ஆர்ப்பாட்டம் செய்வதிலும் தமது உரிமைக்காக குரல்கொடுப்பதிலும் தவறில்லை என்றும் பொதுமக்கள் மீது குற்றம் சுமத்த முடியாதென்றும் அரசாங்கம் தெரிவித்திருந்தது. இவேளை, எந்தவொரு சர்வதேச விசாரணை குழுவுக்கோ அழுத்தங்களுக்கோ தாம் அடிபணியப் போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“நாட்டின் சுயாதீனத்தையும் இறையாண்மையையும் காட்டிக்கொடுக்கப் போவதில்லை. அந்த உரிமை எவருக்கும் கிடையாது. சர்வதேச விசாரணைக் குழுவினால் இலங்கைக்கு கலங்கம் ஏற்பட இடமளிக்க மாட்டோம்” எனவும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.
இந்நிலையில் இவ்வாறான செயற்பாடுகளுக்கும் கூற்றுகளுக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளுக்கு எதிராக செயற்படுவதானது நாட்டின் எதிர்கால நலனைப் பெரிதும் பாதிக்கும் எனவும் இதன் பின்விளைவுகள் மக்களைப் பாதிக்கும் நிலை ஏற்படும் எனவும் அக்கட்சி தெரிவித்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளை நோக்குவோமேயானால் மக்களின் நலன் அவர்களின் சுய அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காகவே தாம் நாட்டில் தங்கியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.அதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையை பகைத்துக்கொள்ளா வண்ணம் புதிய வியூகம் அமைக்கவேண்டிய கடமையும் அரசாங்கத்துக்கு உண்டு.களம் இவ்வாறு சூடுபிடித்திருக்க வெல்லப்போவது யார் என்பதை ஏனைய உலகநாடுகளும் அவதானித்துக்கொண்டே இருக்கின்றன.
-இராமானுஜம் நிர்ஷன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக