கர்நாடக போலீசார் நித்யானந்தா சாமியை தேடி வந்தனர். ஹரித்துவார் கும்பமேளாவில் கலந்து கொண்ட சாமியார் நான் எந்த தவறும் செய்யவில்லை. நேரில் வந்து விளக்கம் அளிக்கிறேன் என்று சொல்லிவிட்டு தலைமறவாகிவிட்டார்.
மடத்தின் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்த அவர் எங்கு போனார் என்பது மர்மமாக இருந்தது. கடந்த 45 நாட்களாக அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர் இமாச்சலபிரதேசத்தில் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக கர்நாடக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர்.
இமாச்சலபிரதேச போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது சோலன் மாவட்டம் ஆர்கி என்ற இடத்தில் நித்யானந்தா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர்.
நித்யானந்தாவிடம் போலீசார் அங்கு வைத்தே முதல் கட்ட விசாரணை நடத்தினார்கள். அவரை பெங்களூர் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். நித்யானந்தா கொடுக்கும் வாக்கு மூலத்தின் அடிப்படையில் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக