சனி, 24 ஏப்ரல், 2010

Partition னில் ஒரு Partition

விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பில் உள்ள டிஸ்க் மெனேஜ்மண்ட் கருவி மூலம் ஹாட் டிஸ்கில் பாட்டிசன் செய்யப்படாத வெற்றிடத்தில் புதிதாக பாட்டிசன்களை உருவாக்கலாம் என நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் இந்த டிஸ்க் மெனேஜ்மண்ட் கருவி மூலம் ஏற்கனவே பாட்டிசன் செய்யப்பட்ட பகுதியினுள் டேட்டா இழப்பின்றி மேலும் பாட்டிசன்களை உருவாக்க முடியாது.

அவ்வாறு மறுபடியும் பாட்டிசன்களை உருவாக்க வேண்டுமானால் பாட்டிசன் மேஜிக் போன்ற மூன்றாம் தரப்பு மென்பொருள் கருவிகளையே உபயோகிக்க வேண்டும். அல்லது விண்டோஸை மறுபடி நிறுவும் போது தேவையான பாட்டிசன்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.

ஆனால் டிஸ்க் மெனேஜ்மண்ட் கருவி மூலம் ஹாட் டிஸ்க்கை விரும்பியவாறு பாட்டிசன் செய்து கொள்ளும் வசதியை விண்டொஸின் விஸ்டா பதிப்பு தருகிறது. இதன் மூலம் ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒரு பாட்டிசனைச் சுருக்கி புதிதாக மேலும் பாட்டிசன்களை உருவாக்குதல் (Shrink), பாட்டிசனின் அளவை அதிகரித்தல் (extend) பாட்டிசன் செய்யப்படாத வெற்றிடத்தில் புதிதாக பாட்டிசனை உருவாக்குதல், போமட் செய்தல் (Format) போன்ற பல்வேறு ஹாட் டிஸ்க் சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.

இந்த டிஸ்க் மெனேஜ்மண்ட் கன்சோலை Disk Management console நீங்கள் (மை) கம்பியூட்டர் மேல் ரைட் க்ளிக் செய்து Manage கட்டளையைத் தெரிவு செய்வதன் மூலம் அல்லது ரன் பொக்ஸில் Diskmgmt. msc என டைப் செய்வதன் மூலம் அணுகலாம்.

டிஸ்க் மெனேஜ்மண்ட் கருவியை Manage கட்டளை மூலம் அணுகியிருப்பின் அதில் Storage க்ளிக் செய்து Disk Management தெரிவு செய்ய வேண்டும். ரன் பொக்ஸ் மூலம் அணுகும் போது படம் (1) இல் உள்ளது போல் ஒரு விண்டோ தோன்றும்.

படத்தில் காட்டியிருப்பது 80 ஜீபீ கொள்ளவுள்ள ஒரே பாட்டிசன் கொண்ட ஒரு ஹாட் டிஸ்க். ஏற்கனவே பாட்டிசன் செய்யப்பட்ட இந்த ஹாட் டிஸ்கை இரண்டு பாட்டிசன் கொண்டதாகப் பிரிக்க வேண்டுமானால் (படம் – 2) அந்த பாட்டிசன் மீது மேல் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Shrink Volume தெரிவு செய்ய வேண்டும். அப்போது புதிதாக பாட்டிசனை உருவாக்க எவ்வளவு வெற்றிடம் உள்ளது என்பதை டிஸ்க் மெனேஜ்மண்ட் கருவி பரீட்சிக்க ஆரம்பிக்கும்.

புதிதாக பாட்டிசன் ஒன்றை உருவாக்குவதற்குப் போதிய இடம் உள்ளதா எனப் பரீட்சித்த பின்னர் படம் (3) உள்ளது. போல் Shrink டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு ஹாட் டிஸ்கை பாட்டிசன் செய்வதற்கு முன்னர் உள்ள பாட்டிசனின் மொத்த அளவு, அதனை சுருக்குவதன் மூலம் கிடைக்கப் பெறும் வெற்றிடம், புதிய பாட்டிசனை உருவாக்க நீங்கள் வழங்க விரும்பும் அளவு மற்றும் புதிதாக பாட்டிசனை உருவாக்கிய பின்னர் மாற்றமடையும் ஏற்கனவே இருந்த பாட்டிசனின் அளவு என்பவற்றை இந்த Shrink டயலொக் பொக்ஸில் பட்டியலிடும்.

இங்கு மை கம்பியூட்டர் திறந்து ஹாட் டிஸ்கில் உள்ள வெற்றிடத்தைப் பரீட்சிக்கும் போது அதிக வெற்றிடம் (61 ஜீபீ) இருப்பதாகக் காட்டினாலும் அதனை சுருக்கி புதிதாக பாட்டிசனை உருவாக்குவதற்கு மிகக் குறைந்த அளவிலான (7 ஜீபீ) வெற்றிடமே இருப்பதாக Shrink டயலொக் பொக்ஸ் காண்பிப்பதை அவதானிக்கலாம். இதற்கான காரணம் யாதெனில் பேஜ் பைல் (page file) ஹைபனேசன் (hibernation) மற்றும் ரீ ஸ்டோர் (restore) போன்ற செயற்பாடுகளுக்கு ஹாட் டிஸ்கில் குறிப்பிட்ட பகுதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருக்கும்.

இந்த பைல்களை அன்மூவபல் பைல் (unmovable files) எனப்படும். இவற்றை டிஸ்க் மெனேஜ்மண்ட் கருவியினால் இடமாற்றம் செய்ய முடியாது. இந்த அன் மூவபல் பைல்களைத் தவிர்த்து ஏனைய பகுதிகளிலுள்ள மீதமுள்ள வெற்றிடமே புதிய பாட்டிசனை உருவாக்கக் கூடிய உச்ச அளவாகக் காண்பிக்கும். அடுத்து Enter amount of space to shrink எனுமிடத்தில் தேவையான அளவை வழங்கி விட்டு Shrink பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும். சிறிது நேரத்தில் புதிதாக ஒரு பாட்டிசன் உருவாகக் காணலாம்.

பாட்டிசனை உருவாக்கிய பின்னர் அடுத்த கட்டமாக அதனை பயன்படுத்துவதற்கு அந்த பாட்டிசன் மேல் ரைட் க்ளிக் செய்து New Simple Volume என்பதைத் தெரிவு செய்ய ஒரு விசர்ட் தோன்றி வழி நடத்தும். அதனை நிறைவு செய்து புதிய பாட்டிசனை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல