கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் விமானங்களை கடத்திச் சென்ற அல் கொய்தா தீவிரவாதிகள், அவற்றைக் கொண்டு உயரமான கட்டடங்களின் மீது மோதி தகர்த்தனர்.
நியூயோர்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையம் எனப்படும் இரட்டை கோபுரமும் தகர்க்கப்பட்டது. இந்தத் தாக்குதல்களில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள்.
Khalid Sheikh Mohammed
இத்தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட காலித் ஷேக் முகமது (Khalid Sheikh Mohammed) உட்பட அல் கொய்தா தீவிரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
கியூபா நாட்டில் அமெரிக்காவுக்குச் சொந்தமான குவான்டனாமோ விசேட சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
தற்போது, அவர்கள் மீதான வழக்கை நியூயோர்க் நகரில் இரட்டை கோபுரம் இருந்த இடம் அருகே உள்ள கோர்ட்டில் விசாரிக்கப் போவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கு அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லாடன் மிரட்டல் விடுத்துள்ளார்.
அவரது பேச்சு அடங்கிய புதிய ஆடியோ டேப், அல் ஜசீரா தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
அதில், பின்லாடன் கூறி இருப்ப தாவது,
காலித் ஷேக் முகமதுவுக்கு மரண தண்டனை விதிப்பதாக அமெரிக்கா முடிவு எடுக்கும் அதே நாளில்,
எங்களிடம் பிடிபடும் அமெரிக்கர் களுக்கு மரண தண்டனை விதிக்க நாங்களும் முடிவு செய்வோம்.
புஷ் வழியில் ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தனக்கு முன்பு ஜனாபதியாக இருந்தவரின் (புஷ்) பாணியிலேயே செயல்படுகிறார். வெள்ளை மாளிகையில் பதவி வகிப்ப வர்கள், எங்களுக்கு அநீதி இழைத்தே வந்துள்ளனர்.
அது இப்போதும் தொடர்கிறது. குறிப்பாக, பாலஸ்தீனத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வரும் இஸ்ரேல் நாட்டை ஆதரிப்பதன் மூலம் அவர்களின் அநீதி தொடர்ந்து வருகிறது.
அமெரிக்கா பாதுகாப்பாக இருப்ப தாக அவர்களுக்கு நினைப்பு, 11-9-2001 அன்று எங்களது பதிலடி பயங்கரமாக இருந்தது.
இதுவரை, அவர்கள் அமெரிக்கா பாதுகாப்பாக இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக