தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவினால் உருவாக்கப்பட்ட க்ளோபல் ஸ்டேட்ஸ்மன் அமைப்பு இவ்வாறு இலங்கை அரசாங்கம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் சிவில் யுத்தம் நிறைவடைந்து ஒரு வருட காலம் பூர்த்தியாகியுள்ள போதிலும் சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் உரிய முனைப்பு காட்டத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் தலைவர் கொபி அனான், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டார் மற்றும் தென் ஆபிரிக்க பேராயர் டெஸ்ட்மன் டுட்டு உள்ளிட்ட பலர் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
8000 புலி சந்தேக நபர்கள் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருப்பதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
யுத்தத்திற்கு காரணமாக சிறுபான்மை மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இதுவரையில் தீர்வுத் திட்டங்களை முன்வைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் நடவடிக்கைகள் குறித்து சில முக்கிய நாடுகள் மௌனம் சாதித்து வருகின்றமை அதிருப்தி அளிப்பதாக ஐக்கிய நாடுகளின் முன்னாள் பொதுச் செயலாளர் கொபி அனான் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியன இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்பில் காத்திரமான பங்களிப்பினை வழங்கத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை எனவும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்மட் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக