போலீசார் புடைசூழ, இரு கரங்களை கூப்பி வணக்கம் தெரிவித்தபடி, சிரிப்பை உதிர்த்தபடி வெளியே வந்த நித்யானந்தாவுக்கு எதிராக நுழைவு வாயிலில் குவிந்திருந்த பலர் எதிராக கோஷமிட்டனர்.
நித்யானந்தாவுக்கு அடி...
அதில் சிலர் போலீஸாரையும் மீறி நித்யானந்தாவைத் தாக்கினர். அவருக்கு முதுகில் அடி விழுந்தது. நிலைதடுமாறிய அவரை போலீசார் சிவப்பு விளக்கு சுழலும் அம்பாசிடர் காரில் ஏற்றி ராம்நருக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அரசு மருத்துவமனையில் தயாராக இருந்த 2 மருத்துவர்கள் நித்யானந்தாவுக்கு வழக்கமான உடல் தகுதி சோதனைகளை நடத்தினர்.
மருத்துவ சோதனை:
சிறுநீர், ரத்த பரிசோதனையும் நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகளுடன் இரவு 10.30 மணிக்கு மாஜிஸ்திரேட் புஷ்பாவதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.
4 நாள் போலீஸ் காவல்:
அவரிடம் மாஜிஸ்திரேட் 15 நிமிடங்கள் விசாரணை நடத்தினார். அப்போது போலீஸ் காவலில் எடுத்து அவரை விசாரிக்க அனுமதி கேட்டு சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். மனுவை ஏற்ற மாஜிஸ்திரேட் வரும் 26ம் தேதி வரை நித்யானந்தாவை சி.ஐ.டி. போலீசார் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
செருப்பு வீச்சு:
இதையடுத்து மாஜிஸ்திரேட் வீட்டிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்ட நித்யானந்தாவை ஒருவர் திடீரென தாக்கினார். செருப்பும் வீசினார்.
நித்யானந்தாவை ஆபாச வார்த்தைகளால் திட்டியபடி தாக்கிய அந்த நபரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவர் ஆசிரியர் ஸ்ரீனிவாஸ் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து சி.ஐ.டி. போலீஸ் எஸ்பி யோகப்பா தனது பொறுப்பில் நித்யானந்தாவை விசாரணைக்காக ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம்-சென்னை போலீஸ்:
இந் நிலையில் நித்யானந்தாவிடம் ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.
நித்யானந்தாவின் சீடர் லெனின் கருப்பன் கொடுத்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நித்யானந்தா மீது கற்பழிப்பு மற்றும் கொலைமிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்குகள் எல்லாம் பெங்களூர் போலீசுக்கு மாற்றப்பட்டுவிட்டன.
இந்த வழக்குகளின் அடிப்படையில்தான் பெங்களூர் போலீசார் நித்யானந்தாவை கைது செய்துள்ளனர்.
ஆசிரமத்தில் நித்யானந்தா:
இந் நிலையில் நித்யானந்தாவை இன்று அவரது பிடுதி ஆசிரமத்துக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நித்யானந்தா பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப் போன்றவற்றையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பெண் பக்தைகளிடம் 10 பக்க ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிய நித்யானந்தா
தனது ஆசிரமத்துக்கு வந்த பெண்களிடம் 10 பக்கங்களைக் கொண்ட ஒப்பந்தத்தில் நித்யானந்தா கையெழுத்து வாங்கியுள்ள விவரம் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் கர்நாடக சிஐடி போலீசார் பெங்களூர் பிடுதியில் உள்ள இவரது தியான பீட ஆசிரமத்தில் ரெய்ட் நடத்தியபோது இந்த ஆவணங்கள் சிக்கியுள்ளன. மேலும் இந்த ரெய்டில் 5 பெண்களுடன் நித்யானந்தா செக்ஸ் லீலைகளில் ஈடுபட்ட சிடிக்களும் சிக்கியுள்ளன. இந்த தியான பீடத்துக்கு வருவோரிடம், குறிப்பாக பெண்களிடம் 10 பக்கம் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கப்படுவதுண்டு. அதில் கடைசி பக்கங்களில் செக்ஸ், உடலுறவு தொடர்பான ஷரத்துக்களை சேர்த்துள்ளனர். இந்த இரு பக்கங்களில் கூறப்பட்டுள்ளதாவது:-
வாழ்க்கைக்கு 64 வகையான தந்திரங்கள் தேவை. அதில் 6 வகையான தந்திரங்கள் செக்ஸ் தொடர்பானவை. உணர்ச்சியூட்டும் படங்களைப் பார்ப்பது, காம உணர்வுகளை தூண்டும் இசை கேட்பது, நிர்வாணமாக நடமாடுவது ஆத்மாவின் விடுதலைக்கு அவசியம். ஆசிரமத்தில் ஆராய்ச்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளவும் நேரிடும். அதற்கு யாரும் ஆட்சேபம் தெரிவிக்கக் கூடாது. யாரும் யாருடனும் உறவு வைத்துக் கொள்ளலாம் இதனால் சிலருக்கு உடல் அளவிலோ, மனதளவிலோ கஷ்டமாக இருந்தால் அதை தாங்கிக் கொள்ள வேண்டும். செக்ஸ் உறவில் சம்பந்தப்பட்ட நபர் அதை பற்றி வெளியே யாரிடமும் எந்த சூழ்நிலையிலும் சொல்லக்கூடாது. மேலும் இந்த ஒப்பந்தம் பற்றியும் வெளியில் சொல்லக் கூடாது. இவ்வாறு அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த 10 பக்க ஆங்கில ஒப்பந்தத்தை படித்துப் பார்க்க எல்லாம் நேரமே தராமல் நேரடியாக கையெழுத்து வாங்கியுள்ளனர் இந்த ஆசிரமத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆட்கள். ஆசிரமம் தானே கேட்கிறது என்பதால் பெரும்பாலானவர்கள் என்ன எழுதியுள்ளது என்பதை படிக்காமலேயே கையெழுத்து போட்டுள்ளனர். நீட்டிய பேப்பர்களில் எதுவும் கேட்காமல் கையெழுத்து போட்டு தந்துள்ளனர். ஆனால், இப்படி ஒப்பந்தம் போட்டு செக்ஸ் வைத்துக் கொள்ள சட்டத்தில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக