Jack Roush 68
அமெரிக்க மோட்டார் பந்தய குழுவின் தலைவர் ஜக் ரோஷ்ஷை (Jack Roush 68) ஏற்றி வந்த தனியார் ஜெட் விமானமானது அமெரிக்க கலிபோர்னியாவிலுள்ள சிறிய விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது.விபத்துக்குள்ளான விமானம், ஜக்ரோஷ்ஷை புகைப் படமெடுப்பதற்காக குழுமியிருந்த புகைப்படக்கலைஞர்களை நோக்கி வேகமாக நகர்ந்து வந்தது .
இந்நிலையில் புகைப்படக்கலைஞர்கள் தமது உயிரைக்காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறியோடினர்.
ஆனால் பிரையன் பிளானகன் என்ற புகைப் படக்கலைஞர் உயிராபத்தான சூழ் நிலையிலும் தனக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடவில்லை.
அவர் மேற்படி விபரீத்தை படுவேமாக படம் பிடித்து விட்டு தனது ஒட்டத்தைத் தொடர்ந்தார்.
இந்த விபத்தில் அவருக்கு எதுவித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .இவ்விமானத்தில் பயணம் செய்த ஜக் ரோஷூ்கு முகத்தில் ஏற்பட்ட பாரிய காயத்திற்காக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக