அவன் வாதாடும்பொழுதே நகைச்சுவையாகப் பேசுவதோடு வேடிக்கையாக நடித்துக்காட்டவும் தொடங்கிவிடுவான். ஒருமுறை அவனுடைய கட்சிக்காரன் ஒருவனை நாய் ஒன்று கடிக்க வந்தது. அதனை அவன் தன்னுடைய கைத்தடியின் பிடியால் ஓங்கி அடித்துக் கொன்றுவிட்டான். இது பற்றி நீதி மன்றத்தில் வழக்கு நடந்தது. ‘ஏன் என்னுடைய கட்சிக் காரனின் நாயை உன்னுடைய கட்சிக்காரன் கொன்றான்?” என்று கேட்டான் எதிர்தரப்பு வழக்கறிஞன்.
“ஏன் அவனை அது கடிக்க வந்தது?” என்று மறு கேள்வி கேட்டான் லிங்கன்.” கடிக்க வந்தால் என்ன? ஏன் அவன் கைத்தடியின் பின்புறத்தால் அதனை அடித்திருக்கக் கூடாது?” என்றான் எதிர்தரப்பு வழக்கறிஞன் உடனே லிங்கன், ‘ஏன் அந்த நாயும் தன் பின்புறத்தால் ஓடி வந்திருக்கக்கூடாது?’ என்று கூறி அந்த நாய் பின்புறமாக ஓடிவருவது போன்று நடித்துக் காண்பித்தான். இதைக்கண்டு நீதிபதிகள் முதற்கொண்டு எல்லோரும் ‘கொல்லென்று சிரித்துவிட்டனர். முடிவு என்ன? லிங்கனே அந்த வழக்கில் வெற்றியடைந்தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக