சனி, 6 மார்ச், 2010
ஸ்பூன் மூலம் சுரங்கம் தோண்டி சிறையில் தப்பிய பெண் கைதி
நெதர்லாந்து நாட்டின் சிறையில் இருந்த பெண் கைதி, தேக்கரண்டி மூலம் சுரங்கம் தோண்டி தப்பித்து சென்று விட்டார்.நெதர்லாந்து நாட்டின் ப்ரீடா (Breda)நகர சிறையில் 35 வயது பெண் கைதி, கொலை குற்றம் தொடர்பாக அடைக்கப்பட்டிருந்தார். நீண்ட காலமாக இவர் சிறையில் இருந்ததாலும், சிறை அதிகாரிகளின் நன்மதிப்பை பெற்றதாலும், சிறைக்குள் சுதந்திரமாக உலாவி வந்தார்.கடந்த 20ம் தேதி முதல் இந்த பெண் கைதியை காணவில்லை. சிறைக்கு வெளியே ஊழியர்கள் சிலர் பள்ளம் தோண்டிய போது சுரங்கம் காணப்பட்டது. அந்த சுரங்கம் சிறையின் சமையலறை வரை சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுரங்கத்துக்குள் தேக்கரண்டியும், முள்கரண்டியும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. "இவைகளை வைத்து தான் அந்த பெண் கைதி தப்பித்திருக்கிறார்'என, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அந்த பெண் கைதியை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக