வெள்ளி, 2 ஏப்ரல், 2010

யார் முட்டாள்?

செக்ஸை தந்த இயற்கை முட்டாளா? ஏறக்குறைய தடை செய்துள்ள மனிதன் முட்டாளா?


காலம் காலமாய் நிலவும் சாதீயத்தால் மக்கள் தொகையின் மெஜாரிட்டி பிரிவினர் கல்விக்கு தூரமாக்கப்பட்டதால் இந்தியா அனேக மூட நம்பிக்கைகளின் ஜன்மபூமியாகிவிட்டது. பிற துறைகளை போலவே பாலியலும் இந்த மூட நம்பிக்கைகளின் தாக்குதலுக்கு தப்பவில்லை. இப்போதைக்கும் வருணாசிரம தருமத்தை டிவிஷன் ஆஃப் லேபர் இத்யாதி என்று தாங்கும் பிராமணொத்த‌மர்களும், சூத்திர மூர்க்கர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ன செய்ய உனக்காக நான் சிந்திக்கிறேன், உனக்காக நான் கல்வி பெறுகிறேன் என்பது எப்படிப்பட்ட கயவாளித்தனமோ நீங்களே சிந்தித்து பாருங்கள். உட்கார்ந்து தின்றதால் வேலயற்ற மூளைகள் சைத்தானின் தொழிற்சாலைகள் ஆகியதால் கல்வி என்பது டாப் சீக்ரட் ஆனது. ப்ளாக் மெயிலுக்கு வழி வகுத்தது. உடலுறவு விஷயத்திலும் தமக்கொரு விதி, பிறர்க்கொரு விதியென்று பிராமணர்கள் விதிக‌ளை வகுத்தனர்.

பிராமண‌ இளைஞன் வேதபாட சாலையில் கல்வியை முடித்து திரும்பும் வழியிலேயே ஆங்காங்கே தங்கி அதிதி பூசை என்ற பெயரில் ஆண்ட்டிகளுடன் சல்லாபிக்கலாம். ஆனால் சூத்திரப்பயல்கள் மட்டும் ஈரக் கோவணம் கட்டி வைத்து அடக்கப்பட்ட காமம் வன்முறையாக, அதை மறக்க குடி கூத்தில் மாட்டி தவிக்கலாம். பிராமணோத்தமர்கள் புத்ர காமேஷ்டி யாகம் என்ற பெயரில் ராணிகளையே மேயலாம். சூத்திரன் மட்டும் காமத்தை அடக்கி சகல காம்ப்ளெக்ஸுகளுக்கும் உள்ளாகி குற்ற மனப்பான்மையால் மனம் சிதறி, இவர்களின் அடிமையாக சாக வேண்டும். இப்படி நிறைய விசயம் இருந்தாலும் பதிவோட தலைப்புக்கும் அசலான சமாச்சாரத்துக்கும் வந்துர்றேன்.

1.உறுப்பின் நீளம்


இந்த ஐட்டம் பற்றி பல பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். புதிய வரவுகளுக்கு மட்டும் ஒரு வரி : பெண்ணுறுப்பின் முதல் 3 அங்குலங்களில்தான் உணர்ச்சி நரம்புகள் உண்டு. எனவே மூன்றங்குல ஆணுறுப்பே ஆணும், பெண்ணும் உச்சம் பெற போதுமானது. மேலும் உச்சம் பெற புழையை விட க்ளிட்டோரிசின் பங்கே அதிகம். சாமுத்ரிகா லட்சணத்தில் பெரிய அளவிலான உறுப்பு தரித்திரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது அது குறித்து பேசினால் கலீஜாகிவிடும் எனவே அம்பேல்…

2. மாதவிலக்கின் போதான உறவு

இது குறித்தும் ஏற்கெனவே சொன்ன மாதிரி, உடலுறவு என்பது கணவன், மனைவியே ஆனாலும் இருவரும் மனம் ஒப்பி ஈடுபடும் ஒரு செயலாகும். எனவே இதில் பெண்ணின் விருப்பம் முக்கியமே தவிர ஆணின் காமம் முக்கியமில்லை. (டைப் ரைட்டிங் மெஷின் ரெட் ரிப்பன்ல ஓடும்போது அர்ஜெண்டான டைப்பிங் வொர்க் இருந்தா கையிலேயே எழுதிர்றது பெஸ்ட். இல்லே அவிங்களும் ஓகேன்னா ஆணுறை அணிந்து ஈடுபடுவது நல்லது. இதில் சாஸ்திரத்துக்கோ புராணத்துக்கோ இடமில்லை. மனமும், மன ஒப்புதலும்தான் முக்கியம். மற்றபடி இன்ன பிற (ஜன்னி இத்யாதி) அச்சங்களுக்கு இடம் கொடாதீர்

3. வயதில் மூத்த பெண்களுடனான உறவு

இது குறித்து இதுவரை நம் பதிவுகளில் ஏதும் கூறியதில்லை. சைக்காலஜிப்படி ஒவ்வொரு ஆணும் தன் காதலி, மனைவியில் தன் தாயை காணத்தான் விரும்புகிறான். உடலுறவு என்பதே கருப்பைக்குள் மீண்டும் நுழைவதற்கான முயற்சி என்று கூட சைக்காலஜி சொல்கிறது. எனவே ஆண் வயதில் மூத்த பெண்ணை விரும்புவது இயல்பானதே. இது எக்ஸ்ட்ரா மேரிட்டல் உறவாக இருக்கும் பட்சத்தில் வரக்கூடிய பிரச்சினைகள் தவிர இளமை இழப்பது இத்யாதி பிரச்சினையெல்லாம் அதீத கற்பனை. இந்த இழவெடுத்த மூட நம்பிக்கை எத்தனையோ இளந்தளிர்களின் வாழ்வை சீரழித்துள்ளது. பணம் படைத்த கிழவாடிகள் இளம் தளிர்களை சூறையாடினால்தான் தம் இளமை பெருகும் என்று இந்த அக்கிரமத்தில் ஈடுபடுகின்றனர். இளமை வராததோடு, வாரெண்டும் வரும் என்பதை நினைவில் வைப்பது நலம்

4. சக்தியை உறிஞ்சும் பெண்ணுறுப்பு

ஆணும், பெண்ணும் ஒரே நேரத்தில் உச்சம் பெறும்போது (இதை காம சாஸ்திரம் சமரதம் என்கிறது) பெண்ணுறுப்பு ஆணுறுப்பை பிடித்து விடுவது போன்ற உணர்வு ஏற்படும். இதை சில அதி மேதாவிகள் அது சக்தியை உறிஞ்சுகிறது என்பர். இது தவறான கருத்தாகும். ஆணுக்கு வீரியம் வெளியேறும்போது இன்னும் வெளியேறாதா என்ற எண்ணம் ஏற்படும். ஆனால் விந்து பையில் உள்ள அளவு விந்துதான் வெளியேறும்.

5. வெற்றி எண்ணிக்கைகளை பொருத்ததே

நிறைய ஆண்கள் செக்ஸில் வெற்றி என்பது எத்தனை முறை செய்தோம் என்பதை பொறுத்தது என்று எண்ணுகிறார்கள். இது முற்றிலும் தவறானதாகும். நீங்கள் ஒருவருக்கு விருந்தளிக்க எண்ணினால் காய், கறி, ஸ்வீட், அப்பளம், ஐஸ்க்ரீம், சாம்பார், ரசம், மோர் பீடா எல்லாவற்றையும் ஒன் சிட்டிங்கில்தான் பரிமாறுவீர்கள். ஒவ்வொரு ஐட்டத்துக்கும் ஒவ்வொரு தடவை இலை போடமாட்டீர்கள் அல்லவா. எண்ணிக்கைகளை அதிகரிப்பது ஒவ்வொரு ஐட்டத்துக்கும் ஒவ்வொரு தடவை இலை போடுவது போன்றதே. இன்னொரு வகையில் சொன்னால் குக்கரில் அரிசி வேக வைக்கும்போது மத்தியில் கேஸ் தீர்ந்து போய் அது அணைந்து விட்டால் மாற்று சிலிண்டரை பொருத்தி வேக வைப்பதற்கு முன் அந்த அரிசி சோறு நாறிப்போகும்.

6. பகல் நேர உறவு

இது ஆயுளை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. பிள்ளை பெற வேண்டிக்கொள்ளும் உடலுறவுக்கு வேண்டுமானால் இது பொருந்தலாம். ஆடி மாதம் திருமணம் கூடாது என்பதுகூட பிறக்கும் பிள்ளைகளின் ஜாதகம் நல்லதாக இராது போக வாய்ப்புள்ள காரணத்தால்தான். இன்று நாமிருவர் நமக்கொருவர் என்ற நிலை வந்துவிட்ட நிலையில் இதை பின்பற்ற தேவையில்லை. ஆனால் சாப்பாட்டுக்கு பின் உடனே என்பதை விட சாப்பாட்டுக்கு முன் முடித்து கொள்வது நல்லது. மேலும் ஒரு குட்டித்தூக்கம் போடவோ, அரைமணி நேரம் ரிலாக்ஸ் ஆக நேரம் இருக்கும்போதோ மட்டும் ஈடுபடுவது நல்லது. தாயாக வாய்ப்பிருக்கும் நிலையில் பகல் நேர உடலுறவை தவிர்ப்பது நல்லதே!

7. வாய் வழிப்புணர்ச்சி வேசிகளுடன் மட்டுமே

இதுவும் தவறான கருத்தே. பெண் உச்சம் பெற உதவுவது க்ளிட்டோரிஸ் மீதான தூண்டுதலே. இது ஆணுறுப்பால் முழுக்க முடியாத வேலை. இதற்கு விரல்கள், மூக்கு, உதடுகள் இத்யாதியை பயன்படுத்துவதை விட நாக்கை உபயோகிப்பது நல்லதே. பெண்கள் நோக்கில் பலர் மாதவிலக்கு நேரங்களில் உடலுறவை விரும்புவதில்லை. அவர்களுக்கு தம் கணவனின் திருப்தி முக்கியமாய் இருக்கும் பட்சத்தில், கரை கடந்த காதலிருக்கும் பட்சத்தில், கணவனின் உறுப்பில் எவ்வித இன்ஃபெக்ஷனோ, அசுத்தமோ இல்லாத பட்சத்தில் வாய் வழி புணர்ச்சியில் ஈடுபடலாம். அதே போல் விரைப்பின்மை பிரச்சினையால் கணவன் தடுமாறும்போதும் இதை உபயோகித்துக்கொள்ளலாம். அதே சமயம் துரித ஸ்கலித கணவன்மார்கள் இதை பின்பற்ற கூடாது. தன் துணையின் உணர்வுகளை தூண்ட இம்முறையை உபயோகித்துக்கொள்ளலாம். (சுத்தம் என்ற நோக்கில் டெட்டால் இத்யாதி உபயோகிச்சுராதிங்கண்ணா.. வெ… போயிரும்)

உடலுறவுக்கு பின் குளியல்

அந்தக்காலத்தில் இன்டெர்னெட், ப்ரிண்ட் மீடியா, பேப்பர் எல்லாம் கிடையாது. அதனால் சின்ன சின்ன ஓலை நறுக்குகளில் கவிதையாக எழுத வேண்டி வந்தது. ஆரோக்கிய சூத்திரங்களை கூட லட்சுமிகரம், தரித்திரம் என்று எழுதி வைத்தனர். கால தேச வர்த்தமானங்களை பொருத்து பின்பற்ற வேண்டிய விசயங்கள் இவை. டைஃபாயிட் இருக்கும்போது, ஊட்டியில் இருக்கும்போது, தண்ணீரே இல்லாதபோது, குளிர் காலத்தில் வென்னீர் இல்லாதபோது என்ன செய்ய? இதெல்லாம் அவரவர் சூழலை பொருத்தவை. அதே நேரத்தில் உறவுக்கு பின் இன உறுப்புகளை தண்ணீரால் (சோப்பால் அல்ல) சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டியது கட்டாயம்.

இது இரவு நேர உறவுகளுக்கு, ஓய்வு நாளிலான உறவுகளுக்கு ஓகே. சப்போஸ் கோவிலுக்கு போறிங்க, ஜோசியர்கிட்டே போறிங்க, இல்லே ஒர் புது முயற்சி தொடர்பா போகப்போறிங்க. அப்போ குளிச்சுட்டு போனா நல்லது. இதை கூட ஏன் சொல்றேன்னா "அய்யோ குளிக்காம போறோமே"ங்கற கில்டி இருக்கக்கூடாதேனுதான். மேலும் சந்திரன் ஜல காரகன் மட்டுமில்லே மனோகாரகன் கூட. கோபமாவோ, வருத்தமாவோ இருக்கும்போது ஒரு குளியல் போட்டு பாருங்க (அதுலயும் வென்னீர் டபுள் ஓகே) உடனே ரிலீஃப் கிடைக்கும். கம்ப்யூட்டர்ல ரிசெட் பட்டனை அழுத்தினமாதிரி.

1. ஆண்மை குறையும்

தொடர்ந்து உடலுறவு கொள்வதால் (இதை சுய இன்பத்துக்கு பொருத்தி பார்க்கவேண்டாம். அந்த ஸ்கூல் வேறு) ஆண்மை குறையும் என்பது சர்வ நிச்சயமாக மூட நம்பிக்கையே. இன்னும் சொல்லப்போனால் விரதம், அது, இது என்று மாதக்கணக்கில் இடைவெளிவிடுவதால்தான் குறையும்.

ஆரோக்கியமான வாழ்வை கொண்டிருப்பவர் திருமணத்திற்கு முன் கஞ்சானாக இல்லாமல் மாதம் ஒருமுறை, இருமுறை சுய இன்பம், உடலுறவு கொண்டு வந்தவருக்கு உடலுறவுகளால் ஆண்மை குறையும் வாய்ப்பே கிடையாது. இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன். ஜிம் சென்று பாடி பில்டப் செய்பவர்கள் என்ன செய்கிறார்கள்? உடலின் உறுப்புகளுக்கு வேலை தருகிறார்கள். அதனால்தான் அந்த பகுதிகளுக்கு ரத்தம் பாய்கிறது. ரத்தக்குழாய்கள் விரிவடைகின்றன. அப்பகுதி வலுப்பெறுகிறது.

இதே விதி உடலின் இனப்பெருக்க மண்டலத்துக்கும் பொருந்தும். என்ன ஒரு வித்யாசம் என்றால் உடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படாது என்பதோடு, இறைக்கிற கேணிதான் ஊறும் என்பதுபோல் ஆண்மை பெருகும் .

ஏற்கெனவே முன் பதிவுகளில் சொன்னாற்போல் அவசர அடி, கள்ள அடிகளால் வெத்து ….. நித்திரைக்கு கேடு என்ற நிலைதான் ஏற்படும். முக்கியமாக பெண்கள் உடலுறவின் பால் அலட்சிய பாவம் கொண்டிருக்க காரணம், இந்த நுனிப்புல் மேய்தலும், எடுத்தேன் கவித்தேன் தனமும்தான். இதனால் பெண்ணுக்கும் பயனில்லை, ஆணுக்கு ஏதோ ஒரு வித ரிலீஃப் கிடைத்தது போலவே இருக்குமே தவிர குற்ற்மனப்பான்மை (அவளுக்கு ஏதும் உறைச்சாப்லயே இல்லயே), மீண்டும் ஒரு இன்னிங்ஸ் முயற்சிக்கலாமா என்ற எண்ணம். தப்பிதவறி அதில் தோற்றால் நிரந்தர ஆண்மையின்மையே கூட ஏற்பட்டு விடும்.

தொடர் உடலுறவுகளால் ஆண்மை குறையவும் வாய்ப்புண்டு.
அதற்கு காரணம் சாதாரண ஆரோக்கிய சூத்திரங்களை கூட பின்பற்றாதது. இளைப்பாறவோ, விந்து ஊறவோ போதிய சமயம் தராது முயற்சிப்பது, எதிராளிக்கு விருப்பம் இல்லாத போதும் வீம்புக்கு முயல்வது இதெல்லாம் காலப்போக்கில் ஆண்மைக்கு வேட்டு வைக்கும் இது உறுதி.

உண்டவுடன் அதில் இறங்குவது தவறு. (ஏற்கெனவே சொன்னது போல் ஜீரண மண்டலம் வேலை செய்யும்போது இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யாது. ஒரு வேலை நின்றால் தான் அடுத்த வேலை துவங்கும். உண்டவுடன் அதில் இறங்கினால் ஜீ.மண்டலம் வேலை நிறுத்தம் செய்யும் இதனால் அஜீர்ணம், அசிடிட்டி, பசியின்மை, வயிற்று வலி இத்யாதி ஏற்படும்).

செக்ஸ் பவர் என்பது ஜெனரல் பாடி பவர் மீதே ஆதாரப்பட்டுள்ளது. எனவே சாதாரண ஆரோக்கிய சூத்திரங்களை பின் பற்றுவது கட்டாயம். தண்ணீர் நிறைய குடிப்பது, பசித்து உண்பது, போதிய சத்தான உணவு, தேவையான தூக்கம், தேவையான ஓய்வு, சுத்தமான காற்று, சுத்தமான தண்ணீர், உடல் சுத்தம், மனசுத்தம் (அதாங்க செக்ஸ் தொடர்பான டுபுக்குகளை நம்பாதிருத்தல்) எல்லாம் தேவை. இவற்றில் கோட்டை விட்டு அதே வேலையாய் இருந்தால் நாஸ்திதான்.

ஜோதிடம் தொடர்பான உண்மை

இனப்பெருக்க மண்டலம், விந்து உற்பத்தி, செக்ஸ் பவர், ஆர்வம் இதற்கெல்லாம அதிபதி சுக்கிரன். இவர் ஒவ்வொரு ராசிக்கும் வருடத்தின் சுமார் பத்து மாதங்கள் ஃபேவர், இரண்டு மாதங்கள் தான் அன் ஃபேவர். எனவே போட்டுத்தாக்குங்க. விசயம் தெரியாம சுக்கிரன் ராசிக்கு 3, 10 ல இருக்கும்போது பெண்டாட்டி மேல பாஞ்சா நாஸ்திதான். அதே போல சுக்கிரன் நீசம் பெறும்போதும் (கன்னியில்) யுத்த காரகனான செவ்வாய், நிழல் கிரகங்களான ராகு, கேது, பாவ கிரகங்களான சனி, சூரியன் ஆகியோருடன் சேரும்போது சமாச்சாரம் ரிவர்ஸ் அடிக்கும். டேக் கேர். பை தி பை சுக்கிரன் சந்திரனுடன் சேரும்போது அந்த விசயத்தில் புது புது கற்பனைகள் தோன்றும். தூள் கிளப்பலாம்.

தொடர் உடலுறவுகளால் கவர்ச்சி குறையும் ஞா.சக்தி குறையும் என்றும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. இதெலாம் டுபுக்குதான். என்ன ஊரான் மனைவிக்காகவோ, ஊரான் பெண்ணுக்காகவோ (அதாங்க காதல்) ஜொள் விட்டு ஸ்கெட்ச் போடும்போது அந்த விசயத்துமேல கான்சன்ட்ரேஷன் அதிகமாகி மத்த விசயத்துல கோட்டடிச்சுருவிங்க (முக்கியமா பரீட்சை). காது, ஜான்சன் பட்ஸ் இந்த இரண்டுக்கும் உள்ள உறவு தெரியும். காதுக்குள்ள எதையும் போட்டறியாத பார்ட்டி பட்ஸை அப்படி காட்டினா போதும் உடம்பே சிலிர்க்கும். அட் தி சேம் டைம் வேற ஒரு பார்ட்டி நூறு ஃஇரு நூறு கொண்ட பட்ஸ் பாக்கெட்கை பக்கத்ல வச்சிக்கிட்டு கையும் காதும் சும்மாதானே இருக்குனு போட்டுக்கிட்டே இருந்தா எண்ணாகும்? அதே கதை தான் இதுலயும்.

டூ மச் ஈஸ் ஆல் வேஸ் பேட்
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

நம் தலைவர்கள் அனைவரும் அவரவர் உடல் வலிமைக்கேற்ற அளவில் குறிப்பிட்ட இடைவெளிகளில் உடலுறவு செய்து வந்தேர்களேயானால் (ஆழமான, பதட்டமற்ற, இருவரும் உச்சம் பெறும் வகையில்) அவர்களில் வன்முறை வலுவிழக்கும், பொன்னாசை, பொருளாசை, பதவி வெறி குறையும். இயற்கையின்பால் நன்றி பொங்கும். இயற்கையின் பிரதி ரூபம் பெண் என்பதை உணர்வார்கள். இன்பத்தை அள்ளிவழங்கிய பெண்ணினத்துக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் வகையில் செயல்படுவார்கள் என்றால் உங்களால் நம்ப முடியாது. தற்போது எவனெவன் வன்முறையை விரும்புகிறானோ, பொன், பொருள், பதவி தேடி அலைகிறானோ அவனுக்கெல்லாம் மேற்சொன்ன ஆழமான, பதட்டமற்ற உடலுறவு கிடைத்திருக்காது.

யானைக்கு மதம் எப்போ பிடிக்கும்? அதற்கு செக்ஸ் கிடைக்காதபோது. வீட்டு நாய் வந்தவனையெல்லாம் எப்போ கடிக்க ஆரம்பிக்கும்? அதை க்ராசிங்குக்கு அனுப்பாதபோது, சாதுவான பசுமாடு எப்போ முட்ட ஆரம்பிக்கும்? அதற்கு செக்ஸ் கிடைக்காதபோது. கல்யாணமாகாத பெண்களுக்கு, திருமணமாகி சில மாதங்களே ஆன பெண்களுக்கு அ மெனோஃபஸ் நெருங்கும் வயது பெண்களுக்கு அதிகம் பேய் பிடிக்கும், அ சாமியாடுவார்கள். இதற்கும் காரணம் அதுதான்.

டீன் ஏஜ் இளைஞனோ இளைஞ்சியோ எப்போது எரிந்து விழ ஆரம்பிக்கிறாள் அவளுக்கு செக்ஸ் கிடைக்காதபோது (அதிலும் வயது வந்த பெண் அ பையன் இருக்கும்போது பெரிசுகள் மேட்னி ஃபர்ஸ்ட் ஷோ போட ஆரம்பித்தால் இது அதிகரிக்கவே செய்யும். மனிதனில் உள்ளது ஒரே சக்தி. அந்த சக்தி செக்ஸ் பவராக வெளிப்பட முடியாதபோது அழிவு சக்தியாக மாறுகிறது. மனிதனில் உள்ள அடிப்படை இச்சைகள் இரண்டே அவை கொல்லும் இச்சை அ கொல்லப்படும் இச்சைதான். இவை இரண்டுமே செக்ஸில் நிறைவேறுவதால் செக்ஸ் என்பது அத்யாவசியமான ஒன்றாகிறது.

காவல் துறையினருக்கும் மேற்சொன்ன பதட்டமற்ற, விழிப்புணர்ச்சியுடன் கூடிய, ஆழமான உடலுறவு கிடைத்தால் லாக்கப் டெத் நடக்காது, ஸ்டேஷனில் வைத்து கற்பழிப்பு நடக்கவே நடக்காது. இது அதிகாரிகளுக்கு கிடைத்தால் ஊழியர்கள் மேல் எரிந்து விழமாட்டார்கள். லஞ்ச லாவணியங்களுக்கு அடிமை ஆகமாட்டார்கள்.

ஒன்னு இவன் சாகனும் இல்லாட்டி சாகடிக்கனும்.

ஆண் பார்வையில்

விந்து வெளியேறும்வரை அவளை கொல்லுவதாய் உணர்கிறான். பற்குறி பதித்தல், தட்டுதல், கிள்ளுதல், உறுப்பை திணித்தல், முரட்டுத்தனமாக இயங்குதல், இத்யாதி மூலம் அவனது கொல்லும் வெறி நிறைவேறுகிறது. விந்து வெளியேறும்போது ஆண் தான் செத்து போவதாய் (குட்டி மரணம்) உணர்கிறான். காலச்சக்கரம் நிற்கிறது.

பெண்பார்வையில்

ஆரம்பத்தில் கொல்லப்படும் இச்சை நிறைவேறுகிறது. க்ளைமேக்சில் (விந்து வெளிப்படும்போது) அவனை தான் கொன்றுவிட்டதாய் உணர்ந்து (அடி மனதில்) திருப்தியடைகிறாள். அவளது கொல்லும் இச்சை நிறைவேறுகிறது. பல் தேய்ப்பதை தவிர வேறு உடற்பயிற்சி இல்லாத நிலையில் உடலுறவே நல்லதொரு உடற்பயிற்சியாகவும் உதவுகிறது. அர்த்தனாரி தத்துவம் தெரியுமல்லவா. ஒவ்வொரு ஆணிலும் பெண் தன்மை இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணிலும் ஆண் தன்மை இருக்கிறது. இங்கு எவனும் முழு ஆண்மகனும் அல்ல எவளும் முழு பெண் மகளும் அல்ல. எல்லாம் பற்றாக்குறை பட்ஜெட்தான். ஆணும் பெண்ணும் இணையும்போது அந்த பற்றாக்குறை ஓரளவேனும், சில நிமிடங்களுக்கேனும் ரெக்கவரி ஆகிறது.

(இருவரும் ஒரே நேரத்தில் உச்சம் பெறும்போது உண்மையிலேயே இரண்டற கலக்கிறார்கள். ஆழமான உடலுறவில் பல முறை உச்சத்தை தள்ளிப்போட முடியும். பேக் டு தி பெவிலியன். அவ்வாறு ஒத்திப்போட்டால் இருவரும் ஒரு மணி நேரமேனும் ஈருடல் ஓருயிராகலாம்)

செக்ஸ் என்பது உயிர்களின் ஜீவாதார உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட. உயிர் வாழ்தல் உயிர்களுக்கு முக்கியமாய் சிந்திக்க தெரிந்த மனிதர்களுக்கு கொடுத்துள்ள வேலைகள் இரண்டே. ஒன்று உயிர்வாழ்தல் இரண்டு இனப்பெருக்கம் செய்தல். இந்த இரண்டில் இனப்பெருக்கம் செய்தலையே அதி முக்கியத்துவம் வாய்ந்ததாய் இயற்கை கருதுகிறது.

எனவேதான் 6 மாதங்களில் உயிரிழக்க போகிறவளுக்கு கூட மாதவிலக்கு வெளியாகிறது. 3 மாதங்களில் சாகப்போகிற ஆணுக்கு கூட குறி விரைக்கிறது. வீரியம் ஸ்கலிதமாகிறது.

முட்டாள், பிறவி நோயாளி, மேங்கோ ரைஸ்டு, ஒல்லி பீச்சான், பிச்சைக்காரன், ஏன் எயிட்ஸ் நோயாளிக்கு கூட செக்ஸ் தேவைப்படுகிறது. நம் அனைவரையும் விட இயற்கை சீனியர். நம் அனைவரையும் விட அறிவாளி. அதனால்தான் இந்த ஏற்பாட்டை செய்து வைத்திருக்கிறது.

ஆண்கள் விசயத்தில் சுமார் 13 வயது முதல் சாகும்வரை அவனில் செக்ஸ் பவரை புதைத்து வைத்திருக்கிறது. பெண் எனில் அவளால் ஒரு பருவத்துக்கு பின் (அப்போ... அந்த காலத்துல 55 வயசுல கூட ரெகுலர் பீரியட்ஸ் உண்டு. ஏன்னா ஆரம்பம் 17 வயதுக்கு மேலதான், இப்போ 8 அல்லது 9 வயதுக்கு முன்பே கூட பருவம் எய்துவதால் 35 வயசுக்கே மெனோஃபஸ் ஸ்டார்ட்) தாயாக முடியாதோ என்னவோ செக்ஸை பெற முடியும், தரமுடியும். செக்ஸுக்கு இத்தனை முக்கியத்துவம் தந்த இயற்கை முட்டாளா? இந்த முக்கியத்துவத்தை அறியாது ஏறக்குறைய செக்ஸை தடை செய்து வைத்திருக்கும் மனிதர்கள் முட்டாள்களா?
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல