ஆனால் அது ஒரு நோய் என்று நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதுபோன்று நரம்புகள் புடைத்துக் கொண்டு பெரிதாக வெளியே தெரிவது நரம்பு வீக்க நோயின் அறிகுறியாகும். இதனால் ஏற்படும் வலியும், பிரச்சினைகளும் சொல்லி மாளாதவை.
பொதுவாக நரம்புகள் இரண்டு வகைப்படும். ஒன்று இதயத்தில் இருந்து சுத்தமான ரத்தத்தை உடலின் மற்ற பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் தமனி வகை. மற்றொன்று உடலின் பல்வேறு இடங்களில் இருந்து அசுத்தமான ரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லும் சிறை வகை.
இந்த நரம்புகளின் வழியாகத்தான் நமது உடல் முழுக்க ரத்தம் பயணிக்கின்றது. இந்த நரம்புகளில் ஆங்காங்கே உள்ள ஜவ்வு போன்ற அமைப்புகள் மூடி திறக்கும் போது ரத்த ஓட்டம் சீரடைகிறது. இந்த ஜவ்வுகளால்தான் நமது உடலில் ஒரே வேகத்தில் ரத்த ஓட்டம் நடைபெறுகிறது.
சில சமையங்களில் இந்த ஜவ்வுகளில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவையோ செயலிழக்கும் போது நரம்புகளின் வழியாக ரத்த ஓட்டம் சீரற்ற நிலையை அடைகிறது. ஒரு சில சமயம் வேகமாகச் செல்லும் ரத்தம் ஓரிடத்தில் மெதுவாகச் செல்லத் துவங்கும். இதனால் ஏற்படுவதுதான் ரத்த நாள வீக்க நோயாகும். இந்த நோய்க்கு மருத்துவ சிகிச்சையின் மூலம் குணம் பெறலாம்.
பொதுவாக பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் இதுபோன்ற ரத்த நாள வீக்க நோய் ஏற்படுவது இயல்பு. கருவின் வளர்ச்சியால் கர்ப்பப்பை நரம்புகளை அழுத்துகிறது. அதனால் நரம்புகளில் இருக்கும் ஜவ்வுகளும் செயலிழக்கின்றன. இதனால் இதயத்திற்குச் செல்லும் ரத்தத்தில் ஒரு சீரற்ற நிலை ஏற்படும். இதனால்தான் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி மயக்கமும், மூச்சு வாங்குதலும் ஏற்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களின் கால் நரம்புகள், கர்ப்ப காலத்தின் இறுதி மாதத்தில் பச்சை அல்லது நீல நிறமாகத் தெரிவதற்கும் இதுதான் காரணம். இதுவும் ரத்த நாள வீக்க நோயின் ஒரு வகைதான். குழந்தை பிறந்ததும் இது சரியாகிவிடுகிறது.
ரத்த நாள வீக்க நோய் முன்பு 50 வயதுக்கு மேற்பட்டவர்களை தாக்கும் நோயாக இருந்தது. ஆனால் தற்போது இளைஞர்களையும் இந்த நோய் தாக்குகிறது. உலகத்தில் ஏராளமானோர் இதுபோன்ற ரத்த நாள வீக்க நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலில் இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக இருந்தது.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக