இத்தளத்திற்குள் சென்றவுடன் தளம் அமையும் விதம் பாராட்டத்தக்கது. இதில் உள்ள டங்கியிருக்கும் பிரிவுகளைப் பார்க்கலாம்.
Forum: இதில் இந்த தளத்தைக் காண வருபவர்கள் கூறும் கருத்துகளைப் படிக்கலாம். நீங்களும் உங்கள் கருத்தை எழுத வேண்டும் என எண்ணினால், உங்களைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். அதற்கு எந்த நிபந்தனையும் இல்லை என்பதால், இந்தத் தளத்திற்கு வரும் அனைவரும் இதில் தங்களைப் பதிவுசெய்து கொள்வார்கள்.
Blog: நாம் சில கருத்து களை ஒரு சதத்துக்குக்கூடப் பிரயோசனம் அற்றது என்று வேடிக்கையாகவும் (சில வேளைகளில் சீரியசாகவும்) கூறுவோம் அல்லவா? அது போலத்தான் இதுவும். இங்கு நீங்களும் உங்களைப் பதிந்து கொண்டு எழுதலாம். டிப்ஸ், ட்ரிக்ஸ் மற்றும் கொம்பியூட்டர், இன்டர்நெட் குறித்த தலைப்புகளில் தகவல்களைத் தரலாம்.
The Buzz : இந்தப் பிரிவில், நாம் ஆர்வம் கொண்டுள்ள பல தலைப்புகளில் அண்மைக் காலத்திய செய்திகளையும், தகவல்களையும் படிக்கலாம். விளையாட்டு, விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம் எனப் பல பிரிவுகளில் இங்கு தகவல்கள் கிடைக்கின்றன.
Lingo: இணையதளம் குறித்த “ஸ்லாங்' என்னும் வழக்குச் சொற்கள் மற்றும் சுருக்குச் சொற்களைக் காணலாம். மேலே உள்ள ஆங்கில எழுத்துக்கள் வரிசையில் உள்ள எழுத்து ஒன்றில் அழுத்தினால், அந்த எழுத்தில் தொடங்கும் சொற்கள் குறித்த விளக்கங்கள் கிடைக்கும்; அல்லது ஸ்குரோல் செய்து இதன் பக்கங்களைப் பார்க்கலாம்.




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக