Found dead: Theresa Riggi's children Luca, Austin and Cecilia
விவாககரத்து கோரிய கணவருடன் பிள்ளைகளின் பராமரிப்பு குறித்து கடும் போராட்டத்தை எதிர்கொண்ட பெண்ணொருவர், தனது மூன்று பிள்ளைகளையும் படுகொலை செய்துவிட்டு இரண்டாவது மாடியிலுள்ள தனது வீட்டிலிருந்து குதித்த விபரீத சம்பவம் புதன்கிழமை பித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.Investigation: Theresa Riggi, pictured with her children Luca, Cecilia and Austin, is to be quizzed by police after the children were found dead at their home
தெரேஸா றிக்கி (Theresa Riggi 46 வயது) என்ற பெண்ணே தனது மகன்களான ஜியான்லூகா மற்றும் அவ்குஸ்ஸ்டினோ மகளான சிசிலியா ஆகியோரை கத்தியால் குத்தி படுகொலை செய் துவிட்டு தானும் மாடியிலிருந்து குதித்துள்ளார்.இரட்டையர்களான ஜியான்லூகாவும் (Gianluca) அவ்குஸ்ஸ்டினோவும் (Augustino) 8 வயதுடையவர்களாவர். சிசிலியாவுக்கு (Cecilia) 5 வயதாகும்.
எடின்பேர்க்கில் ஸ்டேட்போர் வீதியில் 16 ஆம் இலக்க முகவயில் அமைந்துள்ள மேற்படி பெண்ணின் வீட்டில் சிறிய தீ ஏற்பட்டதை அவதானித்த அயலவர்கள், எரி வாயு வெடிப்பாக இருக்கும் என்ற சந்தேகத்தில் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு பொலிஸார் வந்ததையடுத்தே நடந்த சம்பவம் அம்பலத்துக்கு வந்தது.
றிக்கி, பிள்ளைகளின் பராமரிப்பு தொடர்பில் தனது கணவர் பஸ்குலேயுடன் ஏற்பட்ட சட்டப் போராட்டத்தையடுத்து அபெர்டீன் நகரில் ஸ்கொன் எனும் இடத்தி லுள்ள தனது வீட்டிலிருந்து கடந்த ஜூலை 11 ஆம் திகதி வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவரது கணவர் றிக்கியையும் பிள்ளைகளையும் காணவில்லை என பொ லிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து றிக்கி நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்க துறைகங்களும் விமான நிலையங்களும் உஷார் நிலைப்படுத்தப்பட்டன.
கடந்த ஜூலை 21 ஆம் திகதி எடின்பேர்க்கிலுள்ள நண்பியொருவரின் வீட்டிற்கு வந்த றிக்கி தனது பெயரை திருமதி. பல்மோர் என இனங்காட்டிக் கொண்டார். இந்நிலையில் நீதி மன்றமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை றிக்கியை கைது செய்ய பிடியாணை பிறப்பித்திருந்தது.
கணவரைப் பழி வாங்குவதற்காகவே பிள்ளைகளை றிக்கி படுகொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மாடியிலிருந்து குதித்து படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் றிக்கியிடம் விசாரணைகளை மேற் கொள்ள, அவர் சுய உணர்வு பெறும் வரை காத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி மாடிக் குடியிருப்பில் எரிவாயு வெடிப்பு எதுவும் இடம்பெறவில்லை எனக் கூறும் பொலிஸார், அங்கு எவ்வாறு தீ ஏற்பட்டது என்பது குறித்து விபரம் எதனையும் வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக