கடந்த வருடம் இறுதி யுத்தத்தின்போது குண்டுச்சத்தங்களும் அவலங்களும் ஓலங்களும் மட்டுமே நிறைந்திருந்த முல்லைத்தீவில் காயமடைந்தவர்களிற்கெல்லாம் ஓடியோடி கையிலிருந்த குறைந்த வளங்களை மட்டுமே வைத்துக்கொண்டு காயமடைந்தவர்களிற்கும்.
கைகால் இழந்தவர்களிற்கும் மருத்துவ முதலுதவி முயற்சிகளை மேற்கொண்டிருந்த சில சொற்ப வைத்தியர்களில் சதீஸ்கரனும் ஒருவர்.அவரின் ஒரு காலையும்(02.01.2009) எங்கிருந்தோ வந்த ஒரு ஏவுகணையென்று துண்டித்துப்போய்விட அவரும் அதே முல்லைத்தீவு வைத்திய சாலையின் படுக்கையில் வீழ்ந்தார்.
சிலமாதங்கள் சிகிச்சையின் பின்னர் ஒற்றைக்காலுடன் ஊன்றிய கோலுடனும் அவரது மருத்துவ சேவை அந்த மக்களிற்காக தொடர்ந்து கெண்டேயிருந்தது. இறுதியில் முல்லைத்தீவு மருத்துவ மனையும் குண்டுகளால் சிதைந்துபோக சிறிய கொட்டகைகள் மரநிழல்கள் எல்லாம் மருத்துவ மனைகளாக்கி இழந்துகொண்டிருந்த உயிர்களையும் முடிந்தவரை இழுத்துப்பிடித்து வைக்க முயற்சித்தார்கள்..இறுதியாய் 15.05.2099 வரை தன்னாலான சேவைகளை அந்த மக்களிற்காய் வழங்கியவர் பின்னர் அங்கிருந்து வெளியேறி அவரது ஒன்ரரை வயது சிறிய மகளுடன் குடும்பமாக திருகோணமலையில் வசித்துவரும் சதீஸ்கரன் தான் ஒரு சிறிய மருத்துவநிலையம்(கிளினிக்) ஒன்றினை நடத்தி தன்னுடைய குடும்பத்தினை காப்பாற்றுவதற்காக புலம்பெயர் உறவுகளே உங்களிடம் கை நீட்டுகிறார்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக