பிள்ளை பருவம் ஒரு காலம்
படிப்பின் நேரமும் ஒரு காலம்
விளையாட்டு பருவம் ஒரு காலம்
காதலின் நேரமும் ஒரு காலம்
மண வாழ்வும் ஒரு காலம்
கணவனின் அன்பும் ஒரு காலம்
பிள்ளையின் அன்பும் ஒரு காலம்
அனால் தாயின் காலம் மட்டு்ம் காலமில்லாத காலம்
அவள் மடி நிறையும் போது
அவள் மனம் நிறைவடைகிறாள்
உள்ளிருக்கும் ஜீவன் ஆசையும் பொழுது
அவள் அதை ரசிக்கிறாள்
அவள் கண்ணுக்கு அவள் பெற்ற பேரு
உலகமே
அது ஆறிலிருந்து அறுவதுவரையும் அவள் செல்வமே
அவள் கண் கூடா பார்ப்பது அவள் பெற்ற செல்வம் ஒன்றே
கணவனும் பின் வாங்குகிறான் இந்த உறவில்
அறுசுவை ஊட்டி ரசிக்கிறாள் அந்த நிறைவை
அழுகுரல் கேட்டு ஓடி வருகிறாள் அரவணைக்க
உன்னால் முடியாதடி என் அம்மவைபோல என்ற பட்டம் அவளுக்கே சொந்தம்
வீரனையும் மடியவைக்கும் உறவிது
ஏழைக்கும் பணக்காரனுக்கும் வித்யாசம் இல்லாத உறவிது
தாலாட்டு என்றும் மாறாது
அவள் உலகத்தில் யுகம் என்பதில்லை
பிள்ளையின் ஊனம் அவள் அறியாள்
எது வாகிலும் அவள் சுமப்பாள்
தாய் பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக