அந்த ஆச்சர்யத்தின் பின்னே இருப்பதும் ஒரு புதிரான சங்கதி தான். பாட்டிலில் ஒரு செய்தி பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். புறா காலில் செய்தியை அனுப்பி வைப்பது முதல் தபால் தந்தி ,இமெயில் என மனிதகுலம் எத்தனையோ த்கவல் தொடர்பு வழிகளை கையாண்டு இருக்கிறது.
இவற்றுக்கு நடுவே கொஞ்சம் விநோதமான தகவல் தொடர்பும் புழக்கத்தில் இருக்கிறது.இதனை பரவலானது என்றோ பிரபலமாது என்றோ சொல்ல முடியாது..ஆனால் சுவாரஸ்யமானது. பாட்டிலில் செய்தியை எழுதி கடலில் வீசி எறிந்து விட்டு எப்போதாவது யாராவது அதனை பார்த்து தொடர்பு கொள்கின்றனரா என்று காத்திருப்பது தான் இந்த தகவல் தொடர்பு முறை. இந்த செய்தி பார்க்கப்படும் என்பதற்கோ பார்க்கப்பட்டாலும் பதில் வரும் என்பதற்கோ எந்த உத்திரவாதமும் இல்லை.
உண்மையில் இந்த நிச்சயமற்ற தனமையே இதில் உள்ள சுவாரஸ்யம்.அந்த வகையில் இது ஒரு புதிர் கலந்த விளையாட்டு. இந்த பழக்கத்தின் ரிஷி மூலம் நதி மூலம் பற்றி தெரியவில்லை.இத்னை அடிப்படையாக கொண்டு அழகான படங்கள் வந்துள்ளன. கிட்டத்தட்ட 33 ஆன்டுகளுக்கு முன் ஆலிவர் வான்டேவல்லே என்னும் வாலிபருக்கு இங்கிலாந்தில் சுற்றுலா சென்றிருந்த போது திடிரென இப்படி பாட்டிலில் செய்தி அனுப்ப வேண்டும் என தோன்றியிருக்கிறது.
அப்போது அவருக்கு 14 வயது.படகில் சென்று கொண்டிருந்த அவர் அந்த நேரத்தின் உந்துதலில் ஒரு காகிதத்தை கிழித்து அதில் தன்னைப்பற்றியும் தான மேற்கொள்ளும் பயணத்தையும் குறிப்பிட்டு ஒரு செய்தி எழுதி
(இதுதான் அவர் எழுதிய தகவல்:
"I am 14 years old and my house is in Belgium. I do not know if you're a child, a woman or a man. I am on a sailing boat of 18 meters. Her name is Tamaris. While I am writing this letter we have just passed Portland Bill on the south coast of England. We left this morning." )
அதனை பாட்டிலில் அடைத்து தண்ணீரில் வீசிவிட்டார். யாராவது அதனை பார்த்து கடிதம் எழுதுகின்றனரா பார்க்கலாம் என்பது அவரது எண்ணம்.பதில் வந்தால் பயணத்தின் நினைவுச்சின்னமாக வைத்துக்கொள்ளலாம் என்று அவர் நினைத்திருக்கலாம்.வராவிட்டாலும் இந்த எதிர்பார்ப்பே ஒரு சுவார்ஸ்யம் என நினைத்திருக்கலாம்.
எது எப்படியோ இந்த பாட்டில் கடலில் தண்ணீரில் மூழ்கியது 1977 ல்.அதன் பிறகு வாலிபர் ஆலிவர் இந்த சம்பவத்தை மறந்தே விட்டார்.
இப்படி ஒரு செய்தி அனுப்பயதை அவர் மீண்டும் நினைத்து பார்த்திருக்க கூட வாய்ப்பில்லை. ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண்மணி (Lorraine Yates) அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்பு கொண்டு பாட்டில் செய்தியை நினைவு படுத்திய போது அவர் வியந்தே போய்விட்டார். டோர்செட் நகரில் வசிக்கும் லாரனே யீட்ஸ் என்னும் பெண்மணி அந்த பாட்டிலை சமீபத்தில் கண்டெடுத்திருக்கிறார்.உடனே அதற்கு பதில் அளிக்க வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
அதில் இருந்த தபால் முகவரியை பெரிதாக எடுத்துக்கொள்ளத யீட்ஸ் ஆலிவரின் பெயரை இண்டெர்நெட்டில் தேடி அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தை கண்டுபிடித்து தொடர்பு கொண்டிருக்கிறார். முதலில் ஆலிவருக்கு எதுவுமே புரியவில்லை.தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என கூறிவிட்டார். பிறகு தான் 14 வயதில் தான் மேற்கொண்ட புதிரான முயற்சி நினைவுக்கு வந்தது. இப்போது இருவரும் ஃபேஸ்புக்கில் நண்பர்களாகிவிட்டனர்.
33 ஆண்டுகளுக்கு முன் எப்போதாவது கடிதம் மூலம் பதில் வந்தால் வரும் என கடலில் கலந்த செய்திக்கு இப்போது ஃபேஸ்புக் வாயிலாக பதில் வந்து இரண்டு பேர் வலை பின்னல் நண்பர்களாகி இருப்பதை என்னெவென்று சொல்வது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக