ஒஸாமா பின்லேடனின் முன்னாள் மெய்ப் பாதுகாவலர் நாஸர் அல் பஹ்றியால் எழுதப்பட்ட “ஷடோ ஒப் பின்லேடன்' என்ற தலைப்பிலான நூலை மேற்கோள் காட்டி பித்தானிய “த சண்டே டைம்ஸ்' பத்திகை ஞாயிற்றுக்கிழமை இத்தகவலை வெளியிட்டிருந்தது.
பின்லேடன் பந்து விளையாட்டுகளுக்குரிய ஆடைகளை அணியாமல் தனது வழமையான பாரம்பய ஆடைகளுடன் அவ்விளையாட்டுகளை விளையாடுவார் என அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இரு உலகப் போர் கால தந்திரோபாயம் தொடர்பில் வரலாற்றுக் குறிப்புகளை மேற்கோள் காட்டி உரையாடுவது பின்லேடனுக்கு பிடித்தமான ஒன்றாக இருந்துள்ளது. அது தவிர பந்தயக் குதி ரைகள் தொடர்பிலும் பின் லேடன் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
இரண்டாம் உலகப் போர் கால முக்கியத்துவ பிரித்தானிய கட்டளைத் தளபதியான பெர்னார்ட் மொன்ட் கோமெறி மற்றும் முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி ஜெனரல் சாள்ஸ் டி கோலி ஆகியோரது வரலாறுகளை மேற்கோள் காட்டி பேசுவதென்றால் பின்லேடனுக்கு கொள்ளைப் பிரியம் என நாஸர் அல் பஹ்றி (38 வயது) தெவித்துள்ளார்.
மேலும் பின்லேடன் தனது 4 மனைவிகளுக்கிடையே பிணக்குகள் ஏற்படுவதை தவிர்க்க கவனத்துடன் செயற்பட்ட போதும், சிரியாவை பிறப்பிடமாகக் கொண்ட கவர்ச்சிகரமான முதல் மனைவி மீது சவூதியைச் சேர்ந்த வயது கூடிய இரண்டாவது மனைவியின் தீவிர பொறாமையை தடுத்து நிறுத்த திராணியற்ற ஒருவராக இருந்தார் என அப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் பின்லேடன் தனது மனைவிகளுக்கிடையிலான பிரச்சினைகளை தவிர்க்க இஸ்லாமிய மத குருமாரிடம் ஆலோசனையை நாடியதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக