அரசாங்கத்துடனோ அல்லது புலனாய்வுப் பிரிவினருடனோ இணைந்து செயற்படுவதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை தாம் ஒருபோதும் சந்திக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக இன்னல்களை எதிர்நோக்கி வரும் அப்பாவி வன்னி மக்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் முடிந்தளவு உதவிகளை வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மீள் குடியேற்றப்பட்ட சில கிராமங்களில் போதியளவு வசதிகள் கிடையாது எனவும், மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான பிரதேசங்களுக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் கூடுதல் ஆதரவினை வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக