உலகிலேயே அதிக வயதான நிலையில் பட்டம் பெற்ற 2வது நபர் இவர் தான். முதல் நபர் நொளா ஆச்சஸ், கன்சாஸ் மாநிலத்தை சேர்ந்த இவர் தன் 95 வயதில் போர்ட் ஹேய்ஸ் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார்.
அதிக வயதில் பட்டம் பெற்றதற்காக இவர் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது. இப்போது 98 வயதான இவர் சமீபத்தில் லிபரல் ஸ்டடிஸ் என்ற பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
பரபரப்பான வாழ்க்கை காரணமாக என்னால் பட்டப் படிப்பை படிக்க முடியவில்லை. இப்போது தான் படிக்க முடிந்தது என்கிறார் சோரெஸ்.
இவருக்கு 6 குழந்தைகளும் 40 பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர் ஆக்லாந்து நகரில் உள்ள பெண்களுக்கான மில்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார். கடந்த சனிக்கிழமை நடந்த பட்டமளிப்பு விழாவில் 500 பேருக்கு பட்டமளிக்கப்பட்டது. அவர்களில் ஒருவராக இவரும் பட்டம் பெற்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக