கடந்த 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மூன்று ஆயுததாரிகளால் கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடன் தமிழர் விடுதலை கூட்டணியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான வெற்றிவேலு யோகேஸ்வரனும் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் போது அமிர்தலிங்கத்திற்கு தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலராக இருந்த சிங்கள இனத்தவரான நிஸ்ஸங்க, இந்த தாக்குதலை மேற்கொண்ட 3 பேரையும் தமது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
இந்த சம்பவத்தின் பின்னர் இங்கிலாந்தில் குடியேறிய அமிர்தலிங்கத்தின் குடும்பத்தினர் தற்போது விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது கேகாலை, அம்பலப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள அமிர்தலிங்கத்தின் மெய்ப்பாதுகாவலரான டீ.ஏ.திஸ்ஸங்கவின் வீட்டுக்கு நன்றி பாராட்டும் நோக்கில் சென்றுள்ளனர்.
21 ஆண்டுகளின் பின்னர் குறித்த மெய்ப்பாதுகாவலரைச் சந்தித்த அமிர்தலிங்கம் குடும்பத்தினர் உணர்வு பூர்வமாக தமது நன்றியைத் தெவித்தனர்.
இதன்போது ஊடகவியலாளர்களைச் சந்தித்த மங்கையற்கரசி அமிர்தலிங்கம் கருத்துத் தெவிக்கையில், நாட்டில் அமைதி யான சூநிலையை ஏற்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முயற்சி பாராட்டுக்குரியது. மூன்று தசாப்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டில் சுதந்திரமானதொரு நடமாட்ட நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இருப்பினும் இனங்களுக்கிடையே சமாதானத்தை நிலைபெறச்செய்வதற்கு மேலும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்றார்.
மேலும் வயது முதிர்ந்து விட்டதால் அரசி யல் விவகாரங்களில் தமக்கு எவ்வித நாட்டமும் கிடையாது எனவும் அரசியலினால் தமது குடும்பம் பாரிய துயரங்களை அடைந்திருப்பதாகவும் தெவித்த அவர் தொடர்ந்து இலங்கையில் தங்கவிரும்புகின்ற போதிலும், தமது பிள்ளைகள் இங்கிலாந்தில் குடியேறி இருப்பதால் தம்மால் அது முடியாது எனவும் கூறினார்.
இதேவேளை ஊடகவியலாளர்களை சந்தித்த அமிர்தலிங்கத்தின் புதல்வரும் வைத்தியருமான பகீரதன் அமிர்தலிங்கம், இலங்கையில் அரசியலில் ஈடுபடும் எவ்வித நோக்கம் தமக்கு கிடையாது எனத்தெரிவித்தார்.






































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக