கருத்து வேறுபாடு காரணமாக நானும் என் மனைவியும் பிரிந்து வாழ ஒருமனதாக முடிவு செய்துள்ளதால் விவாகரத்து வழங்குமாறு நடிகர் அரவிந்த்சாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய தளபதி, ரோஜா, ராஜிவ் மேனன் இயக்கிய மின்சார கனவு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் அரவிந்த்சாமி. இவருக்கும் சென்னையை சேர்ந்த காயத்ரிக்கும் 1994ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.
எனவே, நடிகர் அரவிந்த்சாமி நேற்று மாலையில் சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில், "இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். இருவரும் மனம் ஒத்து பிரிய இருப்பதால் எங்களுக்கு பரஸ்பர விவாகரத்து வழங்க வேண்டும்..." என்று கூறியுள்ளார்.
இந்த மனு வரும் டிசம்பர் 1ம் தேதி விசாரணைக்கு வருகிறது.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக