இந்த தளத்தின் மூலம் தேடுகையில், தேடுதலை மேற்கொள்ளும் கொம்பியூட்டருக்கும், கூகிள் சேர்ச் தளத்திற்கும் இடையேயான தேடல் விபரங்கள் மாற்றிச் சுருக்கப்பட்டு (encryption) அனுப்பப்படுகின்றன. இதனால் இன்டர்நெட் சேர்விஸ் தரும் நிறுவனங்கள் போல உள்ளவற்றிற்கு, இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாது.
குறிப்பாக பொது இடங்களில், அல்லது வேறு ஒரு நபரின் கணணியில் தேடுதலை மேற்கொள்பவர்கள் இந்த பாதுகாப்பான தேடல் முறை மூலம் (https://www. google.com) தேடல்களை மேற்கொள்ளலாம். இதன் மூலம் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது.
வழக்கமான தளத்திற்கும், இந்த பாதுகாப்பான தளத்திற்கும் ஒரு எழுத்துதான் வேறுபாடு. http யுடன் ஒரு s இணைக்கவேண்டும். அல்லது இதற்கான யூசர் ஸ்கிரிப்டை டவுன்லோட் செய்து பயன்படுத்தவேண்டும். அதனை டவுன்லோட் செய்ய பின் வரும் லிங்கிற்கு செல்லவும். http://userscripts.org/scripts/show/5951

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக