏற்றுக் கொண்டிருந்தார்கள். எனினும் ஒரு நாள் காலை விஜயன் அதற்கான நியமனக் கடிதத்துடன் அந்தக் கதிரையில் வந்து அமர்ந்த போது நித்யா கலங்கிப் போனாள். மேகநாதனின் பலத்த சிபார்சு அவனுக்கு அந்தப் பதவி உயர்வைப் பெற்றுக் கொடுத்திருந்ததை அறிந்த அன்று அவள் தான் எப்படி உடைந்து போனாள். ஒரு வாரம் வேலைக்குப் போகாமல் கவலையோடு இருந் தவளை தாயார் தான் தேற்றினாள்.

""அம்மா தர்மம் ஒருபோதும் தோற்காது என்று அடிக்கடி சொல்வீர்களே இண்டைக்கு நியாயம், தர்மம் எல்லாம் எங்கே அம்மா?'' விழிகளில் நீர் ததும்ப தழு தழுத்த குரலில் கேட்கும் மகளை ஆறுதலாக அரவணைத்துக் கொள்கிறாள்.

பதவி என்பது கேட்டுப் பெறுவது அல்ல.
தகுதியிருந்தால் பதவி தன்னாலே தேடி வரும் என்ற எண்ணம் கொண்டவள் நித்யா. எனவே தனது பதவி உயர்வு தடைப்பட்டதற்காக மனித உரிமைச் சட்டத்தின் கீழ் போராட அவளது மனது மறுத்தது. எனினும் அலுவலக வேலை தொடர்பாக விஜயனின் கையெழுத்துக்காகப் போகும் சந் தர்ப்பங்களிலெல்லாம் அவளுடைய ஆத்மாவின் தவிப்பு அவளுக்கு மட்டுமே புந்தது.

மேகநாதன் அலுவலகத்தில் மட்டுமல்லாமல் வீட்டிலும் பெண்ணை அடிமையாகத்தான் எண்ணியிருந்தார் என்பதை ஒருதடவை அவரது வீட்டிற்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அறிய வேண்டி நேரிட்டது. மனைவியைப் பதில் சொல்ல விடாது தனது உரத்த குரலால் அவளை அடக்கிக் கொண்டிருந்தார். அவரது வாயிலிருந்து வந்த வார்த்தைகள் நெருப்புக் கற்களாக மனைவி யைச் சுட்டெரித்தன. பல்கலைக்கழக விவுரை யாளராக இருந்த அவளைத் திருமணம் செய்த பின் வேலைக்குச் செல்ல விடாது தடுத்துத் தனது ஆண் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டி ருந்தார்.

மகளிர் தினம் தொடர்பான நிகழ்வொன்றில் சிறப்பு விருந்தினராக மேகநாதன் தன் மனை வியுடன் கலந்துகொண்டு உரையாற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் உதயா பார்வையாளராக அமர்ந்திருந்தாள்.

""பெண்கள் உலகத்தின் கண்கள். அவர்களுக்கு நாம் உய கௌரவம், அந்தஸ்தை வழங்க வேண்டும். இந்த உலக இயக்கமே பெண்களால்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது'' தொடர்ந்து அவர் பேசுவது அவளது காதுகளில் விழவில்லை. வேஷதாரிகள் இந்த முகத்திரையை யாராவது கிழிக்க மாட்டார் களா? புன்சிரிப்புடன் கூடிய முகத்துடன் அமர்ந்திருக்கும் அவர் மனைவியைப் பார்க்கிறாள். பல்கலைக்கழக விவுரையாளர், நல்ல கல்விமான், சிந்தனையாளர் அவர் எழுந்து தனது கணவன் உண்மை சொரூபத்தை இந்த அவையில் முன் வைத்தால் என்ன? கணவன் முகத்திரையைக் கிழிக்க முடியாமல் எது அவளது வாயையும், கைகளையும் கட்டிப் போட்டிருக்கிறது? வீட்டுக்கு ஒரு மனிதனாய், சமூகத்துக்கு வேறொரு மனிதனாய் முகமூடி போட்டு உலாவரும் இந்த வேடதாரிகளை இனம் காட்ட முடியாமல் இருப்பது ஏன்?
வெந்தணலாய்க் கொதிக்கும் உள்ளத்தோடு கூட்டத்தை விட்டு வெளியேறுகிறாள். அதற்குப் பின்தான் காலம் எவ்வளவு வேகமாக ஓடி விட்டது. கஷ்டப்பட்டுப் படித்து நிர்வாக சேவைப் பரீட்சையில் நல்ல புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து வேறொரு திணைக்களத்தில் நல்ல பதவியில் அமர்ந்த போது மூன்று ஆண்டுகள் கடந்து தான் விட்டன. திருமணத்தைப் பற்றியே சிந்திக்காமல் தனது திறமையால் முன்னுக்கு வர வேண்டும் என்று உழைத்தவளுக்கு வெற்றி கிட்டியிருக்கிறது. பல தடைகளைத் தாண்டி அந்த நிறுவனத் தின் நிர்வாக அதிகாயாக வேலை பார்க்கின்றாள்.

அன்று காலை அவளுக்கு உதயா தொலை பேசியில் தெரிவித்த தகவல் சந்தோஷத்தைத் தருகிறதா என்பதைச் சரியாக உணர முடியாமல் தவித்தாள். மேகநாதனின் கொடுமை தாங்க முடியாமல் மனைவி வெளிநாடு போய் விட்ட தாகவும் தனித்து வாழ்ந்த அவருக்கு மூன்று மாதங்களுக்கு முன் பாசவாதம் வந்து ஒரு பக்கக் கையையும் காலையும் அசைக்க முடியாமல் படுக்கையிலிருப்பதாகவும் கூறியிருந்தாள்.

எத்தனை அட்டகாசம் பண்ணியவர் காலம் முழுக்க தான் ஒரு முடிசூடா மன்னனாக வாழ்ந்து விடலாம் என்று எண்ணியவர், மூப்பு, நோய், மரணம் என்ற மூன்றும் ஒரு மனிதனுக்கு நிச்சயமானது என்ற உண்மை தெரிந்த எந்த மனிதனுமே ஒருபொழுதும் அடுத்தவனைக் காயப்படுத்தமாட்டான்.
கார் "கிரிச்' என்ற சத்தத்துடன் வளைவொன்றில் திரும்பிய போது நித்யாவின் சிந்தனை கலைந்தது. கார் பெரிய கேட் வழியாக உள்ளே நுழைந்து போட்டிகோவில் நின்றது. தன்னை அவமானப்படுத்தி தாழ்த்தி, இழிவாக நடத்திய மேகநாதன் உதவிக்கு ஆளில்லாமல் சாப்பிட, நடக்க உதவியில்லாமல் தவிக்கும் அந்த நிலையை ரசித்துப் பார்க்க வேண்டும் என்ற குரூர திருப்தியுடன் உள்ளே நடந்தாள். அடுத்தவனின் துன்பத்தைப் பார்த்துச் சந்தோஷப்படும் நிலை அருவருப்பைத் தந்தாலும் தனக்கு நடந்த கொடுமைகளை எண்ணி அதை அடக்கிக் கொண்டாள். தான் தன் சுயபலத்தால் முன்னேறியிருக்கும் நிலையை உணர்த்த வேண்டும் என்று எண்ணியபடி அறைக்குள் சென்ற போது அங்கே கட்டிலில் மேகநாதன் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அதை நன்கு துப்பரவு செய்யப்பட்டு சலவையால் வந்த போர்வையால் போர்த்தப்பட்டு இருந்தார். நித்திரையால் எழுந்தவுடன் குடிப்பதற்காக ஆரஞ்சுச் சாறு நிறைந்த கிளாசொன்றும் தயார் நிலையில் இருந்தது.

இந்த மனிதனுக்கு இப்படியொரு நிலையில் யார்தான் உதவி செய்யக் கூடுமென்று எண்ணியபடி பார்த்த பொழுது அவரது மனைவி அறைக்குள் நுழைந்தார். வயது முதிர்ந்த தோற்றம் என்றாலும் முகத்தில் அப்படியொரு சாந்தம், தெய்வீகம் என்று சொல்வார்களே அது அவரது முகத்தில் நிரந்தரமாகக் குடிகொண்டி ருந்தது.

""நீங்கள் வெளிநாடு போயிருப்பதாகச் சொன்னார்களே' என்று மெல்லச் சொன்னவளை பெயவர் இடைமறித்தார்.
""இவருக்கு வருத்தம் வந்து உதவியில்லாமல் இருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடன் வந்திட்டன்'' எந்த சலனமில்லால் அவரது பதில் வருகிறது.
""உங்களுக்கு எவ்வளவு கஷ்டம் குடுத்தவர்'' கூற முயன்றவளைப் பார்வையால் சாந் தப்படுத்துகின்றார். அவர் எனக்கு சந்தோஷத்தைத் தரவில்லைதான். அதுக்காக நான் அவரைக் கைவிட்டு விட முடியாது. அமைதியாக இருக்கும் நித்யாவைப் பார்த்துத் தொடர்கிறாள்.

""உனக்கு அவர் செய்த அநீதிகள் எனக்குத் தெயும். ஆனால் நான்பட்ட வேதனையை விட நீ பட்டிருக்க மாட்டாய்'' சோகமாகச் சொல்லி விட்டுத் தொடர்கிறாள்.

""முரண்பாடுகள் தான் உலகம். முரண்பாடுகள் இல்லையென்றால் உலக இயக்கமே இல்லை. ஆதிக்கம் செலுத்துவது ஆண். விட்டுக் கொடுப்பது பெண் என்ற முரண்பாட்டிற் கிடையில் வாழ்க்கை நடக்கிறது.

பெண் பெருந்தன்மையானவள் என்பதால் தான் பொறுத்துப் போகிறாள். அவளும் அடங் கவில்லையென்றால் உலகில் போராட்டம் தான் உண்டாகும்.

நித்யா உலகத்திலேயே மிகப் பெய சந்தோஷம் மற்றவர்களைச் சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான் என்றார்கள். ஒரு தடவை அந்த சந்தோஷத்தை அனுபவித்துப் பார். பிறகு நீ மற்றவர்களுக்கு உதவி செய்யும் சந்தர்ப்பத்தை நோக்கி நீ ஓடுவாய்'' அவர் கூறுவதிலிருந்த உண்மை புரிந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது. இதுவே மனைவிக்கு நடந்திருந்தால் அவர் இப்படி ஓடி வந்து உதவியிருப்பாரா?

சோர்ந்து போன உள்ளத்தோடு காரில் ஏறுகிறார் நித்யா. தவித்துப் போயிருப்பவனைப் பார்த்துக் கை கொட்டிச் சிரிக்கலாம் என்று வந்தவளுக்கு ஏமாற்றம்தான். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, அடங்கிப் போகும் உள்ளம், சகிப்புத் தன்மை, அன்பு, இரக்கம், பொறுமை, சமூகக் கட்டுக்கோப்புகள், கலாசாரம், பண்பாடு போன்ற சங்கிலிகள் பெண்களின் கைகளை சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் வரை ஆண்களின் முகத் திரையைக் கிழிக்கும் வல்லமை கல்வியால் கூட ஏற்பட்டு விடாது என்ற உண்மையைக் காலம் கடந்து புரிந்து கொள்கிறாள். முகமூடி மனிதர்களின் சுயத்தை உலகுக்குக் காட்டுவதற்குரிய வல்லமை வரும் வரை அல்லது ஆண்களாக உணர்ந்து திருந்தி தமது முகத்திரையை அகற்றும் வரை பெண்கள் தமது இனத்தின் விடிவுக்காகக் காத்திருக்கத்தான் வேண்டும்.


ஜீவமலர் கணேசலிங்கம்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல