இந்த திருமணத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் போஜ்புரி திரைப்படத்துறையினர் மற்றும் சின்னத்திரை நடிகர்- நடிகைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
முன்னதாக நேற்று காலை நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மாலை அவருக்கு பெண்ணழைப்பு சடங்குகள் நடந்தன.
திருமணத்தில் டான்ஸ் மாஸ்டர் கலா, நடிகை ரோஜா, அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருமணத்துக்கு வந்தவர்களுக்கு காலையில் 15 வகை சிற்றுண்டிகளும், பிற்பகல் 35 வகையான அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது.
திருமணத்தையொட்டி பலத்த பாதுகாப்புக்கும் ரம்பா குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
திருமணம் முடிந்ததைத் தொடர்ந்து வருகிற 11ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தமிழ்த் திரையுலகினர் திரளாக கலந்து கொள்ளவுள்ளனர்.






































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக