காலை நேர நோய் (morning sickness )என்றால் என்ன?
இது கர்ப்பமான பெண்களில் ஏற்படுகின்ற வாந்தி மற்றும் வாந்தி ஏற்படுத்தும் ஓர் உணர்வு(nausea) தான் 'காலை நேர நோய்' எனப்படுகின்றது. இந்தக் காலை நேர நோயானது கர்ப்பமாகி முதல் மூன்று தொடக்கம் நான்கு மாதங்களுக்கு மட்டுமே ஏற்படும்..
கர்ப்பமடையும் ஒரு பெண் வாந்தியினால் அவதிப்படுவது முதல் மூன்று மாதங்களுக்கே. இந்த நோயினால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
காலை நேர நோயின் ஆதிக்கத்தைக் குறைக்க சில வழிகள்:
1. இரவில் எண்ணெய், மற்றும் கொழுப்புத் தன்மையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். (பொரித்த காரம் கூடிய உணவுகள்)
2. ஒரேயடியாக நிறையச் சாப்பிடுவதைத் தவிர்த்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட வேண்டும்.
3.காபோகைட்றேட் (carbohydrate) நிறையக் கொண்ட உணவு வகைகளை உண்ண வேண்டும் (வெள்ளை அரிசி, அவித்த உருளைக் கிழங்கு, இனிப்புக் குறைவான மாவினால் செய்த பிஸ்கெட் போன்றவை)
4.காலை எழுந்தவுடன் படுக்கையில் சற்று நேரம் அமர்ந்திருந்து ,ஆறுதலாக சுவாசிக்க வேண்டும்.
5.பழங்கள் மரக்கறி வகைகளை அதிகம் உட்கொள்வது நல்லது.
6.வயிறு முற்றாக வெறுமையாவதைத் தவிர்க்க வேண்டும்.
7.படுக்கையிலிருந்து எழுந்தவுடனேயே உங்கள் அன்றாட செய்கைகளில் ஈடுபடும் முன் சீனித்தன்மை குறைந்த பிஸ்கட் வகைகளில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடுவது நலம்.
மேற்கண்ட வழிவகைகள் கால நேர நோயை ஓரளவு கட்டுப்படுத்துமே அல்லாது ஒரேயடியாக நிவாரணத்தைத் தந்து விடாது. காரணம் இந்நோய்க்கான சிகிச்சையும் குறைந்தளவிலே தான் உள்ளது. இதனை நோய் என்று நினைத்து மலைத்துவிடாமல், மூன்றே மூன்று மாத காலம் பொறுமையாகக் காத்திருப்பது நல்லதல்லவா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக