வியாழன், 1 ஏப்ரல், 2010

இந்தியா எப்படி உருவானது ?

ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்ற நாடு இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே எல்லோருக்கும் தெரிந்த பதில். வட இந்தியாவை எடுத்துக் கொணடால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில், ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது.

மவுரியர், கனிஷ்கர், குப்தர், அர்ஷவர்த்தனர், சுல்தான்கள், பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். தனித்தனி நிலப் பகுதிகளில், தனித்தனி ஆட்சிகளே நடந்தன. ஒரே குடையின் கீழ் பெரும் நிலப்பகுதி கொண்டு வரப்பட்டபோது கூட, தன்னாட்சிகளை அழித்து விடவில்லை.

மராத்தியை மய்யமாகக் கொண்ட மத்திய இந்திய பகுதி, தக்காணிப் பிரதேசம் என்று அழைக்கப்படுவ தாகும். இங்கும், தனித்தனிப் பிரதேசங்களும், தனித்தனி ஆட்சிகளுமே நடந்திருக் கின்றன. மராத்தி, ஒரிசா, கன்னடம் மற்றும் ஆந்திரப் பகுதி களைக் கொண்ட இந்தத் தக்காணப் பிரதேசத்தில் சாத வாகணர் என்ற ஆந்திரர்கள், சாளுக்கி யர், ராஷ்டிரகூடர், கங்கர், கடம்பர் என்று பல் வேறு வம்சத்தினரின் ஆட்சி கள், தனித்தனிப் பகுதிகளில் நடந்தன.

13 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவி லிருந்து, மொகலாயர்கள் படை எடுத்து வந்து, தக்காணத்தின் வடபகுதியைக் கைப்பற்றினர். அப்போது தக்காணத் தென்பகுதியில் விஜயநகரப் பேரரசு இருந்தது. இது, மத்திய இந்தியாவின் நிலை என்றால், தென்னிந்தியாவின் வர லாறு என்ன? சேரர், சோழர், பாண்டியர், களப்பிரர், பல்லவர் மற்றும் குறுநில மன்னர்களின் ஆட்சிகளுக்குட்பட்ட, தனித் தனிப் பிரதேசங்கள்தான் இருந்தன.

இந்திய வரலாற்றில், பெரும் நிலப் பகுதியைக் கைப்பற்றி, பல தனி யாட்சிகளை ஒழித்து - ஒரு முக ஆட்சியை உருவாக்கியவர்கள் மொக லாயர்கள் தான்! மொகலாயர்கள் பேரரசு நடந்த காலத்தில்தான் பார்ப்பனர்கள் நாடு முழுவதும், சமூக அரங்கில் தங்கள் ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொண் டார்கள். இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம் அல்லாத பல்வேறு இனக் குழுக்களை, பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததும் இந்தக் காலத்தில் தான்.

முஸ்லிம் அல்லாத எல்லோரையும், மொகலாய மன்னர்கள் ‘இந்து’ என்று கூறியதும், ‘இந்து’ என்ற பெயர் வழக்கில் வந்ததும், அக்காலத்தில் தான். சமஸ் கிருத சுலோகங்களையும், வேதங்களை யும் பார்ப்பனர்கள், தங்கள் சுயநலச் சுரண்டலுக்கு ஏற்ப திருத்தி அமைத்துக் கொண்டதும் அப்போதுதான்.அப்போதும் தமிழ்நாடு மொக லாயர்கள் ஆட்சியின் கீழ் வரவில்லை.

அத்தகைய மொகலாயப் பேரரசுகூட, அவுரங்கசீப்புக்குப் பிறகு வீழ்ந்து விட்டது. அதன் பிறகு 66 ஆண்டு களுக்கு, இந்தியத் துணைக் கண்டத்தைக் கட்டி ஆளும் ஒரே மய்ய அரசு எதுவும் உருவாகியதில்லை. ஆங்கிலேயரின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனிதான் இங்கே குறி வைத்தது.

இந்த வர்த்தகக் கம்பெனி உருவாக்கப் பட்ட நாள் 1.12.1600. இந்திய அரசர் களிடம் உரிமை வாங்கிக் கொண்டு, கடற்கரை ஓரமாக தங்களது வர்த்தகக் குடியேற்றங்களை இவர்கள் ஏற் படுத்திக் கொண்டனர். கி.பி. 1612 இல் முதன்முதலாக சூரத்திலும் தொடர்ந்து மசூலிப்பட்டிணம் (1616), அரிகர்பூர் (1633), சென்னை (1640), பம்பாய் (1669), கல்கத்தாவிலும் (1686) வர்த்தகக் குடியேற்றங்களை நிறுவினர்.வர்த்தகம் செய்ய வந்தவர்கள், நாடு பிடிக்கும் ஆசையை விட்டு விடுவார் களா? இந்தக் கம்பெனி வெறும் கை யுடன் வந்துவிடவில்லை. தனக் காக ஒரு கடற்படையை வைத்துக் கொள்ளவும், தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளவும் பிரிட்டிஷ் ராணியிடம் உரிமை பெற்றிருந்தது. முதலில் மேற்கு வங்கத்தில் உள்ள சிட்டகாங் பகுதியைத் தாக்கி தோல்வி கண்டார்கள்.

பிரிட்டிஷ் கம்பெனி நாட்டை விட்டே வெளி யேற வேண்டும் என்று உத்தரவு போட்ட அவுரகசீப் மரணமடைந் தார். (கி.பி.1707) பேரரசு சிதைந்து, தனித்தனி ஆட்சிகள் உருவானது. தனது அதிகாரத்தை உறுதிப் படுத்த நேரம் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கு நல்ல வாய்ப்பாகி விட்டது. ராபர்ட் கிளைவ், ஆற்காடு பகுதியைப் பிடித்தார் (கி.பி.1749) தொடர்ந்து 12 ஆண்டுகள் போர் நடத்தி தென்னிந்தி யாவின் பல பகுதிகளைப் பிடித்தனர். கருநாடகப் போர்கள் மூலம் ஆந்திரத் தின் பெரும் பகுதியைக் கைப்பற்றினர்.

வெற்றி களைக் குவித்த ராபர்ட் கிளைவ் வடக்கே போனார். பிளாசி யுத்தம் நடத்தினார்; அதில் வங்கம் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டில், படிப்படியாக ஆங்கிலேயர்கள் கைப் பற்றிய பல்வேறு பகுதிகள்தான் இந்தியா. ஆங்கிலேயர் ஆட்சி செய்த இந்தியாவில், இன்றைய ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும் பகுதியும், பர்மாவும் (இன்றைய மியான்மர் நாடு) இலங்கையும் அடங்கி இருந்தது.

அப்போது இலங்கை ஒரு மாவட்ட மாகக் கூட அங்கீகரிக்கப்படவில்லை; ஒரு வட்டமாகவே கருதப்பட்டு, அதன் நிர் வாக அலுவலகமே தமிழநாட்டில் தான் இருந்தது. இன்றைய பாகிஸ் தானும் பங்களாதேசும் அன்றைய ‘இந்தியா’ தான். இப்போதுள்ள வட கிழக்கு மாநிலங்களோ, காஷ்மீரோ அன்றைய இந்தியாவில் இல்லை.ஆக, 3000 ஆண்டு கால வரலாற்றில் - தனித் தனிப் பகுதி களாக நிலவிய தேசங்களை - துப்பாக்கி முனையில் மிரட்டி, ஆங்கிலே யர்களால் உருவாக்கப்பட்ட நாடுதான் ‘இந்தியா’.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல