திருமண வயதை எட்டாத சிறுமிகள் திருமணம் செய்து கொடுக்கப்படுவதைத் தடுக்கும் முகமாக இந்நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
சிறுமிகள் முதியவர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்படுவது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து திருமணத்திற்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்தப் போவதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
சிறுபராய திருமணங்களுக்கு எதிராக சவூதி அரேபியாவில் எந்தச் சட்டங்களும் இல்லை.
இந்நிலையில், சவூதியின் இப்புதிய அறிவிப்பை வரவேற்றுள்ள மனித உரிமைகள் குழு சிறுமிகள் பாதிக்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் தெளிவான விதிகள் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, திருமண வயதெல்லையை நிர்ணயிப்பது தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக நீதியமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரியில் 80 வயது நபரொருவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட 12 வயதுச் சிறுமியொருவர் விவாகரத்து கோரியிருந்த விவகாரமும் 2008 இல் 50 வயது நபருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் தாயார் அத்திருமணத்தை இரத்து செய்யக்கோரி வழக்குத் தொடர்ந்திருந்தமையும் அங்கு பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்தது.
ஆனால், சிறுபராய திருமணங்களை ஆதரிப்பவர்கள், இது சவூதி கலாசாரத்தின் ஒரு அங்கமென வாதிடுகின்றனர்.
எனினும்,சிறுபராய திருமணங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதென சவூதி அரேபிய அரசு உறுதியளித்துள்ளது.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக