பல்கிளைப் பனைமரம்
வல்லிபுரக் கோவில் வீதியின் மேற்கே பல கிளைகளைக் கொண்ட பனைமரங்கள் மூன்று காணப்படுகின்றன. பொதுவாகப் பனை மரங்கள் கிளைகளைக் கொண்டவையல்ல. அதிசயமாக கிளைகளைக் கொண்டு இவ்விடத்தில் இவை வளர்ந்துள்ளன.
முன்னர் இவ்வகையான பனை மரங்கள் சில வளர்ந்திருந்தன எனவும் பின்னர் இவை அழிந்துவிட்டன எனவும் கூறுகின்றனர். இப் பனைமரங்கள் சரிவர பிரதேச சபையினால் பேணப்படவில்லை.
நிலாவரைக் கிணறு
இன்று காணப்படுகின்ற பனை மரங்களும் சரியாக பராமரிக்கப் படாவிட்டால் அழிந்து போகலாம்.
வெளிச்ச வீடு
பருத்தித்துறை வட முனையில் ஒரு வெளிச்ச வீடுள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் கட்டப்பட்ட வெளிச்ச வீடுகளில் இது ஒன்றாகும்.
கடலில் பயணப்படும் மரக் கலங்களுக்கு வழி காட்ட இவை அமைக்கப்பட்டன. பருத்தித்துறை வெளிச்ச வீடு இன்றும் கட்டமைப்பு கலையாதுள்ளது.
இலங்கையின் தென் முனையில் இருக்கின்ற தேவேந்திரா (தொண்டரா ஹெட்) வெளிச்ச வீடு மாதிரி காங்கேசன் துறையிலும் ஒரு வெளிச்ச வீடுள்ளது.
மயிலியதனைக் கிடங்கு
வல்வெட்டித்துறையில் மயிலதனை என்றவிடயத்தில் இயற்கையான ஒரு நிலத்தடி இறக்கம் காணப்படுகின்றது.
யாழ்ப்பாணக் குடாநாடு சுண்ணாம்புக் கல் பிரதேசமாதலால் கரசல் காரணமாக நிலத்தின் கீழ் குகைகள் ஏற்படுவதுண்டு. நிலாவரை, மானிப்பாய் இடிகுண்டு.
ஊரெழு பொக்கணை என்பன இத்தகையன. காங்கேசன்துறையில் சீமெந்துக் கல்லுக்காக நிலத்தை அகழ்ந்தபோது தோன்றிய இயற்கைச் சுரங்கம் இத்தகையது.
இன்று இது இல்லை, அழிக்கப்பட்டுவிட்டது. மயிலதனை இறக்கத்துள் ஒரு ஆலமரம் வளர்ந்துள்ளது.
நிலாவரைக் கிணறு
புத்தூரில் ஒரு அதிசயமான வற்றாத கிணறு காணப்படுகின்றது. அதனை நிலாவரை என்பர். சுண்ணாம்புக்கல் பிரதேசத்தில் தரைகீழ்க்குகை தோன்றிய பின்னர் மேல் முகடு இடிந்து போனதால் தோன்றிய இறக்கமே இதுவாகும்.
இது வற்றாத கிணறாகக் கருதப்படுகின்றது- கி. பி. 1824 இல் சேர் எட்வேட் பான்ஸ் எனும் தேசாதிபதியின் கட்டளைப்படி அதனை அடுத்துள்ள தோட்டங்களுக்கு நீர் வழங்க புத்தூர் நிலாவரைக் கிணற்றைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
நீராவியந்திரம் ஒன்றைக் கொண்டுவந்து இறைத்துப் பார்த்தார்கள். நீர் வற்றவில்லை. மட்டக்களப்பிலிருந்தும் யந்திரம் கொண்டு வரப்பட்டது. ஆனால் நிலாவரையின் கீழ்ப் படையிலிருந்து உப்பு நீர் வந்ததால் முயற்சி கைவிடப்பட்டது.
1890 இல் யாழ்ப்பாண நகருக்குத் தண்ணீர் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நிலாவரையிலிருந்து நீர் எடுக்க துவைனம் அரசாங்க ஏசண்டர் அனுமதிக்கவில்லை.
நிலாவரைக் கிணற்று நீர் அருந்த உகந்ததன்றெனக் கருதப்பட்டது. அக்கிணற்றின் மேற்பரப்பு மாத்திரம் நன்னீர் எனவும் அதன் கீழ் உவர் என்றும் கருதப்பட்டது.
நிலாவரைக்கும் கடலுக்கும் தரைக்கீழ்த் தொடர்புண்டு எனக் கருதப்பட்டது. நிலாவரையில் ஒரு தேசிக்காயைப் போட்டால் அது கீரிமலைக் கடலில் மிதக்கும் என்றனர். ஆழங்காணாத இக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்தவர்கள் பலர்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் ஒரு முருகன் கோயிலாகும். கீரிமலை ஊற்றில் நீராடி தன்வியாதி நீக்க வந்த சோழ இளவரசி மாருதபுர வீகவல்லி, சில விக்கிரகங்களைத் தமிழ் நாட்டிலிருந்து தருவித்து மாவிட்டபுரம் கோவிலை கட்டுவித்தாள்.
பல்கிளைப் பனைமரம்
பெரிய மனத்துளார் என்ற பிராமணக்குரு தன் பரிவாரத்துடன் இவ்விடத்தில் அமர்ந்தார். அவரே இக்கோயிலின் முதற் குருவாவார். அவருடைய பரம்பரையில் வந்த சின்னமனத்துளார் தொட்டு இன்றுள்ள மகாராஜஸ்ரீ சண்முகநாதக் குருக்கள் வரை இக்கோயிலுக்குத் தொண்டாற்றி வருகின்றனர்.
ராஜகோபுரம் கொண்ட பெருங்கோயில் இதுவாகும். அண்மைய யுத்தத்தால் பாதிப்புற்ற இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு வருகின்றது.
இக்கோயில் போர்த்துக்கேயரினால் அழிக்கப்பட்டது. இதன் கற்கள் யாழ் கோட்டை கட்டப் பயன்பட்டன. கிணற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்கள் மீள எடுக்கப்பட்டு 1927 இல் மீளமைக்கப்பட்டது.
கீரிமலை
இந்துக்களின் புனித தீர்த்தம் கீரிமலையாகும். நீராடுவதற்கு இக்கேணி பயன்கொள்ளப்படுகின்றது. ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் இரண்டு பகுதிகளுள்ளன.
நகுலமுனி என்ற முனிவர் தவம் புரிந்து தன் கீரிமுகத்தை இப்புனித தீர்த்தத்தில் நீக்கிக்கொண்டார். கடலருகில் உவர் நீர் இருந்தும் அதன் பக்கத்திலுள்ள கேணிகளில் நன்னீர் ஊற்றுக்கள் உள்ளன.
வெளிச்ச வீடு
சுண்ணாம்புத் தரையிலிருந்து ஊற்றுக்கள் கசிந்து இக்கேணிகளை நன்னீராக வைத்துள்ளன. பிதிர் தீர்ப்போர் இங்கு வருவர். மாவிட்டபுரம் கந்தனும் வருடத்தில் ஒரு நாள் இங்கு நீராட வருவார்.
தொண்டைமானாறு
யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள பெரிய உப்பாறுகளில் தொண்டைமானாறு ஒன்றாகும். வடகரையிலிருந்து ஆனையிறவுக் கடனீரேரி வரை தொண்டைமானாறு அமைந்துள்ளது.
தொண்டைமான் என்ற சேனாதிபதி இங்கு வந்து உப்பெடுத்துச் சென்றதால் தொண்டைமானாறு எனப்படுகிறது.
தொண்டைமானாற்றை நன்னீராக்கும் திட்டமுள்ளது. இக்கடனீரேரியில் தாழை மரங்கள் வளர்ந்துள்ளன. பல்வகைப் பறவைகள் வந்து தங்கிச் செல்கின்றன.
நகுலேஸ்வரம்
கீரிமலைத் தீர்த்தத்திற்கு அருகில் நகுலேஸ்வரம் சிவன் கோயில் உள்ளது. கீரிமலையிலர் தீர்த்தமாடி நோய் தீர்ந்த நகுலேஸ்வர முனிவரின் பெயரால் இத்தேவாலயம் அழைக்கப்படுகின்றது.
இலங்கையின் நான்கு திசைகளிலுமுள்ள சிவன்கோயில்களான திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், தெய்வேந்தரம் ஆகியவற்றில் நகுலேஸ்வரம் ஒன்றாகும்.
போர்த்துக்கேயரினால் இக்கோயில் அழிக்கப்பட்டது. பின்னர் 1859 இல் மீண்டும் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டது. சிவராத்திரி விழா இங்கு முக்கியமானது.
சன்னதி முருகன் கோயில்
தொண்டைமானாற்றங் கரையில் வடகரையில் சன்னதி முருகன் கோயில் அமைந்துள்ளது. அலங்கார முருகன் (நல்லூர்), அபிஷேக முருகன் (மாவிட்டபுரம்) போல அன்னதான முருகனாக சன்னதி முருகன் உள்ளார். இக்கோயிலின் சுற்றாடலில் அன்னதான மடங்கள் உள்ளன.
சந்நிதியான் ஆச்சிரமம், ராமகிருஷ்ண ஆசிரமம் போன்றனவுமுள்ளன. இக்கோயிலில் பணி புரிவோர் பிராமணரோ சைவக் குருமாரோ அல்லர்.
கதிர்காமத்தில் வாயைத் துணியால் கட்டிக்கொண்டு பூசை செய்வோர் போல சன்னதியில் பூசை செய்கின்றனர்.
இந்த ஆலயம் தனியாருக்குச் சொந்தமானது. முறை வைத்து பணி புரிகின்றனர். பூசை செய்வோரில் ஒருவர் இலங்கைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாவார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக