பெற்றோர் மனம் நொந்துகொள்ளும் அளவுக்கு விதவிதமான பயங்களோடு இந்தக் குழந்தைகள் அல்லாடுவதற்கு என்ன காரணம்? குழந்தைகள் நல நிபுணரும் வளர் இளம் பருவ சிறப்பு மருத்துவருமான டாக்டர் யனா அக்கறையுடன் கூறிய தகவல்கள் இவை: “குழந்தைகள் பிறந்த 2, 3 மாதங் களிலேயே அம்மாவின் நடவடிக்கைகளையும் சுற்றுப்புற அசைவுகளையும் கவனிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவற்றை அப்படியே பிரதிபலிக்கவும் செய்வார்கள்.
ஆறேழு மாதங்கள் ஆன நிலையில், குழந்தையை இரவில் உறங்க வைப்பதற்குப் பெற்றோர் பெரிய போராட்டமே நடத்த வேண்டி யிருக்கும். ஓரளவுக்கு மேல் கண்விழிக்க முடியாத பெற்றோர் கடைசியில் கையில் எடுக்கும் ஆயுதம், குழந்தைகளைப் பயறுத்துவது தான். “பூச்சாண்டி வந்து உன்னைத் தூக்கிட்டுப் போயிடுவான்!“ என்று டென்ஷனை உருவாக்குவார்கள். இதற்கெல்லாம் மசியாமல், “நானாவது, தூங்குறதாவது?“ என்று கேட்பது போல குழந்தை நக்கலாகச் சிரிக்கும். ஆனால், அப்போது பயறுத்தும் வார்த்தைகளால் குழந்தையின் மனசில் பயம் தூண்டிவிடப்படுகிறது என்பதுதான் உண்மை.
எட்டாவது மாதத்தில் குழந்தை குப்புற விழுந்து நகரத்தொடங்கும். அதன் பார்வையில் இருளென்றும் வெளிச்சமென்றும் பேதம் கிடையாது. தரையில் கிடக்கும் எந்தப் பொருளையும் தயங்காமல் வாயில் வைத்து ருசி பார்க்கும். பெற்றோரால் தொடர்ந்து குழந்தையைக் கண்காணிக்க முடியாது. அதனால் குழந்தையின் நகர்வைக் கட்டுப்படுத்தவே முயல்வார்கள். “அங்கே இருட்டு. போகாதே.
உள்ளே பூதம் இருக்கு!“ என கட்டுக்கதைகளைச் சொல்லி, குழந்தையை ஒரே இடத்தில் இருக்கச் செய்ய முயற்சி நடக்கும். இதோ, குழந்தைக்கு இன்னும் கொஞ்சம் பயம் ஏற்றியாச்சு!
சோறு ஊட்டும் பருவத்திலும் குழந்தையைப் பயங்கள் தொடர்கின்றன. சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையிடம் பலதையும் காட்டி பயறுமுத்தாத பெற்றோர் இல்லை.
யு.கே.ஜி. படிக்கும் குழந்தை சேட்டை செய்தால், அதைக் கட்டுப்படுத்த ஸ்கூல் டீச்சரின் பேரை மந்திரம் போல உச்சரிக்கும் பெற்றோர் இருக்கிறார்கள். குழந்தை விளையாடக் கிளம்பினால், “கீழே விழுந்துரப் போறே!“, “தலையில அடிபட்டிடும்!“ “எப்ப பார்த்தாலும் விளையாட்டுதானா?“ என்று எதிர்மறையான பேச்சுகளால் குழப்புவதும் நடக்கும்.
பஸ் பயணங்களின்போது ஆர்ப்பரிக்கும் குழந்தையைக் கட்டுக்குள் வைப்பதற்கும் பெற்றோர் நாடுவது, சின்னச் சின்ன பொய்களையும் பயங்களையும்தான். ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும் அலுப்புத் தாங்காமல் குழந்தை அழும்போது, “அழுதால் பஸ்ஸிலிருந்து இறக்கி விட்டுருவாங்க!“ என்று சொல்வது தவறான அணுகுறை. கவனத்தைத் திசை திருப்புவதுபோல பொருட்களைக் கொடுத்தும் அழகான கதைகள் சொல்லியும் அந்த இடத்தில் சாத்தியமான விளையாட்டுகளில் ஈடுபட்டும் குழந்தைகளைச் சமாதானப் படுத்துவதுதான் சரி. எனினும் பொறுமையும் கற்பனைத் திறனும் தேவைப்படுகிற இந்த வேலைகளுக்கு ஏறக்குறைய அரைமணி நேரத்துக்கு மேல் ஆகும்.
ஆனால் பயமுறுத்தி அடக்குவதற்கு ஓரு நிமிஷங்கள் போதும். அதனால்தான் பெரும் பாலான பெற்றோர், பயமுறுத்தும் டெக்னிக்கைப் பின்பற்றுகிறார்கள்.
பல குழந்தைகளுக்குப் படிப்பும் பரீட்சையும் அச்சமூட்டும் விஷயங்கள் ஆனதற்குக் கூட இந்த டெக்னிக்தான் காரணம். பரீட்சையில் எழுதத் தேவையான அளவுக்குப் படித்து விட்டதாக ஒரு யு.கே.ஜி. பையன் சொல்லும் போது, பெற்றோர்கள் அதை நம்புவதே இல்லை. அவன் அவர்களுக்கு முன்னால் கர்ம சிரத்தையுடன் படித்துக் காட்ட வேண்டும்.
பரீட்சைக்குப் புறப்படுவதற்கு முன்னால், இரண்டு மூன்று முறை அதை மனப்பாடமாக ஒப்பிக்க வேண்டும். இதற்கெல்லாம் பிறகு தான் பெற்றோருக்கு நம்பிக்கை வரும். இங்கே பையனின் நம்பிக் கைக்கு இடம் கிடையாது. இந்த அணுகுறையால் குழந்தையின் சுய மதிப்பீட்டுத் திறன் குறைந்து விடுகிறது.
மழலைப் பருவத்தில் குழந்தைக்குள் ஊடுருவும் பயம், அவன் வளர்ந்த பிறகு பல விஷயங்களைத் தவறான திசையில் தீர் மானிக்கிறது என்பது அறிவியல் பூர்வமான உண்மை.
பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே குறைந்தபட்சம் 25 வருட வித்தியாசம் இருக்கிறது. பெற்றோர் தங்கள் காலத்துக்குப் பிறகு வாழ்வின் நெருக்கடிகளைத் தைரியமாக எதிர் கொள்ளும்படி தயார்படுத்துவதுதான் சரியான வளர்ப்பு முறை.“ இருட்டைக் காட்டி பயமுறுத்தக்கூடாது.
இருட்டான அறையை வெளிச்சமாக்கிக் கற்றுக் கொடுப்போம்.
மரணம் குழந்தைகளுக்குப் பெரும் புதிர்.
மரண ஊர்வலம் அவர்களுக்குப் பீதியைக் கிளப்பும் சம்பவம். இவற்றை முடிந்தவரை அறிவியல் பூர்வமாகப் பேசிப் புரிய வையுங்கள். இயற்கையைக் குழந்தைகள் ரசிப்பதில் பயம் ஒரு தடையாக இருக்க வேண்டாம். எதிர்மறையான அறிவுரை தவறான அணுகு முறை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக